Tuesday, 7 July 2015

கனவுகளின் பலன்கள்:



இரவில் 1 - ம் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்திலும்
2 - ம் ஜாமத்தில் கண்ட கனவு மூன்று மாதத்திலும்
3 - ம் ஜாமத்தில் கண்ட கணவு 10 
தினத்திலும்
விடியற்காலையில் கண்ட கனவு உடனே பலிதமாகும்.
நல்ல கனவு கண்டால் மறுபடியும் தூங்கக் கூடாது.
கெட்ட கனவு கண்டால் குலதெய்வத்தை தியானித்துப் பிறகு தூங்க வேண்டும்.
பசு, எருது, யானை, தேவாலயங்கள், அரண்மணை, மலை உச்சி, விருட்சம், மாமிசம், தயிர், வெள்ளை வஸ்திரம் அணிதல், நவரத்தினம், சந்தனம் பூசிக் கொள்ளல், வெற்றிலை, பாக்கு தரித்தல், கற்பூரம், அகல் விளக்கு, வெள்ளை புஷ்பம், இவைகளை கண்டால் அதிர்ஷ்டம் வரும்.
பாம்பு கடித்தல், ஆற்றை தாண்டுதல்,தேள் கடித்தல், நெருப்பில் அகப்படுதல், இவைகளைக் கண்டால் தன லாபமுண்டு.

No comments:

Post a Comment