ரிஷப ராசி அன்பர்களுக்ககான குருப் பெயர்ச்சி பலன்கள்:
சுக்கிர பகவான் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் மிகவும் மென்மையானவர்களாகவும் மற்றவர்களை அனுசரித்து நடக்க கூடியவர்களாகவும், பேச்சில் பிறரை கவரக் கூடியவர்களாகவும் இருப்பீர்கள். நினைத்த காரியத்தை செம்மையாக முடிக்கும் ஆற்றல் உள்ளவர்கள். சூழ்நிலைக்கேற்றவாறு தங்களை மாற்றி கொள்ளும் பாங்குடைய நீங்கள் இன்பமான வாழ்க்கை வாழும் ரிஷப ராசிக்காரர்களே.
இது வரை 3 - மிடத்தில் குரு இருந்த பொழுது துரியோதனன் படை மாண்டதும் என்ற நிலை நீடிக்குமா? அல்லது விமோசனம் கிட்டுமா என்ற ஏக்கம் தான்.
இது வரை 3 - மிடத்தில் குரு இருந்த பொழுது துரியோதனன் படை மாண்டதும் என்ற நிலை நீடிக்குமா? அல்லது விமோசனம் கிட்டுமா என்ற ஏக்கம் தான்.
4 - ல் குரு வந்தபோது தருமபுத்திரர் வனவாசம் போனதும் என்பது பாடல் அது போல நடக்குமா என்றால் அப்படியில்லை.
உங்கள் ராசிக்கு பகை கிரகமான குரு பகவான் 8-க்கும், 11-க்கும் அதிபதியான குரு பகவான் 4-ல் சஞ்சரிக்கும் பொழுது உடல் உபாதைகள் ஏற்படும். வீட்டில் நிம்மதியும் சுகமும் கெடும். வாலிபர்களுக்கு பெண்களால் வீண்பழி உண்டாகும். வாகனங்களால் நஷ்டம் வரும். தன் வீட்டில் வசிக்க முடியாமல் வெளியூர் சென்று வசிக்க நேரிடும். கல்வியில் தடைவரக் கூடும். உற்றார், உறவினர் பகை வரும்.
சிம்மராசியில் இருந்து 5-ம் பார்வையாக 8-ம் வீட்டை பார்ப்பதால் உடல் உபாதைகள் குணமாகும். வழக்கு வெற்றியடையும் வீண்வம்புகள் ஏற்படாது. மனதில் ஏற்பட்டிருக்கும் மரண பயம் விலகும் மேலும் மனைவி மூலமாக தனவரவு ஏற்படும். சிம்மத்தில் இருந்து 7 - ம் பார்வையாக 10-ம் பாவத்தை பார்ப்பதால் முடங்கிக்கிடந்த தொழில் வளர்ச்சி பெறும் உத்தியோகத்தில பதவி உயர்வு கிடைக்கும்.
சிம்ம ராசியில் இருந்து 9 - ம் பார்வையாக,
12-மிடத்தை பார்ப்பதால் குடும்பத்தில் தடைபட்டு நின்ற சுபகாரியங்கள் நடைபெறும். தீர்த்த யாத்திரை சென்று வர வாய்ப்பு உண்டாகும்.
ராசிக்கு பாக்கியாதிபதி ராசியைப் பார்ப்பதால் கௌரவத்துக்கு பங்கம் ஏற்பாடது.
12-மிடத்தை பார்ப்பதால் குடும்பத்தில் தடைபட்டு நின்ற சுபகாரியங்கள் நடைபெறும். தீர்த்த யாத்திரை சென்று வர வாய்ப்பு உண்டாகும்.
ராசிக்கு பாக்கியாதிபதி ராசியைப் பார்ப்பதால் கௌரவத்துக்கு பங்கம் ஏற்பாடது.
கண்ட சனி நடப்பாதல் சற்று எல்லா விசயங்களிலும் கவனமாக நடப்பது நன்று.
தங்களது ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் நவக்கிரகம் உள்ள கோவில்களில் சுக்கிரன் மற்றும் குரு, சனிக்கு நெய் தீபம் ஏற்றி வரவும்.
தங்களது ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் நவக்கிரகம் உள்ள கோவில்களில் சுக்கிரன் மற்றும் குரு, சனிக்கு நெய் தீபம் ஏற்றி வரவும்.
No comments:
Post a Comment