Wednesday, 8 July 2015

மாமாங்க வருஷம்:

 

12-ஆண்டுகளுக்கு ஒரு முறை சிம்ம ராசியில் குரு வரும் காலம் மாமாங்க வருஷம் என்று பெயர்.
சிம்மத்தில் மக நட்சத்திரத்தில் சந்திரனும், கும்பத்தில் சூரியன் உலவி வரும் பொழுது வரும் பௌர்ணமி அன்று மகாமகம் வரும்.
மாமாங்க வருஷத்தில், திருமணம், சுபகாரியங்கள் செய்ய கூடாது தவறான கருத்து நிலவுகிறது. மதுரையில் சித்திரை மாதத்தில் அழகர் ஆற்றில் இறங்குவதால் அந்த மாதத்தில் சுற்றி இருப்போர்கள் எல்லாம் திருவிழா கொண்டாடும் ஆர்வத்தில் இருப்பாதல் அந்த மாதத்தில் திருமணம், காதணி, கிரகப் பிரவேஷம் போன்ற சுப காரியங்களை செய்ய மாட்டார்கள்.
கும்பகோணத்தில் மாசி மாதத்தில் மாசி மகம் வருவதால் அந்த மாதத்தில் எந்த சுப காரியங்களும் வைக்க மாட்டார்கள். அதனால் மாமாங்க வருஷத்தில் எல்லா சுபகாரியமும் செய்யலாம்.
இதற்கு என்று சாஸ்திரத்தில் எந்த விளக்கமும் கொடுக்கபட வில்லை.

No comments:

Post a Comment