Wednesday, 8 July 2015

மன்மத வருஷ குரு பெயர்ச்சி பலன்கள்:



முதலில் குரு பகவானை பற்றி தெரிந்து கொள்வோம். தெய்வீக அறிவுக்கும் வேதாந்த ஞானத்திற்கும் ஓளிபடைத்த மேதைகளையும், ஞானிகளையும், பொருள் சேமிப்பு இவையனத்திற்கும் குருவே காரணம்.

பலம் படைத்த இவரது திசை இளமையில் வந்தால் கல்வியில் முதல்நிலை உண்டாகும். நடு வயதில் வந்தால் சகல பாக்கியங்களும் ஏற்படும். இறுதிப்பகுதியில் வந்தால் சந்ததிகள் செழிப்பார்கள்.

அந்தணர்களுக்கு, பசுக்களுக்கும் ஆதிமுலவர் இவரே. தலைவணங்காத தலைமைப் பதவியைத் தந்திடுவார். மாபெரும் சாதனைகளைச் செய்ய வைத்து மனிதனை மாணிக்கமாக திகழ வைப்பார்.

நாட்டை ஆளவைப்பார், நல்லோருடன் சேர வைப்பார். புது புது உத்திகளைக் காண வைப்பார். பொதுவாக ஜெனன கால ஜாதகத்தில் ரிஷபம், சிம்மம், விருட்சகம், கும்பம் ஆகிய ஸ்திர ராசிகளில் குரு இருந்தால் யோகம் உண்டு.
புத்திரகாரன் என்பதால் 5 - ம் வீட்டில் குரு இருந்தால் புத்திர தோஷத்தை உருவாக்குவார்.

5 - ம் வீட்டில் சனி, ராகு, கேது சம்பந்தபட்டால் புத்திர சோகம் என்று அர்த்தம். புத்திர சோகம் என்றால் புத்திரர்களுக்கு ஏற்படும் கஷ்டங்களை பார்ப்பது அல்லது புத்திரர்களுக்கு கர்மம் செய்வது ஆகியவை புத்திர சோகம் என்று பெயர்.

குருவுக்கு 5 - ல் சூரியன் வரும் பொழுது வக்கிர கதி ஏற்படும்.7 - ல் வரும் பொழுது அதிக வக்ர கதி ஏற்படும். 9 - ல் வரும் பொழுது வக்ர நீவர்த்தி ஏற்படும்.

பிறக்கும் பொழது வக்கிரத்தில் பிறந்து இருந்தால் குரு வக்கிரம் அடையும் பொழுது அதிக நன்மைகளை ஏற்படும். பொதுவாக குரு இருக்கும் இடம் பாழ், பார்க்கும் இடங்கள் பலம் பெறும். சனி இருக்கும் இடம் பலம் பெறும், பார்க்கும் இடம் கெடும்.

லக்னம், ராசி, குரு இருக்கும் இடத்தில் இருந்து 2 5,7,9,11-ல் குரு வந்தால் யோகம் வரும்.
நாளையிலிருந்து மேஷ ராசி முதல் தினமும் ஒவ்வொறு ராசிகளுக்கும் பலன்களை பார்க்கலாம்.

No comments:

Post a Comment