Wednesday, 8 July 2015

தனுசு ராசி நண்பர்களே:




     இது வரை 8- ல் இருந்த குரு இப்பொழது 9 ம் இடத்திற்கு மாற இருக்கிறார்.உங்கள் ராசி நாதனே உங்கள் ராசியை பார்க்கிறார். அது மிகவும் நல்லது தான். அகப்பட்டவனுக்கு அஷ்டமத்து சனி, ஓடி போனவனுக்கு ஓன்பாதம் இடத்தில் குரு என்பார்கள்.

     ஏற்கனவே 8 ல் இருந்த குரு இருந்த காலம் ராசிநாதனே மறைந்ததால் சிலருக்கு விபத்து வைத்திய செலவு,வேலையில் பிரச்சனை, ஓய்வு ஓழிச்சல் இல்லாத உழைப்பு, உழைத்தும் பெருமையில்லை, எதிர்பார்த்த காரியங்கள் கை கூடாமை,போன்றவற்றை தந்து ஏமாற்றங்களை தந்தது.

9 ல் இடத்து குரு கஷ்டங்களை போக்குவார்.கண்ணிரை துடைப்பார் ஆறுதலை தருவார். குருவருளும் திருவருளும் வழி நடத்தும். கும்பிடபோன தெய்வம் எதிரே வந்து உதவி செய்யும்.

5 ம் பார்வையாக ராசியை பார்க்க போவாதல் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். உங்களுக்கு முன்னேற்றமும், வளர்ச்சியும், யோகமும் வந்து சேரும்.

7- ம் பார்வையாக, 3-ம் இடத்தை பார்க்க போவாதல் தைரியமாக எல்லா காரியங்களிலும் இறங்கி வெற்றி பெறலாம். கண்டபடி கை நீட்டிய இடமெல்லாம் கடனை வாங்கி அசலும் அடைக்க முடியாமல் வட்டியும் கட்ட முடியாமல் தலை குனிந்தவர்கள் எல்லாம் இனி தலை நிமிர்ந்து நடக்கலாம் .தைரியத்தையும், தன்னம்பிக்கை தந்து வளமான வாழ்வு உண்டு.

9- ம் பார்வையாக, 5-ம் மிடத்தை பார்க்க போவாதல் உங்கள் கஷ்ட நிலைகள் மாறும் பொருளாதார நெருக்கடி நீங்கும். உழைப்புக்கு ஏற்ற வருமானம் வரும். உங்களை அலட்சிய படுத்தியவர்கள் எல்லாம் வலிய வந்து நலம் விசாரிப்பார்கள்.

தங்கள் சுயகாரியத்திற்காக உங்களை நாடி வருவார்கள்.
இனிமேல் வசதியும், யோகமும், அதிர்ஷ்டமும் உங்களை தேடி வரும் பொது பசையுள்ளவர்கள் தானக தேடி வருவது இயற்கைதானே..
ஏழரை சனி நடப்பாதல் இருக்கிற வேலையை காப்பாற்றி கொள்ளுங்கள், புதிய முயற்சிகளை தள்ளி போடுங்கள். கூட்டு தொழிலில் கவனமாக இருங்கள்.

உங்களுடைய முயற்சிகள் எல்லாம் லேட்டாதான் நடக்கும். ஆனால் லேட்டஷ்டாக நடக்கும் கவலை பட வேண்டாம்.அருகில் உள்ள சிவன் கோவிலில் உள்ள நவக்கிரகத்தில் உள்ள குருவை வியாழக்கிழமை தோறும் வழிபாடு செய்வது நல்லது.

நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துகள்.

No comments:

Post a Comment