Wednesday, 8 July 2015

ரோகினி நட்சத்திர நண்பர்களே:


பெருமையும் புகழையும் தேடி கொள்ளும் சந்திரனின் ஆதிக்கம் பெற்ற உங்கள் நட்சத்திராதிபதி சந்திரன் உச்ச ராசிவிடான சந்திரனின் நட்சத்திரத்தில் பிறந்த நிங்கள் ஆசைகள் அதிகம் கொண்டவர்கள். பெண்கள் மிது அதிகம் விருப்பம் கொள்விர்கள். நட்பு வட்டாரங்கள் எல்லாம் எப்பொழதும் உங்களை புகழ்ந்து பேச வேண்டும் என்று நினைப்பிர்கள். சொன்ன சொல்லில் தவற மாட்டிர்கள். நல்ல குணங்கள் நிறைய இருந்தாலும் பிறர் பேச்சால் மனதளவில் வேதனை படுவிர்கள். உங்கள் நட்சத்திர கிரகம் சந்திரன் வேகமாக செல்லுவதை போல உங்கள் செயலும் நடையும் வேகமாக இருக்கும். பத்து நாளில் நடக்க வேண்டிய காரியங்களை இரண்டே நாளில் முடித்து விடுவீர்கள். விருட்சிகத்தில் இருந்து ரிஷபத்தை நோக்கி ஆரோ கதியில் சந்திரன் வரும் பொழது உங்கள் மனது தெளிவாக இருக்கும். எல்லா செயலும் வெற்றி பெறும். நீதி நேர்மையாக செயல்படுவிர்கள்.ரிஷபத்தில் இருந்து விருட்சிகத்தை நோக்கி போகும் பொழது வார்த்தைகளை கொடுத்து மாட்டி கொள்விர்கள். பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்து 15 வயதுக்கு மேல் வரும் ராகு மகா திசையில் இன்ஜினிரிங் தொழில் நுட்ப கல்விகளில் தேர்ச்சி அடைந்து வெளிநாட்டு தொடர்பு உத்யோக வாய்ப்பை பெறுவிர்கள். ராகு, மேஷம், ரிசபம், கடகம், கன்னி, மகரம் விடுகளில் இருந்தால் உள்ள நாட்டிலேயே நல்ல உத்யோகம் கிட்டும்.
சந்திரன் 3, 6, 9, 11,ல் இருப்பது நல்லது. 8-மிடத்தில் இருந்தால் மன குழப்பம் அதிகமாக இருக்கும். சந்திரன், ராகு, கேது, சனி சம்பந்தம் பெறுவது தாயாதி வர்க்கத்தில் பெண் சாபம் உடன் பிறந்த சகோதரிகள் வகையில் பிரச்சனைகளை கொடுக்கும்.பாதகாதிபதி தொடர்ப்பு.சாரம் பெற்றால் மணநிலை பாதிப்புகள் இருக்கும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் தாய்மாமன் குடும்பத்திற்கு ஆகாது என்று ஒரு தவறான கருத்து உள்ளது..அதற்கு அதாரம் எந்த நூலிலூம் இல்லை.
ரோகினிக்கு உண்டான கோவில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள ஸ்ரீ பாண்டவ தூத ஸ்ரீ கிருஷ்ண பெருமாள் கோவில்.

No comments:

Post a Comment