Wednesday, 8 July 2015

கிரகங்களின் அசைவின் அவஸ்தைகள்:



ஒரு ஜாதகத்தில் ஜெனன காலத்தில் 12 கட்டங்களில் 9 கிரகங்கள் எந்த பாதசாரம் பெற்று எந்த பாதையில் செல்கிறது என்பதை ஸ்கேன் பார்ப்பதை போல தான் ராசி சக்கரம்.

சில கிரகங்கள் சில சமயம் நல்ல ஒளிதரும் பாதையில் சென்று கொண்டு இருக்கும் பொழது சில கிரகங்கள் கரடு முரடான அதாவது பாதச்சாரம் மாறி சஞ்சரிக்கும் பொழுது ஜாதகம் நம்மை பாதாளத்தில் தள்ளி விடும்.

ராசி இல்லத்தில் நல்ல சாரத்தில் வலிமையுடன் நின்ற கிரகம் தமது தசாபுத்தி அந்தரத்தில் நல்ல பலன்களை செய்ய விடாமல் பகைசாரத்தில் உள்ள கிரகங்கள் செய்ய கூடிய அசுப பலன்களை செய்து விடும் என்பது தான் ஜோதிட சாஸ்த்திரத்தில் கண்ணுக்கு தெரியாத சுட்சமம்.

ராசிகளின் 30 பாகைகளில் ஒவ்வொன்றும் 6 பாகை விதம் 5 பிரிவுகளாக பிரித்துக் கொள்ளலாம்.

12 ராசிகளில் 5 பிரிவுகள் ஆக பிரித்தால் 60 பிரிவுகள் வரும்.
1.பால்ய அவஸ்தை
2. கௌமார அவஸ்தை.
3. யௌவண அவஸ்தை
4. விருத்த அவஸ்தை.
5. மிருத்தியு அவஸ்தை.

இந்த 5 விதமான அவஸ்தைகளில் விருத்த அவஸ்தையும், மிருத்தியு அவஸ்தையும் பொல்லாதது. இந்த இரு அவஸ்தைகளில் இடம் பெற்றுள்ள கிரகமும் தமது தசா, புத்தி, அந்தரங்களில் அசுப பலன்களே செய்யும் மற்ற மூன்று வித அவஸ்தைகளில் உள்ள கிரகங்கள் சுப பலன்களை வாரி வழங்கும்.

60 பிரிவுகளில் சில பிரிவுகள் மிகுந்த நல்ல பலன்களையும், சில பிரிவுகள் அதிக கஷ்டத்தையும், சங்கடத்தையும், சில பிரிவுகள் இருள் சூழ்ந்த வாழ்க்கையையும் தந்து விடும்.
இதில் ஆண் ராசி, பெண் ராசி என இரு பிரிவுகளாக பிரித்து கொள்ள வேண்டும். இன்னும் தெரிந்து கொள்வோம்.

No comments:

Post a Comment