Tuesday, 7 July 2015

ஞானத்தின் சின்னம் வேல்:



         வேல் என்பது அறிவின் சின்னம். அறிவு அகலமாக ஆழமாக கூர்மையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதே வேல். முருகனின் ஆயுதம் அல்ல ஆபரணம். தீய சக்தியின் வடிவான சூரன் மரமாகி நிற்கும் போது வேல் மரத்தை இரண்டாக பிளந்து ஒன்று மயிலாகவும் மற்றொன்று சேவலாகவும் மாறி முருகனுக்கு தொண்டு செய்கின்றன. முருகன் சூரனை அழிக்கவில்லை. சுவீகாரம் செய்து கொள்கிறான். தீமை செய்தவனுக்கும் நன்மை செய்து அருள் பொழிவதே வேல். நம்மிடையே இருக்கும் தீய சக்திகளை நமது ஞானம் அறிவின் மூலம் அழித்துக் கொண்டு நல்வழிகான வேண்டும் என்பதே வேல் காட்டும் தத்துவம்.
நாம் வாழ்நாள் முழுதும் செழிப்பு, செல்வாக்கு, வாக்கு பலிதம் உண்டாக வெள்ளி வேல் வாங்கி ஆறுபடை வீடுகளில் வைத்து அர்ச்சனை செய்து கொண்டு விபூதி அபிஷேகம் தினமும் செய்து வந்தால் சகல வித கஷ்டங்கள் தீரும்.

No comments:

Post a Comment