மேஷ ராசி அன்பர்களுக்கு :

செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் துடிப்பாகவும் மிகுந்த வீரத்துடன் செயல்படுவீர்கள். மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் எதிலும் முதலிடத்தை பிடிப்பது உங்களுக்கு கைவந்த கலையாகும்.
கடந்த காலத்தில் மேஷ ராசிக்கு 4 - ல் கடகத்தில் இருந்த குரு அவ்வளவு நல்ல பலன்களை செய்ய விட்டாலும் அஷ்டம சனியால் எந்த பாதிப்பும் இல்லாமல் காப்பாற்றினார்.
இப்போது 5 - ம் இடமான சிம்ம ராசியில் வருவது நல்லது.
இப்போது 5 - ம் இடமான சிம்ம ராசியில் வருவது நல்லது.
5 ம் இடம் என்பது புத்திர ஸ்தானம். மகிழ்ச்சி, திட்டம் எண்ணம், குரு உபதேஷம், பக்தி, பூர்வ புண்ணியம் ஆகியவற்றை குறிக்கும் இடம். அங்கு புத்திரகாரகனும், தனகாரகனுமான குரு அமர்வது யோகம்தான். மக்கள் பேறு மகிழ்ச்சி, உண்மையான நண்பர்கள், விசுவாசமான வேலையாட்கள், சகல விதமான செல்வ பாக்கியம், குலதெய்வ வழிபாடு பூஜை, தாய்மாமன் ஆதரவு, முன்னோர் சொத்துகள், புதிய சொத்துகள் வாங்கக் கூடிய வாய்ப்புகளும், நீண்டகால கனவுகள் யாவும் நிறைவேறும், புதிய திட்டங்களும், ஆசைகளும் நிறைவேறும்.
திருமணமாகி பல ஆண்டுகளாக வாரிசு இல்லாமல் எதிர்பார்த்து ஏங்கியவருக்கு எல்லாம் வாரிசு உண்டாகும். திருமண வயதில் காத்திருக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமண யோகம் கைகூடி வரும். குடும்பத்தில் சுபமங்கள காரியங்கள் நடக்கும். படித்த பிள்ளைகளுக்கு தகுதிக்கேற்றவாறு தரமான வேலையும், பதவியில் இருப்போர்க்கு பதவி உயர்வும் விரும்பிய இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கலாம்.
வெளிநாட்டு தொடர்புடைய உத்யோகங்கள் பயணங்கள் அனுகூலம், ஆதாயம் தரும்.
9 - மிடத்தை குரு பார்ப்பதால் தெய்வ அனுகூலம் காரியசித்தி, பூர்விக சொத்துகள் ஆகியவற்றால் நல்ல பலன்கள் கிடைக்கும். இதுவரை கும்பிட்ட தெய்வங்கள் எல்லாம் இப்பொழுது கண் திறந்து கருணைமழை பொழியும்.
9 - மிடத்தை குரு பார்ப்பதால் தெய்வ அனுகூலம் காரியசித்தி, பூர்விக சொத்துகள் ஆகியவற்றால் நல்ல பலன்கள் கிடைக்கும். இதுவரை கும்பிட்ட தெய்வங்கள் எல்லாம் இப்பொழுது கண் திறந்து கருணைமழை பொழியும்.
11 - மிடத்தை குரு பார்ப்பாதல் எடுத்த காரியங்கள் வெற்றி பெரும். செய்யும் தொழிலில் லாபம் குவியும். வழக்கு ஏதேனும் இருந்தால் வெற்றி கிட்டும். ஜென்ம ராசியை குரு பார்ப்பதால் உங்கள் புகழ், அந்தஸ்து, கௌரவம். மதிப்பு, மரியாதை, உற்றார், உறவினர், நண்பர்கள் மத்தியில் உயரும்.
கட்டிக்கொடுத்த பெண் பிள்ளைகள் வகையில் சிலருக்கு பிரச்சனைகள் ஏற்பட்டு மனதாங்கல், மாமியார், நாத்தானர் பிடுங்கள் அனுபவிக்கும் பெண்களுக்கு எல்லாம் இந்த குரு பெயர்ச்சி ஆறுதலை தரும்.
அஷ்டமத்து சனி நடப்பதால் எல்லா விஷயங்களிலும் கவனமாக செயல்பட வேண்டும். கோர்ட் வம்பு தும்பு வழக்கு தேடி வரலாம். எல்லா செயலையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. பணம், காசு கொடுக்கல் வாங்கல், அடுத்தவருக்கு ஜாமீன் போடுவது கூடாது.
திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இறங்கும் பொழுது திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது சுய ஜாதக கட்டம், தசாபுத்தி ஆகியவற்றை நன்கு பார்த்து திருமண முயற்சி செய்ய வேண்டும்.
குரு பெயர்ச்சி யோகத்தையும், அதிா்ஷ்டத்தையும் கொடுத்தாலும் அஷ்டமத்து சனி அலைச்சல், மன உளைச்சல், சங்கடங்களை கொடுத்து காரிய வெற்றியை கொடுக்கும்.
மொத்ததில் 80 சதவீதம் நன்மையான பலன்களை எதிர்பார்க்கலாம்.
மொத்ததில் 80 சதவீதம் நன்மையான பலன்களை எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்:
தமிழ் மாத பிறப்பு முதல் நாள் அன்று நவகிரகங்களில் உள்ள செவ்வாய், குரு, சனி, ஆகிய கிரகங்களுக்கு நெய் தீபம் ஏற்றி வரவும். தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் செய்யவும்.
நல்லதே நடக்கும் கவலைப்பட வேண்டாம்
நல்லதே நடக்கும் கவலைப்பட வேண்டாம்
No comments:
Post a Comment