அனுஷ நட்சத்திர நண்பர்களே:
உங்களுடைய நட்சத்திர அதிபதி சனி பகவான் செவ்வாய் வீட்டில் பகை பெறுகிறார். வீடு கொடுத்த செவ்வாய் சனியின் வீட்டில் உச்சம் பெறுகிறார்.அதனால் அனுச நட்சத்திரகாரர்கள் எதிலும் நீதி, நேர்மையை கடைபிடித்து வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பார்கள். படிப்பில் கவனத்தையும் ஆராய்ச்சி செய்வதிலும், வேத சாஸ்திரங்களில் பற்றுதல் கொண்டவர்களாகவும் நல்ல பதவி அந்தஸ்து பெற்று உண்மை,நேர்மை. வாக்கு நாணயத்துடன் செல்வ சீமானக வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவார்கள். சொந்த பந்தங்களை அனுசரித்து நடக்க கூடியவர்கள்.
அரசாங்க கௌரவங்களை பெறுபவர்களாகவும் மற்றவர்களின் குணங்களை அறிந்து நடக்கும் குணங்களுடனும் பெருந்தன்மை மிக்கவர்களாகவும் இருப்பார்கள். திறமைசாலியாகவும் தர்ம சிந்தனையுடன் ஊர் உலகம் போற்றும் விதத்தில் செயல்படுவார்கள்.
பிறரிடம் பேசுவதற்கே வெட்கபடுவார்கள்.
சனி பலம் பெற்றவர்கள் சர்வசக்தியும் பெற வாய்ப்புண்டு. கடினமான உழைப்பால் பல சாதனைகள் செய்ய வாய்புகள் வரும். சனி பகவான் மகரத்தில் கன்னியில் 3,11, பலம்பெற நாட்டிற்கோ ஊருக்குவோ தலைமை தாங்கும் தகுதி உண்டாகும்.
கலை, இலக்கியம், விஞ்ஞானம், தொழில் நுட்ப துறைகளில் சாதனை செய்ய வைப்பார்.
வண்டி வாகனம். இரும்பு இயந்திரங்கள் துறைகளில் முதலாளித்துவம் கொடுப்பார். ராகு, கேது, செவ்வாய் சாரம் பெறாமல். சேர்க்கை பெறாமல் 3, 6, 11, பலம் பெற்றால் உயர்நிலை யோகத்தை கொடுப்பார். செல்வ வளம் மிகுந்து செழிப்புடன் வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.
புதன், சுக்கிரன், குரு, பார்வை பெற்றால் உலகம் அறிந்த நிபுணர் ஆகலாம். பொதுவாக பூசம், அனுசம், உத்திராட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஏழரை சனி, அஷ்டம சனி. கண்ட சனி எந்த பாதிப்பையும் தாரது. அந்த கால
கட்டங்களில் கடல் தாண்டி அன்னிய தேசம் சென்று சம்பாதிக்க வைக்கும்.
அனுச நட்சத்திரம் பலம் பெற மயிலாடுதுறைக்கு அருகில் திருநின்றியூர் என்ற ஊரில் உள்ள ஸ்ரீலட்சுமிபுரீஸ்வரர் கோவிலுக்கு ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் சென்று வணங்கினால் சகல நன்மைகள் ஏற்படும்.

No comments:
Post a Comment