Wednesday, 8 July 2015

வெற்றி படிக்கட்டுகள்:



நம்பிக்கை என்பது மனிதனின் சாதனம். அதை நடத்தி காட்டுவது ஜாதகம் என்பது கண்ணதாசன் அவர்களின் பொன்வரிகள்.

ஜாதகப்படியே வாழ்க்கையில் எல்லா அமையும் என்பது அவரவர் கர்மாவை பொருத்தது.
வாழ்க்கையில் நடப்பது நடக்க இருப்பது என்பது எல்லாம் பிரம்மாவால் பதிவு செய்யபட்டது தான் ஜாதகம்.

உயிரை கொடுக்கும் பிரம்மதேவன் உயிரை எடுக்கும் வரை நாம் வாழ்ந்து தான் ஆக வேண்டும். இடையில் நாம் தேடி கொள்ளும் முடிவுக்கு எல்லாம் கடவுள் பொறுப்பு அல்ல.

1. வாழ்க்கையில் வெற்றிக்கு வலிமையான அவசியமான குறிக்கோள்தான் அடித்தளம்.

2. வாழ்வின் வெற்றியும், தோல்வியும் நம் கையில் தான் அடங்கியுள்ளது. வாழ்வை சுவையாகவும், சுமையாகவும் மாற்றுவது நம் கையில் தான் உள்ளது.

3. தன்னம்பிக்கை உடையோர் மகிழ்ச்சியும், வெற்றியும் அடைகிறார்கள்.

4. ஆழமான நம்பிக்கை ஆலமரத்தை விட வலுவானது.

5. எந்த பணியையும் ஓரு சவாலாக ஏற்று திறம்படச் செய்யுங்கள். வெற்றி நிச்சயம்.

6. ஆயுதங்களையும், உடல் வலிமையையும் விட அறிவுக் கூர்மையே வெற்றிக்கு வழி காட்டும்.

7. தடையைக் கண்டு தயங்காமல், புலம்பாமல் தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.

8. கடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைப்பதே வெற்றிக்கு வழிகாட்டும்.

9. ஒன்றை அடைய கனவு காண்போம். கனவு நினைவாக திட்டமிடுவோம். வெற்றி பெறுவோம்.

10. குறிப்பிட்ட பணியில் மட்டும் திட்டமிட்டு அப்பணிக்கு தேவையான நேரத்தையும், உழைப்பையும் ஓதுக்கினால் வெற்றி நிச்சயம்.

11. சிறு சிறு தோல்விகள் உண்மையில் அனுபவங்கள் தான். அவற்றை வெற்றி படிக்கட்டுகளாக அமைத்து கொண்டு படிப்படியாக முன்னேறுவோம்.

ஜாதக கட்டத்தில் சுற்றிவரும் கிரகங்களை போல் நீங்கள் ஜாதகத்தை கையில் வைத்து கொண்டு சுற்றாதீர்கள். எல்லாமும் ஒரு காலம் உங்கள் கையில் வரும். அந்த காலம் பொற்காலம் தான்.
வருவது வாழ்வாகவே இருக்கட்டும்.

No comments:

Post a Comment