Wednesday, 8 July 2015

ஆயில்ய நட்சத்திர நண்பர்களே:


உங்களுடைய நட்சத்திர அதிபதி புதன் நல்ல புத்தியை நிலைக்க செய்பவர். கல்விக்கும் அறிவுக்கும் அதிபதி அறிவியல் மேதைகளையும் பேச்சாற்றல். கணிதம், வைத்தியம் ஜோதிடம். சம்பந்தபட்ட வகையில் பட்டங்கள் பதக்கங்களை கொடுப்பார்.இருந்தும் இல்லாதவர்களை போல பேசுவார்கள்.அகங்கார குணங்கள் மற்றவர்களிடம் சாமர்த்தியமாக பேசி தன்னுடைய காரியங்களை சாதிக்கும் வரை அவர்களை சுற்றி வருவார்கள். கல்நெஞ்சமும் அதிக கோபமும் உடையவர்கள். தான் நியாயமாக செல்லாமல் அடுத்தவர்களுக்கு நியாயம் பேசுவார்கள். தாழ்ந்த நிலைகளில் உள்ளவர்கள் சகவாசத்தால் தன் நிலையை தாழ்த்தி கொள்வார்கள்.சில நேரங்களில் தைரியசாலி. சில நேரங்களில் கோழையாக இருப்பார்கள்.
சித்திரை மாதம்.ஆவணி மாதம் பிறக்கும் பொழது சூரியனுடன் சேரும் பொழது நிபுனத்துவம் பெற்று செழிப்பான வாழ்க்கை அமைத்து கொள்வார்கள்.
ஜாதகத்தில் பாவ கிரகத்துடன் சேரும் பொழது பாவ பலன்களை செய்வார்.சுப கிரகங்களுடன் சேரும் பொழது சுப பலன்களை தருவார்.
தனித்த புதன் நல்ல புத்திசாலிதனத்தை கொடுப்பார்.புதன் 1, 2, 4, 7, 10, ல் அமர்ந்து ஆட்சி.உச்சம்.நட்பு பெற்று அதன் தசா புத்தி காலங்களில் ஜாதகரை உன்னத உயர்வான நிலைக்கு கொண்டுவருவார்.
ஆசிரியர, வக்கில், நிதிபதிகள், கணக்கு, காசாளர், ஜோதிடர், புரோகிதர் ஆகியோரை தோற்றுவிப்பார்.
மறைந்த புதன் நிறைந்த தனத்தை தருவார்.ஆயில்யம் நட்சத்திர கோவில். கும்பகோணம் அருகே திருந்துதேவன்குடி ஊரில் உள்ள கற்கடகேஸ்வரர் கோவிலுக்கு ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் தரிசனம் செய்தால் சகல பாக்கியம் கிட்டும்.

No comments:

Post a Comment