Tuesday, 14 July 2015

உத்திரட்டாதி நட்சத்திர நண்பர்களே:

        நட்சத்திர அதிபதி சனி, குருவின் வீட்டில். உ என்று அரம்பிக்கும் மூன்று நட்சத்திரமான உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சுகம் போகம், சௌபாக்கியம் பெற்று சுகமுடன் வாழ்வார்கள் என்பது சந்திரகாவியம் என்ற ஜோதிட நூலின் விதி. மக்களின் செல்வாக்கை பெற சனி பகவான் ஜாதகத்தில் பலம் பெற வேண்டும். நல்ல நோக்கங்கள், அழகான வாக்கு, வன்மைகளுடன், செல்வாக்கு, சொல்வாக்கு, பக்தி நாட்டம், கல்வி, ஞானம் பெற்று கடின உழைப்பில் முன்னேற்றம் காண்பீர்கள்.
 திறமைசாலியாக இருந்தாலும் சொந்த புத்தி இருக்காது. பெரிய குடும்ப பொறுப்பில் இருப்பீர்கள். நட்பு வட்டங்கள் பெரிய அளவில் இருந்தாலும் இழிவான நண்பர்கள் சேர்க்கையும் இருக்கும். சனிபகவான் நட்பு ஆட்சி உச்சபலம் பெற்று கேந்திரம் பெற்றாலும் 3, 6, 11- இருந்தாலும் சுய சாரம் பெற்றாலும் சாசயோகம் பெற்று அதிகார மிக்க பதவியை கொடுப்பார். வசதி வாய்ப்புகளை தேடி போக வேண்டாம். தானே தேடி வரும். முப்பது வயது வரை உருண்டு பிரண்டாலும் செல்வம் சேராது. பின் பலன் பதவிகள் தானே தேடி வரும். ஒவ்வொரு திசையிலும் சனி புத்தி அந்தரம் வரும் பொழது மேன்மையான பலன்களை கொடுப்பார்கள். சுய தொழில் அரசு மத்திய அரசு பணி அதிகாரம் செய்ய கூடிய பதவிகள் அமையும்.

உத்திரட்டாதி நட்சத்திர கோவில். புதுக்கோட்டை ஆவுடையார் கோவில் அருகே உள்ள தீயத்தூர் ஊரில் இருக்கும் அருள்மிகு ஸ்ரீசகஸ்ர லட்சுமீஸ்வரர் ஆலயம் சென்று வழிபடுவது நல்லது.

No comments:

Post a Comment