Tuesday, 7 July 2015

தீட்டு தோஷம்:



பெற்ற தாய், தந்தை இறந்தால் ஒருவருக்கு ஒரு வருடம் வரை தீட்டு உண்டு. மனைவி இறந்தால் 3 மாதமும், சகோதரர் இறந்தால் ஒன்றரை மாதமும், தாயாதிகள் இறந்தால் ஒரு மாதமும் தீட்டு உண்டு.

தாய் தந்தை இறந்துவிட்டால் ஒரு வருடம் கடல்,மலை உள்ள பெரிய சிவன் கோவிலுக்கோ, பெருமாள் கோவிலுக்கோ செல்லக் கூடாது. நேர்த்திக்கடன் செலுத்த கூடாது. சுபகாரியம் கூடாது.

மாப்பிள்ளை இறந்தால் மாமனார், மாமியார், மைத்துனருக்கு தீட்டில்லை. குளித்துவிட்டால் போதும். தற்கொலை செய்து கொண்டு இறப்பவர்க்கு தீட்டு தர்ப்பனம் தேவையில்லை.ஆனால் திலஹோமம் வளர்த்து சாந்தி பரிகாரம் செய்ய வேண்டும்.

கருத்தரித்த குழந்தை கலைந்தால் அந்த கரு எத்தனை மாதமோ அத்தனை நாட்கள் தீட்டு. தீட்டு காலத்தில் பூமியில் படுக்க வேண்டும். கட்டிலில் படுக்க கூடாது.

No comments:

Post a Comment