Tuesday, 7 July 2015

தனிச்சிறப்பு பூஜைகள்:

தமிழகம் எங்கும் ஏராளமான கோவில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு பெருமை உண்டு. குறிப்பாக சில ஆலயங்களில் சில பூஜைகளைப் பார்த்து வழிபட்டால் சிறப்பான பலன்கள் வந்து சேரும்.
1. திருக்குற்றாலம் செல்பவர்கள் திருவனந்தால் பூஜை பார்க்க வேண்டும்.
2. இராமேஸ்வரம் செல்பவர்கள் காலை 5 மணிக்கு ஸ்படிக லிங்க பூஜை பார்க்க வேண்டும்.
3. திருவானைக்காவல் செல்பவர்கள் மத்தியான பூஜை காண வேண்டும்.
4. திருவாரூர் செல்பவர்கள் சாயங்கால பூஜை பார்க்க வேண்டும்.
5. மதுரை செல்பவர்கள் இராக்கால பூஜை பார்க்க வேண்டும்.
6.சிதம்பரம் செல்பவர்கள் அர்த்தஜாம பூஜை பார்க்க வேண்டும்.
இவ்வாறு இறையருள் சித்திக்கும் ஆலயங்களில் குறிப்பிட்ட நேரத்தில் பூஜைகளில் கலந்து கொண்டால் குறைகள் தீரும். குதூகலம் கூடும், வளமான வாழ்வு சித்திக்கும்.
தெய்வ அனுகூலம் உண்டாகட்டும்.

No comments:

Post a Comment