நட்சத்திர பலன்கள்:
அசுவினி:
இந்த நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவான். வேதாந்த அறிவுக்கு காரகன். மோட்சத்திற்கும், பாவ விமோசனத்துக்கு காரகன். விஞ்ஞானம் தொழில் நுட்ப அறிவுக்கு காரக தன்மை உள்ள கேது பகவான் சுபிட்சம், சௌபாக்கியம், சுகபோகம் அனைத்தும் கொடுப்பான்.
நல்ல அறிவு, ஆற்றல் எதையும் சாதிக்க வைப்பார். சில நேரங்களில் எதிர்பாராத சங்கடங்களை சந்தித்தாலும் முடிவில் நீங்கள் தான் வெற்றி பெறுவீர்கள் .வெற்றிகளை, சந்தோஷத்தை கண்டு கொள்ள மாட்டீர்கள். தோல்வி வந்தால் அதை பெரியதாக நினைத்து கவலை படுவீர்கள்.
தங்களை யாரும் மிஞ்சிட கூடாது என்ற கங்கனத்தில் குறிக்கோளை மனதில் வைத்து செயல்படுவீர்கள். தொழில் வாழ்க்கையில் பெறும் சாதனைகளை செய்வீர்கள். மருத்துவம், இன்ஜினியரிங், தொழில்களில் சாதனை செய்வீர்கள்.
குடும்ப பொறுப்பு, தேவைகளை உடனுக்குடனே செய்து முடிப்பீர்கள். நீடித்த நோய் நோடி தாக்காது. அவ்வப்பொழது சின்ன சின்ன மன குழப்பங்கள் உங்களை வேதனைபடுத்தும். இரண்டாவது திசையே சுக்கிர திசை வந்து விடுவாதல் சுக போக வாழ்க்கை வாழ ஆசைப் படுவிர்கள். சிலர் கலப்பு திருமணம், காதல் திருமணம் செய்து கொள்வார்கள்.
சிலர் காதல் தோல்விகளை சந்தித்து வாழ்நாள் முழுதும் வேதனை படுவார்கள். சிலர் வெளிநாட்டு வேலை அன்னிய தேசத்திலேயே தங்கி வாழ்கை வாழ்வார்கள்.
ஜாதக கட்டத்தில் லக்னத்தில் இருந்து 3, 6, 11, கேது பகவான் இருந்தால் செல்வ சீமானாக வாழ்க்கை அமையும். கேதுவை குரு பார்த்தாலும், கேதுவுக்கு திரிகோணத்தில் குரு இருந்தாலும் அரசு வேலை, தலைமை பதவி, புகழ் அந்தஸ்து பெற்று வளமான வாழ்க்கை அமையும்.
கேந்திரம் 1, 4, 7, 10 ல் கேது இருந்தாலும் நிரந்தர உத்தியோகத்தில் வருமானம் கிடைக்கும்.
2, 8,ல் கேது இருந்தாலும், பாதகாதிபதி சாரம் பெற்றாலும், 6, 8,12, அதிபதி சாரம் பெற்றாலும் குடும்ப வாழ்கையில் சங்கடங்களை கொடுக்கும்.
மோட்ச கிரகமான கேது முன்னோர் வகையில் சாபங்களை கொடுப்பாா். கேது, சனியுடன் சேர்ந்தாலும், சனி பார்வை கேதுவுக்கு இருந்தாலும், குடும்பத்திற்கு பெண் சாபம். மனநிலை பாதிக்கபட்டவர்கள் சாபங்கள் உள்ளது என்பது பொது விதி.

குரு பார்வை பெற்றால் சாப விமோசனம் பெறலாம். அசுவினியில் பிறந்தவர்கள் பின் வாழ்க்கை நன்றாக இருக்கும். புதன், சுக்கிரன், சனி, குரு இவருடைய நண்பர்கள். சூரியன், சந்திரன், கடும் எதிர்ப்பு பகைவர்கள். இந்த நட்சத்திரத்திற்கு என்று கோவில் நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டி இருக்கும் ஸ்ரீ பவ ஓளஷதீஸ்வரர் ஆலயத்திற்கு ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் சென்று அர்ச்சனை செய்து கற்பூர ஆர்த்தி பார்த்தால் கேது பகவான் உங்கள் நட்சத்திரத்தை வலிமையாக்கி பிரகாசிக்க வைப்பார்.
No comments:
Post a Comment