Friday, 10 July 2015

பூர நட்சத்திர நண்பர்களே:

 
உங்கள் நட்சத்திர கிரகம் சுக்கிரன். சூரியனின் வீட்டில்,
செவ்வாய் வீட்டில், பரணி இருந்தால் பெண் பித்து. காமம் அதிகமாக இருக்கும். சிம்மத்தில், சூரியனின் வீட்டில், பூரம் நட்சத்திரத்தில் பிறந்தால் கண்ணியம், கட்டுபாடு, பெண்களை மதித்து நடக்க கூடிய பண்பு இருக்கும். ஜாதக கட்டத்தில் சுக்கிரன் 1, 5, 9, 12, இருப்பது நல்லது. சுக்கிரனுக்கு மறைவு ஸ்தானங்கள் 3, 8, மட்டுமே. ராகு, கேது சேர்க்கையோ. சனி பார்வை சுக்கிரனுக்கு இருந்தால் மட்டுமே கெடுதலை தரும். தெய்வ அனுகிரகம், தைரியம், வியாபாரத்தில் நாட்டம், புத்தி சாதுர்யம். எல்லா காரியங்களையும் வெற்றிகரமாக முடிப்பது சாமர்த்தியமாக செயல்படுவது பிளஸ் பாயிண்டுகள்.
குட்டி சுக்கிர திசையில் பிறப்பாதல் மனை விட்டு, மாடி விட்டு வேறு நகரத்தில் குடி ஏறுவார்கள்.

நீதி, நேர்மை, நல்ல குணங்களையும் பெற்று இருப்பார்கள்.
சுக்கிரனுக்கு, குரு பார்வை, புதன் பார்வை, செவ்வாய் பார்வை இருந்தால் நட்சத்திரம் வலிமை பெற்று சகல பாக்கியம் கிட்டும். அடிமைத்தொழில் செய்ய மாட்டார்கள். தான் தலை எடுத்து தான் சகல செல்வங்களை சேர்ப்பார்கள். முற்பலனை விட பிற்பலன் நன்றாக இருக்கும்.

பூர நட்சத்திரத்திற்கு உண்டான கோவில். புதுக்கோட்டை அருகில் திருவரங்குளம் என்ற ஊரிலுள்ள ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் ஆலயம்

No comments:

Post a Comment