Wednesday, 8 July 2015

பூச நட்சத்திர நண்பர்களே:


உங்களுடைய நட்சத்திர அதிபதி சனிஸ்வர பகவான். ஓன்பது கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற ஓரே கிரகம். பகை வீட்டில் பூச நட்சத்திரம். எப்பொழதும் மகிழ்ச்சியை தருபவர் சனி பகவான்.
பெரியோர்களிடம் பக்தி சிரத்தையும்,கல்வியில் திறமை.தெய்வ பக்தி வழிபாடு போன்ற நாட்டங்கள் நிறைய உண்டு.சாதாரண நிலையில் இருந்தாலும் பெரிய மனிதர்களின் நட்பை பெற்று நன்மதிப்பு பெறுவார்கள். எந்த செயலை செய்தாலும் பொறுமையாகவும், நிதானமாகவும்,செய்வார்கள். ஓரு காரியத்தை ஓரு முறைக்கு பல முறை யோசித்து தான் செய்வார்கள்.
எவ்வளவோ கவலைகள் இருந்தாலும் சதா காலம் சிரித்து பேசும் குணமுடையவர்கள். ஜாதகத்தில் சனி பலம் பெற்றால் சர்வ வல்லமை. எல்லா காரியங்கள் சாதிக்கும் ஆற்றலை கொடுக்கும்.
இரும்பு எண்னெய், கிணறு, இன்ஜினியரிங், அரசாங்க உத்யோகம், சனி பகவான் ஆட்சி, உச்சம் நட்பு 3, 6,11- ல் இருந்தால் ஓரு நாட்டை ஆளும் சக்தியையும் ஓரு ஊருக்கு தலைவராக விளங்க கூடிய யோகத்தை தரும்.
சனி தசையும், ராகு தசையும், ஓரு ஜாதகத்திற்கு யோகத்தை கொடுத்தால் வாழ்நாள் முழுதும் நிலைத்து இருக்கும்.மற்ற கிரகங்கள் கொடுத்து காலை வாரி விடும்.
போன ஜென்மத்து பாவ பூண்ணிய கணக்கை கையில் வைத்து கொண்டு ஓரு மணிதனை கோபுர உச்சிக்கு கொண்டு போவதும்.பிச்சை எடுக்க வைப்பதும் சனிபகவான் தான்.
சனிக்கு, புதன், சுக்கிரன் நட்பு. செவ்வாவ், சூரியன், சந்திரன் பகைவர்கள். கேந்திராதிபதி தோஷத்தை தாரத சனி பகவான் 1, 4, 7, 10, ல் இருந்தால் நிலையான உத்யோகமும் நிரந்தர செல்வந்தராக வாழும் யோகத்தை கொடுப்பார்.
பூச நட்சத்திர கோவில்.
புதுக்கோட்டை மாவட்டம் பேராவூரணி அருகே இருக்கும். விளங்குளம் ஸ்ரீ அட்சயபுரீஸ்வரர் ஆலயம்.ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் அங்கு சென்று வழிபாடு செய்தால் சனிபகவான் எல்லா சிக்கல்களையும் போக்குவார்.

No comments:

Post a Comment