திருவாதிரை நட்சத்திர நண்பர்களே:
உங்கள் நட்சத்திராதிபதி ராகு, சாய கிரகம் சிவ பெருமான் அவதரித்த நட்சத்திரம். உங்களுக்கு கோபம் வாரது. வந்தால் பாம்பு படம் எடுத்து ஆடுவதை போல ஓரு ஆட்டம் ஆடி விடுவீர்கள். சாதுவாக தோற்றத்தில் இருந்தாலும் எல்லா வில்லங்களும் செய்ய கூடிய சுபாவங்களும். அடுத்தவரை நேரம் பார்த்து பழி வாங்கி விடுவீர்கள்.
ஜாதக கட்டத்தில் ராகு 3, 6, 9, ஆகிய வீடுகளில் இருந்தாலும்.குரு பார்வை இருந்தாலும் உலகம் முழவதும் சுற்றி உயர்பதவி புகழ் பெறவும் பல வித மொழிகள் கற்கவும் அதிகாரம் அந்தஸ்து பொருள் வளத்தில் சிறப்பை பெறுவீர்கள். பின் நடக்க போவதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர். தெய்வ அனுகூலம் எப்பொழதும் துனை நிற்கும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் படித்தவர்களை காட்டிலும், படிக்காதா மேதைகள் தான் அதிகம். கடின உழைப்பு செய்தும் பணம் சம்பாதிப்பார்கள், தகடு தத்தம் செய்தும் பணம் சம்பாதிப்பார்கள். குடும்ப ஸ்தானத்தில் ராகு கேது அமைந்து சனி பார்த்தால் இரண்டு வாழ்க்கை அல்லது மனைவியால் டார்ச்சர் அதிகமாக இருக்கும்.
ராகுவுக்கு புதன், சுக்கிரன், சனி முவரும் நன்பர்கள். சூரியன் சந்திரன், குரு பகைவர்கள்.
நினைவு தெரிந்த நாள் முதலே பல வித கஷ்டங்கள் பட்டாலும் உங்களை முழுமையாக உயர்த்தி கொள்வதற்காக தீவிரமாக முயற்சி செய்து படிப்படியாக உயர்ந்து விடுவீர்கள்.
ராகுவுக்கு உண்டான கோவில். தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டை அருகில் ஆதிராம்பட்டினம் ஸ்ரீ அபயவரதிஸ்வரர் ஆலயம்.
அய்யயா புனர்பூச நட்சத்திரத்திற்கு தண தாரை ஓரை என்ன அய்யா வரும்
ReplyDelete