Tuesday, 7 July 2015

மதியால் விதியை வெல்ல முடியுமா?



விதியை மதியால் வெல்லலாம் என்பது பழமொழி. அவ்வாறு மதியால் வெல்ல இயலும் என்பதற்கு கூட விதி சரியாக அமைந்திருக்க வேண்டும். விளக்கமாக சொன்னால் விதி, மதி, கதி இவை மூன்றும் ஜோதிட வார்த்தைகள். விதி என்பது ஜென்ம லக்னத்தையும், மதி என்பது பிறக்கும் சந்திரனின் அமைவிடமான ஜென்ம ராசியையும், கதி என்பது கதிரவன் எனப்படுகின்ற சூரியன் அமர்ந்துள்ள ராசியை குறிக்கும்.

லக்ன பாவக ரீதியாக நேரம் சரியில்லை எனும்போது ஜென்ம ராசியினை கொண்டு நல்ல நேரம் உள்ளதா ஆராய்வர். இது கோசாரம். அதுவும் சரியில்லை என்றால் சூரியனின் இருப்பிடத்தை கொண்டு பலனுரைப்பர். மேற்கத்திய நாடுகளில் சூரியன் அமர்ந்துள்ள ராசியை தான் ஜென்ம ராசியாகக் கருதுவர். அதாவது விதி, மதியை விட கதிக்குதான் அதிக முக்கியதுவம் அளிப்பர். ஒரு மனிதனின் வாழ்கையில் 30 வருஷம் விதியாகிய ஜென்ம லக்னமும், 30 வருஷம் மதியாகிய ஜென்ம ராசியும், அடுத்த 30 வருஷம் கதியாகிய சூரியனின் அமர்ந்து உள்ள ராசியும் விதியை திர்மானிக்கிறது.
முதல் 30 வருஷம் வாழ்க்கையில் சிரமப்படுபவன் அடுத்த 30 வருஷம் வளமாய் இருப்பான். பெரும்பாலான ஜோதிட நூல்கள் சொல்வது விதி என்ற லக்னமே வாழ்க்கையை தீர்மானிக்கிறது.
மதியைவிட விதியின் வலிமையே பெரியது.

No comments:

Post a Comment