Tuesday, 7 July 2015

கதிர்காமர் ஜோதிடம்:

நாம் பின்பற்றும் கணித சாஸ்திரத்தில் 9 கிரகத்துக்கும் 120 வருஷம் என கணக்கிட்டு ஓவ்வொரு திசைக்கும் ஓவ்வொரு காலங்கள் என அறிந்து ஆயுள், பாவம், வாழ்கையில் முன்னேற்றம் வரும் என சொல்கிறோம்.
ரஜினி படத்தில் ஓரு பாடலில் எட்டு எட்டாக வாழ்க்கையை பிரித்து கொள் இப்ப எந்த எட்டில் இருப்பைதை தெரிந்து கொள் என்பார்.
இலங்கையில் கணிக்கப்படும் ஜோதிட கணிதம் 72 வயது வரை தான். எல்லா திசைகளும் வருஷம் எட்டு ஆண்டு தான்.
8 யை 9 ஆல் பெருக்கினால் 72 வருஷம் வரும்.
முதல் திசைக்கு இருப்பு நம் கணிதப்படி தான். இதில் 2,4,6,8,9, திசைகள் யோக தசையாகும். மற்ற திசைகள் 1,3,5,7, கஷ்டங்கள், விபத்து, கண்டங்கள், மாரகத்தை செய்யும்.
அதனால் தான் 8 வருஷம் உலகத்தையே உலுக்கிய ராஜபக்ஷே அடுத்த 8 ல் முகவரியே இல்லாமல் போய் விட்டார். இந்த கணிதம் கனித்து பலன் சொன்னால் பலன் துல்லியமாக இருக்கும்.

No comments:

Post a Comment