Wednesday, 8 July 2015

மகரராசி நண்பர்களே:


கடந்த ஒரு வருடமாக 7-மிடத்தில் இருந்து பாடாதபாடு படுத்திய குரு பகவான் இப்பொழுது 8-மிடமான விபத்து, கண்டம், அபகீர்த்தி, அவமானம், கௌரவப் போராட்டம், விரக்தி, சஞ்சலம் என்ற இடத்தில் சஞ்சரிக்க உள்ளார்.
7-மிடத்தில் குரு வந்த பொழுது பெரும் மாற்றங்களை எதிர்பார்த்து ஏமாற்றங்களை சந்தித்தவர்கள் தான் அதிகம்.100-பேரில் 5-பேர் கூட யோக பலன்களை அனுபவிக்க வில்லை.
உங்கள் ராசிக்கு 3-க்கும் 12-க்கும் உரியவரான குரு பகவான் எப்பொழுதும் 2,5,7,9,11, ல் வரும் பொழுது யோகத்தை செய்ய மாட்டார். 3,6,8,12, ல் வரும் பொழது தான் முழுமையான யோகத்தை செய்வார்.
8-ல் வரும் குரு தன்னுடைய 5-ம் பார்வையாக 12-ம் இடத்தை பார்க்க போவாதல் வெளிநாடு சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்பு, பொருள் வரவு, நிம்மதியான தூக்கம், சுபகாரியங்கள் போன்ற நல்ல சம்பவங்கள் நடைபெறும்.
தன ஸ்தானமான 2-ம் பாவத்தை குரு பார்ப்பதால் இதுவரை கொடுத்ததை வாங்க முடியவில்லை. வாங்கியதை கொடுக்க முடிய வில்லை என்ற நிலை மாறி வாக்கு நாணயத்தை காப்பாற்றி விடலாம். எதிர்பாரத பணம், காசு, கையில் புரளும். தேடி வந்து உதவி செய்வார்கள். பணம் இருந்தாலே நிம்மதியும் மக்களும் நண்பர்களும் கூடி விடுவார்கள் அல்லவா. அதனால் எதையும் நீங்கள் தேடி போக வேண்டாம். எல்லாம் உங்களை தேடி வரும்.
குருவின் பார்வை 4-ம் இடமான பூமி, வீடு, வாகனம், சுகம், கல்வி, ஆகிய காரகத்துவம் உள்ள இடத்தை பார்ப்பதால் இடம், புது வீடு குடி போகுதல் வாகன மாற்றம் போன்ற சுப செலவுகள் ஏற்படும். இதுவரை இனம் புரியாத நோய்க்கு வைத்தியம் பார்த்தவர்களுக்கு எல்லாம் உடல் நிலை சிராகும். தோற்ற பொழிவு உண்டாகும்.
இந்த குரு பெயர்ச்சியால் நீங்கள் பட்டத்தை இழக்க போவதும் இல்லை. பதவியையும் இழக்க போவதும் இல்லை. கௌரவ அந்தஸ்து உயரும்.
ஆடி மாதத்திற்கு மேல் ராசி நாதன் சனி பகவான் ராசியை பார்க்கப் போவாதல் 8-ம் இடத்து குருவால் பாதகமில்லை கவலை பட வேண்டாம். பொதுவாக ராசியதிபதி, லக்னாதிபதி ராசி, மற்றும் லக்னத்தை பார்த்தால் கோசார கிரகங்களால் எந்த பாதிப்பும் வராது என்பது சந்திராகாவியம் என்ற ஜோதிட நூலின் விதி.
வருவது தானாக வரும். வருவது மட்டுமே வரும்.
ஒரு முறை ஆலங்குடி குரு பகவானை தரிசனம் செய்வது நல்லது.

No comments:

Post a Comment