Wednesday, 8 July 2015

உச்சிப் பிள்ளையார் கோவில் திருச்சி:

திரிசிரன் என்ற அரசன் ஆண்டதால் இத்தலத்திற்கு திரிசரபுரம் என்ற பெயர் உண்டானது. நாளடைவில் அது பெயர் மருவி திருச்சிராப்பள்ளி என்றானது. இங்குள்ள மலை மீது சுவாமி, அம்மன், உச்சிப்பிள்ளையார் என்ற முன்று சிகரங்கள் மலை மீது காணப்படும். மலைக்கு கீழே விஸ்வநாத நாயக்கரால் கட்டப்பட்ட தெப்ப குளத்தை காணலாம்.
மலைமீது புறப்படும் படிக்கட்டு மண்டபத்தின் நடுவே மாணிக்க விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. மலைமீது வசந்த மண்டபம் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. மண்டபத்தைக் கடந்து மேலே சென்றால் மேற்குப்புரம் 172 படிகளைக் கடந்து தாயுமானவர் சந்நிதிக்கு போகலாம். செட்டி பெண்ணுக்கு தாயாக வந்து உதவி செய்த ஈசன் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ஈசனை தரிசித்த பின்னர் அன்னை மட்டுவார் குழலி சந்நிதியைக் காணலாம். இந்த அம்பிகைக்கு சுகந்தி குந்தளாம்பிகை எனப் பெயருண்டு. குகைக்கோவில் கங்காதர மூர்த்தியைத் தரிசித்துக் கொண்டே சென்றால் மணிக்கூண்டு என்னுமிடத்தில் பெரிய மணியை காணலாம். அங்கிருந்து படிப்படியாக ஏறி மலையின் உச்சியில் இருக்கும் உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு செல்ல வேண்டும். பிள்ளையார் மிகவும் சக்தி வாய்ந்தவர். ஸ்ரீரங்கம் கோவில் ஸ்ரீகணேசப் பெருமான் மகிமையால் அமையப் பெற்றது.
ஒம் ஸ்ரீம் கரிம் கலிம் கம் கணபதாய நமக.

No comments:

Post a Comment