Friday, 10 July 2015


விசாகம் நட்சத்திர நண்பர்களே:


உங்களுடைய நட்சத்திர அதிபதி குரு பகை வீட்டில் 3-பாதத்திலும் நட்பு வீட்டில், 1-பாதமாக இருப்பார். குருவும், சுக்கிரனும் பகை கிரகமாக இருந்தாலும் குருவின் வீட்டில் சுக்கிரன் உச்சம் என்பாதல் விசாக நட்சத்திரத்திற்கு அதிக வலிமையை கொடுப்பார்.ஞானத்தையும் நல்ல அறிவையும் உயர் கல்வியறிவுவையும்,நிரந்தர வேலைவாய்ப்பு அதிகாரமிக்க பதவி பொன் பொருள் வசதி வாய்ப்பு செல்வ செழிப்பு போன்ற வற்றை குரு கொடுப்பார்.வியாபாரத்தில் வெற்றியை கொடுத்து சதா காலமும் கையில் காசு பணம் புரள வைப்பார்.வேத விற்பனர்கள் ஜோதிட சாஸ்திரம் போன்றவற்றில் ஞானத்தை கொடுப்பார்.நடக்காத காரியங்களை சாதிக்க வைப்பார்..தந்திர என்னங்களை கையாளுவார்கள்.திறமையாக பேசுவதில் சாமர்த்தியம் கொண்டவர்கள்.தானதருமம் செய்யும் குணமுள்ளவர்கள்.குரு பகவான் ஜாதகத்தில் 1, 5, 9, இருந்தாலும் சந்திரன் செவ்வாய் சூரியன் பார்வை பெற்றால் வளமான வலிமையான வாழ்க்கை அமையும்.புதன் சுக்கிரன் பார்வை பெற்றால் தரித்திர நிலையை கொடுக்கும்.
ஜாதகத்தில் ஏனைய கிரகங்கள் வலிமை இழந்தாலும் நட்சத்திர அதிபதி குரு வலிமை பெற்றால் சகல செல்வாக்கு கிடைக்கும்.
ஸ்திர ராசிகளான ரிசபம்.சிம்மம்.விருட்சிகம்.கும்பம் ஆகிய வீடுகளில் குரு இருப்பது பொதுவாகவே நல்லது..
விசாக நட்சத்திர கோவில் தென்காசியில் இருந்து அச்சன்கோவில் செல்லும் வழியிலுள்ள திருமலை முருகன் ஆலயம் சென்று வழிபடுவது நல்லது.

No comments:

Post a Comment