Tuesday, 7 July 2015

ராசிகளில் நவக்கிரக பலம்:



ஜாதகத்தில் கிரகங்கள் உள்ள நிலையை வைத்து மட்டும் பலனை உயர்வாகவோ சொல்ல முடியாது.
மேஷத்தில், சூரியன் இருந்தால் உச்சநிலையில் உள்ளவாறு பலனை சொல்லக் கூடாது.

1. சூரியன், சிம்மத்தில் ஆட்சி.
துலாம் 10 பாகை வரை நீச்சம்
மேஷம் 10 பாகை வரை உச்சம்.
சிம்மம் 20 பாகை வரை மூலத்ரிகோணம்.

2. செவ்வாய், மேஷத்தில், விருட்சகத்தில் ஆட்சி.
மேஷத்தில் 12 பாகை மூலத்ரிகோணம்.
மகரத்தில் 28 பாகை வரை உச்சம்.
கடகத்தில் 28 பாகை வரை நீச்சம்.

3.குரு
தனுசு, மீனம் ஆட்சி.
கடகம் 5 பாகை வரை உச்சம்.
தனுசில் 10 பாகை வரை மூலத்ரிகோணம்.
மகரத்தில் 5 பாகை வரை நீச்சம்.
இவ்வாறு ஓவ்வொரு கிரகத்திற்கும் உச்ச பாகை, நீச்சல் பாகை என்ற கணக்கு உண்டு. அதை வைத்து தான் பலனை சொல்ல வேண்டும்.

உச்ச ராசியில் உள்ள கிரகத்திற்கும் நீச்ச ராசியில் உள்ள கிரகத்திற்கும் பலன் சொல்லும் பொழுது அனுபவ அறிவு மிக முக்கியம். ஏன் என்றால் நான்கு கிரகம் உச்சம் பெற்ற ஒருவர் ஒட்டலில் சப்பளையர் வேலை பார்க்கிறார். மூன்று கிரகம் உச்சம் பெற்றவர் என் அலுவலகத்தில் ஜாதகம் எழுதி கொண்டு இருக்கிறார்.

No comments:

Post a Comment