Friday, 10 July 2015

சித்திரை நட்சத்திர நண்பர்களே:


உங்களுடைய நட்சத்திர அதிபதி செவ்வாய் எல்லா காரியங்களையும் தன்னம்பிக்கையுடன், விவேகமாக செயல்பட வைப்பார்.
சித்திரையின் தந்தை தெருவிலே என்பது பழமொழி.
சில நட்சத்திரங்களுக்கு சில பழமொழிகள் சொல்லபட்டது
ஓன்று நாளடைவில் அது வேற பொருளாக சொல்ல படுகிறது. சித்திரையில் பிறந்தவர்கள் தன்னுடைய காரியங்களில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். ஓரு காரியம் நடக்க எந்த அளவு முயற்சி பெற வேண்டுமோ அந்த அளவுக்கு பாடுபடுவார்கள். சதா காலமும் எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். சொன்ன சொல்லை திரும்ப திரும்ப சொல்லி கொண்டே இருப்பார்கள். ஊருக்கு எல்லாம் நல்லவர்கள். வீட்டில் எல்லோருக்கும் பகையாளி.

திறமைசாலி தைரியவான் நல்ல குணங்களுடன் பரந்த நோக்கம் கொண்டவர்கள். இளமை பருவத்திலேயே ராகு திசை வருவாதல் இரும்பு இயந்திரங்கள். டிப்லோமா, இன்ஞினிரிங் போன்ற படிப்பும் வெளிநாட்டு தொடர்பும் வேலையும், இளமையிலேயே சம்பாதிக்கும் வாய்ப்பும் கிட்டும்.
செவ்வாய் பலமாக இருந்தால் ரானுவம், காவல் துறை, மத்திய அரசு பணி கிடைக்கும். குரு, சந்திரன், சூரியன் பார்வை பெற்றோ கேந்திரம் ஏறி உச்சம் பெற்றால் ஜாதகரை செழிப்பான வாழ்வை வாழ வைத்தே திருவான்.ராகு கேது புதன் தொடர்பு சாரம் பெற்றால் கள்ளத்தனமான தொழில் செய்து பணம் சம்பாதிக்க வைப்பார். கன்னியில் செவ்வாய் இருந்தால் கடலே வற்றி போகும் என்பார்கள். கடகத்தில் செவ்வாய் நிச்சம் பெற்றால் அடிக்கடி ரத்த தானம் செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.
சித்திரை நட்சத்திர கோவில். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலுக்கு ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் சென்று வணங்கினால் சித்திரை நட்சத்திரம் பலம் பெறும்.

No comments:

Post a Comment