Friday, 10 July 2015

மூல நட்சத்திர நண்பர்களே:


      ஆஞ்சிநேயர் அவதரித்த நட்சத்திரத்தில் பிறந்த உங்களுடைய நட்சத்திர அதிபதி கேது குருவின் வீட்டில் இருப்பதால் ஞானசக்தி தைரியம் தன்னம்பிக்கை கடவுள் பக்தி நிரம்பியவர்கள். தர்மத்திற்கு தலை வணங்குவீர்கள். அதர்மத்தை அழிக்க கடும் பாடுபடுவீ ர்கள். இரண்டாவது
திசையே சுக்கிரதசை வருவதால், சுக போக வாழ்க்கையும். எல்லோருக்கும் செல்ல பிள்ளையாக வளர்வீர்கள். படிப்பு தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள், எதையும் சாதிக்க கூடிய திறமைசாலியாகவும். எதிலும் நிதான போக்கும், பெரியோர்களிடம் பக்தி மரியாதை கொண்டவர்கள். ஆசார அனுஷ்டானம் விரத முறைகளை கடைப்பிடிப்பிர்கள்.

      கேது 3,6,11- இருந்தாலும் கேதுவுக்கு, குரு, சுக்கிரன், புதன் பார்வை கிடைத்தாலும் சுபிட்சம், சௌபாக்கியம், சுக போகம் அனைத்தும் கிட்டும். ஒருவருடைய ஜாதகத்தில் கேது பலம் பெற்றால் இகம் பரம் என்ற இரு உலகங்களிலும் சுகம் பெற வைப்பார். அடுத்தவர்களை வாழ வைப்பார்கள். கலை, இலக்கியம், சங்கிதம் ஆகியவற்றில் நாட்டங்களை தருவார்.
கம்பியூ ட்டர் டெக்னாலிஜ் துறைகளில் வல்லுனராக பிரகாசிக்க வைப்பார்.

ஜாதகத்தில் சனி, செவ்வாய், ராகு பாதகாதிபதி சாரம் பெற்றால் பெறும் துன்பத்தை தருவார். 27-நட்சத்திரங்களில் பெரும் மக்களால் விமர்சனம் செய்யபடும். முல நட்சத்திரத்தின் பயம் என்ன என்றால் மாமனாருக்கு ஆகாது என்று. ஆண் முலம் அரசாலும், பெண் முலம் நிர்முலம் என்று பஞ்சாங்களில் குறிக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு எந்தவித நட்சத்திர தோஷமும் கிடையாது.பெண்களுக்கு மட்டும் தான் நட்சத்திர தோஷங்கள் எல்லாம்.பெண்கள் 2, 3,4, பாதங்களில் பிறந்தால் தோஷம் கிடையாது. ஞாயிற்றுக்கிழமை பிறந்தால் 4 - பாதங்களும் தோசம். சூரியன், சந்திரன் சேர்க்கை சாரம் பெற்றால் மட்டுமே 4 பாதங்களும் தோஷம்.கேதுவை குரு சுக்கிரன் பார்த்தாலும் சேர்ந்தாலும் தோஷமில்லை. எத்தனையோ பேர் மாமானர், மாமியார் இருந்து பெண்கள் திருமணம் செய்து கொண்டு நல்ல விதமாக வாழ்க்கை வாழ்வதே நான் பார்த்து இருக்கேன். நட்சத்திர தோஷம் என்பது எல்லாம் ஓரு பிரம்மைதான். ஓரு பெண் இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் இளம் வயது முதல் சங்கடஹரசதுர்த்தி அன்று விநாயகருக்கு பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்தாலே போதும்.முழுமையாக தோஷங்கள் விலகி வீடும்.

மூல நட்சத்திர கோவில், சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே மப்பேடு என்னும் ஊரிலிருக்கும் ஸ்ரீசிங்கீஸ்வரர் ஆலயம் சென்று வழிபடுவது நன்று.

No comments:

Post a Comment