Wednesday, 8 July 2015

குழந்தை செல்வங்கள்:



அவரவர் முற்பிறவியில் செய்த நல்வினை. திவினைகளின் தன்மைகளை பார்த்து பிரம்ம தேவனால் உருவாதே ஒரு ஜெனனம். பிறக்கும் நேரம், விதிபலன், நட்சத்திரம் எல்லாம் இறைவனின் கால கணிதத்தில் பதிவு செய்த பின்தான் இந்த உலகத்தில் கண் விழிக்கிறார்கள். பிறக்கும் எல்லா குழந்தைகளும் ஒரு வருஷத்துக்கு கடவுளின் குழந்தைகள். எல்லா குழந்தைகளுக்கும் ஒரு வருஷம் வரை பாலரிஷ்ட தோஷம் உண்டு. ஒரு வயது வரை ஜாதகம் எழுத கூடாது. மூன்றாவது நாள் நட்சத்திரம், ராசியை மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும். 16 - நாள் சென்ற பின் ஒரு சுத்தமான வெள்ளை துணியில் ஒரு பிடி வேப்ப இலையை வைத்து முடிந்து கொள்ள வேண்டும். பூஜை அறையில் வைத்து தினமும் கண்களில் வைத்து பெயர், நட்சத்திரம் சொல்லி ஆயுள், அறிவு, ஆற்றலை தரும்படி வேண்டி கொள்ள வேண்டும். இவ்வாறு 90 நாட்கள் வேண்டி கொண்டு பின் ஓடும் ஆற்றில் அல்லது கோவில் குளத்தில் விட்டுவிட வேண்டும்.

பின்னர் 3 வது மாதத்தில் இருந்து அரைகுயர் நோட்டில் உங்கள் குழந்தையின் பெயரை தினமும் 48 முறை எழுதி 48 நாட்கள் எழுதி பின்னர் அந்த நோட்டை கோவில் குளத்தில் விட்டு விட வேண்டும்.

ஒரு வருஷம் கழித்து ஜாதகம் எழுதி குலதெய்வம், எல்லை தெய்வம், ஆகியவற்றிற்கு தத்தம் மாற்றி கொடுக்க வேண்டும். கீழ்கண்ட பொருட்களுடன் கோவிலுக்கு சென்று

1. 2 படி தவிடு
2. மஞ்சள் வேஷ்டி - 1
3. மஞ்சள் துண்டு -1
4. அர்ச்சனை சாமான்கள்
5. 11 ருபாய் காசு
ஆகியவற்றை கொண்டு பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியோர்களிடம் தவிடுக்கு பிள்ளையை மாற்றி கொண்டு அய்யருக்கு வேஷ்டி துண்டு தானமாக தர வேண்டும்.

காசை ஊண்டியலில் செலுத்த வேண்டும்.
முருகனுக்கு தத்தம் கொடுத்தால் கருப்பட்டி வாங்கி கொடுக்க வேண்டும். பெருமாளுக்கு தத்தம் கொடுத்தால் துலாபாரம் கொடுக்க வேண்டும். பொதுவாக பெயர் வைக்கும் பொது விதி என் பிறவி எண்ணுக்கு பெயர் வைப்பதைவிட பிரமிடு முறைபடி கூட்டு எண் 1, 3, 6, 9, என்ற முறையில் இன்சியலுடன் சேர்த்து வைப்பதே நல்லது. உதாரணமாக
V.Bindu.
621546
83691
2961
267
84
3
இப்படி தான் பிரமிடு எண் கண்டு பிடிக்கலாம். இந்த எண்கள் காலண்டர், டைரி போன்றவற்றில் ஆங்கில வார்த்தைக்கு ஒவ்வொறு எண்தெரியும்.
நான் ஒரு முறை தஞ்சாவூர் சரஸ்வதி மாஹலில் 90 வயது உள்ள ஓரு சிவாச்சாரியாரை சந்தித்தேன். அஅப்பொழது அவர் என்னிடம் தஞ்சையை இராஜராஜ சோழன் ஆண்ட பொழுது அவரது வம்சாவளியினர் குழந்தைகளுக்கு அம்மை, பாலரிஷ்ட தோசம் வரக்கூடாது என்பதற்காக தான் புன்னைநல்லுர் மாரியமமன் கோவிலை கட்டி குழந்தைகளுக்கு தத்தம் மாற்றி கொடுக்கும் பழக்கம் வந்ததாம்.

நாமும் நம்முடைய செல்வங்களை காப்போம்.
நாளை முதல் 27 நட்சத்திர பலன்களும் கோவில்களையும் பார்ப்போம்.

No comments:

Post a Comment