Wednesday, 8 July 2015

விருட்சிக ராசி நண்பர்களே :


இது வரை ராசிக்கு 9-ல் இருந்த குரு இப்பொழுது 10 -ம் இடத்துக்கு மாற உள்ளார்.
9-மிடம் யோக ஸ்தானம். 10-ம் இடம் சுமாரான இடம் தான். 10-மிடத்து குரு ஈசனார் ஒரு பத்திலே தலையோட்டிலே இரந்துண்டது என்பது பாடல்.
கடந்த காலத்தில் குரு 9-ல் நல்ல இடத்திலிருந்தும் அந்த நன்மைகளை அடைந்தவர்கள் நூற்றுக்கு 25-பேர்தான் மீதி 75-பேரும் 12-மிடத்து ராகு, ஜென்ம சனி ஆகியவற்றால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக கடன்பட்டும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்ற நிலையில் தான் பலனை அனுபவித்தார்கள்.
உங்கள் ராசிக்கு 2-க்கும் 5-க்கும் உடைய குரு இப்பொழுது 2-மிடத்துக்கு 9-ல் வருகிறார். இது ஒரு நல்ல அமைப்பு. தனவரவு திருப்தி தரும்.
இது வரை ஏழரை சனி குரு பார்வையில் இருந்ததால் தலைக்கு வந்தது எல்லாம் தலை பாகையோட சென்றது. இனி ஏழரை சனி கொஞ்சம் உங்களை சோதித்து தான் பார்ப்பார்.
குரு பகவான் 5-ம் பார்வையாக 2-மிடமான வாக்கு வித்தை குடும்ப ஸ்தானத்தை பார்க்க போவதால் சொன்ன சொல்லை காப்பற்றலாம். குடும்பத்தில் சந்தோஷங்களை பார்க்காலம். குடும்ப தேவைக்காக புதிய பொருட்களை வாங்கலாம். வீட்டில் சுபகாரியங்களை நடத்தாலம்.
4-ம் வீட்டை 7-ம் பார்வையாக பார்ப்பதால் தாயார் வகையில் அனுகூலம் பெறலாம். பூமி, வீடு, வாகன ஸ்தானத்தை பார்ப்பதால் விருத்தி, அபிவிருத்தி, நல்ல பலன்களை காணலாம். உடல் நிலையில் நல்ல ஆரோக்கியம் உண்டாகும் நன்மதிப்பு கூடும்.
9-ம் பார்வையாக 6-ம் இடத்தை பார்ப்பதால் வீண் விவாதங்கள் குறைந்து பகைமை மறையும். நோய், நொடிகள் குணமாகும். இதுவரை பணத்துக்கு வீண் வட்டி கட்டியவர்கள் எல்லாம் அசலை முழுமையாக அடைத்து விடலாம். அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும்.
எதிலும் அவசரப்படாமல் செயல்படுங்கள். எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யுங்கள். ஏழரை சனி நடப்பதால் யாருக்கும் ஜாமீன் போடாதீர்கள். ஒரு முறை வைத்தீஸ்வரன் கோவில் சென்று செவ்வாய்க்கும், குருவுக்கும் அர்ச்சனை செய்து வாருங்கள். பத்தில் உள்ள குரு பதவியை ஒன்றும் நாசம் செய்ய மாட்டார் கவலை பட வேண்டாம்.

No comments:

Post a Comment