Sunday, 12 July 2015

திருவோண நட்சத்திர நண்பர்களே:



      உங்களுடைய நட்சத்திர அதிபதி சந்திரன். திருமலை பெருமாள் அவதரித்த நட்சத்திரம். பெருமையையும், புகழையும் தர கூடிய நட்சத்திரம். ராஜ கிரகங்கள் என்று வர்ணிக்கப்படும் சூரியன், சந்திரன் மட்டும் தான். பகலில் சூரியனின் ஒளிவட்ட பாதையில் சந்திரன் செல்வார். இரவில் சந்திரனின் ஒளி வட்ட பாதையில் சூரியன் செல்வார். அதனால் தான் இரண்டு கிரகங்கள் ராஜ கிரகங்கள்.

    மிடுக்கான தோற்றமும், எளிமையான வாழ்க்கை வாழ வழிசெய்வார். வசதி வாய்ப்புகளை கொடுத்து ஆடம்பரம் இல்லாமலும், தன்னடக்கம், நன்னடத்தை காப்பாற்றி கொள்வார்கள். வாக்கு, நாணயத்தை காப்பாற்றுவதில் வல்லமை உடையவர்கள். எளிதில் கோபப்பட மாட்டார்கள். கோபம் வந்தால் யானையை அடக்க முடியாத அளவுக்கு கோபம் வந்துவிடும்.

      ஜாதகத்தில் சந்திரன் வலுபெற்றால் ஆட்சி உச்சம் நட்பு பெற்றாலும் வலுபெற்றாலும் அறிவு, ஆனந்தம், புகழ், ஆற்றல், அழகு, சுக போகம் அனைத்தையும் கொடுப்பான். 1, 4, 7, 10-ல் வலு பெற்றால் அரசருக்கு ஒப்பான வாழ்க்கை கொடுப்பார். 4-வது வீட்டில் பலம் பெற்றால் அதிகார மிக்க பதவிகளை கொடுப்பார். லக்ன பாவம் சூரிய பாவம் கெட்டாலும், சந்திர பாவம் வலுத்தால் போதும்..

     ராகு, கேது பாதகாதிபதி சம்பந்தம் பெறாது. நல்ல நிலையில் இருந்தால் மனதிடம் சிறப்பாக இருக்கும். வளர்பிறையில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டம பாதிப்பு இருக்கும். தேய்பிறையில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டம பாதிப்பு இருக்காது.

    திருவோணம் நட்சத்திர கோவில் சென்னை காவேரிபாக்கம் அருகில் உள்ள திருப்பாற்கடல் ஊரில் இருக்கும் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயம் சென்று வழிபடுவது நல்லது.

No comments:

Post a Comment