Tuesday, 7 July 2015

திருக்கோவில்களில் எவ்விதம் வழிபாடு செய்வது:



         திருக்கோயிலில் கொடிமரம், பலிபீடம் இவற்றின் முன்புதான் கீழே விழந்து வணங்க வேண்டும். இந்த கொடி மரத்தையும் பலிபீடத்தையும் தாண்டிவிட்டால் உள் பிரகாரத்திலும் கருவறையின் முன்னும் மற்ற இடங்களில் கீழே விழுந்து வணங்க கூடாது.
ஏனெனில் கொடிமரம் தாண்டிய பின்பு கருவறை வரையிலும் சக்தி நிறைந்த பல தேவதைகள் மந்திரப் பிரதிஷ்டை செய்யபட்டுள்ளன.
அவ்விடம் நாம் கிழே விழுந்து வணங்கினால் அந்த தேவதைகளின் மீது நமது கால் படக்கூடும்.
திருக்கோயில்களில் அபிஷேகம் அல்லது திருமஞ்சள் தீர்த்தம் வாங்கி கொள்ளும் போது இடது கையின் மேல் சிறு வஸ்திரம் வைத்து அதன் மேல் வலது கை உள்ளங்கையைக் குவித்து வைத்து கொண்டு அந்த தீர்த்தத்தை வாங்கி கொள்ள வேண்டும். இதற்கு காரணம் அபிஷேகத்தால் புனித சக்தி வாய்ந்த அந்த ஜலம் கிழே விழந்து பக்தர்களின் கால்களால் மிதிபடக்கூடாது என்பதே.

வ. லதிருக்கோயிலினுள் செல்லும் போது கைலி மற்றும் கால் சட்டை ஆகியவற்றை அணிந்து கொள்ள கூடாது. எக்காரணத்தைக் கொண்டும் ஈரத்துணியுடன் திருக்ககோயிலில் சென்று வழிபடக்கூடாது.

திருப்பதி திருமலை திருக்கோயிலினுள் அங்க பிரதட்சிணம் செய்பவர்களுக்கு மட்டும் இவ்விதமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. திருக்கோயிலில் இறைவனைத் தவிர வேறு யாரக இருந்தாலும் வணங்க கூடாது.

திருக்கோவிலில் ஆத்யப் பிரதட்சனம் தன்னைத் தானே சுற்றி கொள்வது கூடாது.
பிரசாதமாக கொடுக்கும் குங்குமம், விபூதி, துளசி, வில்வம் ஆகியவற்றை பலர் திருக்கோவிலிலே போட்டு விட்டு வந்து விடுகின்றனர் இது மிகவும் தவறாகும்.

No comments:

Post a Comment