Wednesday, 8 July 2015

கடக ராசி குருபெயர்ச்சி பலன்கள்:


சந்திரனின் ஆதிக்கம் பெற்ற நீங்கள் உங்கள் ராசிநாதன் 15 - நாட்கள் வளர்பிறையாகவும், 15 நாட்கள் தேய்பிறையாகவும் உலவி வருவார், விருச்சிகத்திலிருந்து, ரிஷபத்தை நோக்கி போகும் பொழுது உங்கள் மனநிலை சீராகவும் சிறப்பாகவும் செயல்படும். ரிஷபத்தில் இருந்து விருட்சிகத்தை நோக்கி போகும் பொழுது இனம்புரியாத குழப்பம் சங்கடம் தோல்வி பயம் உங்களை வாட்டும்.
இதுவரை ஜென்மராசியில் குரு பகவான் தேவை இல்லாத மனுஉளைச்சல். அவமானம் சங்கடங்களை கொடுத்தார். இப்பொழுது தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் அதாவது 2- ம் இடத்தில் சஞ்சரிக்க போகிறார். தன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் தாங்கள் அனுபவித்த வந்த கஷ்டங்கள் எல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல விலகி விடும். வாக்கு, நாணயம், சொல்கின்ற சொல் பலிதமாகும். பணவரவு திருப்தி தரும். பொருளாதரத்தில் முன்னேற்றம் உயர்ந்து காணப்படும். போன பதவிகள் தேடி வரும். உறவுகள் மேம்படும். 6- ம் பாவத்தை குரு பார்ப்பதால் எதிரிகள் தொல்லை நீங்கும். இதுவரை இல்லாத நோய்க்கு வைத்தியம் பார்த்தவருக்கு எல்லாம் நோய் நொடி நீங்கும். தொழிலில் இருந்த போட்டி, பொறாமைகள் நீங்கும். ஏன் என்றால் 6-ம் பாவம் 10- பாவத்திற்கு 9 -ம் பாவமாக வருவதால் தொழில் அபிவிருத்தி ஏற்படும். அசையா சொத்துகள் வீடு, மனை வாங்கும் வாய்ப்பு வரும்.
7-ம் பார்வையாக 8-ம் இடத்தை பார்ப்பதால் எதிரி போட்டி பொறாமைகள் தொல்லைகள் நீங்கும். இதுவரை உங்களை எதிரி போல் நினைத்தவர்கள் எல்லாம் உங்களிடம் சரணடைந்து விடுவார்கள் மனைவி மூலமாக தன வரவு வரும். வழக்குகளில் வெற்றி கிட்டும். சுப காரியங்களுக்கு சுப செலவுகள் ஏற்படும்.
தனது 9-ம் பார்வையாக 10 -மிடத்தை பார்ப்பாதல் வேலை கிடைக்காதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பதவி உயர்வும், வெகுமதியும் கிட்டும். கொடுக்கல், வாங்கல் இருந்த தடுமாற்றங்கள் விலகும். தொழில் அபிவிருத்தி ஏற்படும்.
உங்கள் ராசி மற்றும் லக்னத்திற்கு கேந்திராதிபதி, திரிகோணாதிபதியுமான செவ்வாய்க்கு ஒரு முறை திருச்செந்தூர் சென்று கடல் ஸ்தானம் செய்து முருகனை வழிபடுவது நல்லது.
மன குழப்பங்கள் தீர அமாவாசைக்கு பிறகு வரும் 3-ம் பிறையை தொடர்ந்து பார்த்தால் தீராத மன உளைச்சல் நீங்கும்.

No comments:

Post a Comment