Wednesday, 8 July 2015

கும்பராசி நண்பர்களுக்கு:


இது வரை 6 மிடத்தில் இருந்த குரு பகவான் 7-ம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளார். இது குருவுக்கு மிகவும் நல்ல இடம். உங்கள் ராசிக்கு 2-க்கும்
11-க்கும் உடைய குரு உங்கள் ராசியை பார்ப்பது புகழ் அந்தஸ்து, கௌரவம், தொழில், நண்பர்கள் வகையில் அனுகூலம். ஆதாயத்தையும் தரும்
இதுவரை 6-ல் குரு உச்சமாக இருந்ததால் கடன், போட்டி, பொறாமை, எதிரி, நோய், வைத்திய செலவு, வழக்கு, என்று உங்களை தாக்கியது.
உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என்ற நிலையிலே 1-வருஷம் ஓடி விட்டது.
இனி அந்த நிலைகள் மாறி எல்லா விசயங்களும் சாதகமாகும்.
2-க்குடையவர் என்பதால் செல்வாக்கும்,
சொல் வாக்கும், மதிப்பு மரியாதை உயரும்.
கல்யாண வயதில் உள்ள ஆண், பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும். கூடி வரும் தருவாயில் நின்று போன திருமணங்கள் இனி சுபமாக நடைபெறும். அஷ்டமத்து சனியால் திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும்.11-ம் பாவத்தை குரு பார்ப்பதன் பலன் அது.
எதுவும் சில காலம் தான் என்று வாழ்க்கையை ஓட்டியவர்களுக்கு எல்லாம் இனி எல்லாமும் சாத்தியம் தான் என்ற நம்பிக்கையை இந்த குரு பெயர்ச்சி கொடுக்கும். நல்லதே நடக்கும் நம்புங்கள்.
10-பாவத்தில் சனி சஞ்சரிப்பாதல் அருகில் உள்ள ஆஞ்சிநேயர் கோவிலுக்கு சென்று சனிக்கிழமை தோறும் நெய் தீபம் ஏற்றுங்கள்.

No comments:

Post a Comment