Tuesday, 7 July 2015

பௌர்ணமி:


      பெளர்ணமி அன்று சூரிய, சந்திர சக்தி பூமிக்கு வருகிறது என வானியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதனால் தான் இந்த பௌர்ணமி தினத்தன்று கோயில் விழாக்களை நடத்துமாறு புராணங்களிலும் கூறியுள்ளது. இதை மேல் நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது மேல் நாட்டினர் இரவில் ஆணும், பெண்ணும் சேர்ந்து நைட் கிளப்களில் ராக் & ரோல் நடனம் ஆடுகின்றனர். நம்மூரில் காட்டுவாசிகள் பௌர்ணமி தினத்தன்று கோவில் விழாக்களில் இரவில் நடனமாடுவதை கவனிக்கலாம். இதனால் ஆண், பெண் இருவரது உடலிலும் மின்காந்த உணர்ச்சிகளின்வெப்பம் உண்டாகி இருவரின் நாளமில்லா சுரப்பிகளும் சமமாக சுரக்கின்றன. சுமார் 27 வகையான மின்காந்த ரசாயன என்சைம் அயனிகள் 27 நட்சத்திரங்களாக உடலெங்கும் பரவுகின்றது. உடலில் சகல திசுக்கள் மீது பௌதீக மின்காந்த ரசாயன கிரியைகளை 27 - என்சைம்களும் உண்டாக்கி ஒரு மாதத்திற்கு தேவையான உடல் சக்தியும் பொலிவையும் இருவருக்கும் கிடைக்க செய்கிறது. இதுவே பாட்டும், பரதமும் சிவசக்தி தாண்டவம் என தமிழ் நூல்கள் கூறுகின்றன. இதில் எவ்வளவு நடைமுறை வாழ்க்கையில் விஞ்ஞான ரீதியாகவும் ஒத்துப்போவதை கவனிக்க பருவத மலை, திருவண்ணாமலை போன்ற மலைகளை பௌர்ணமி இரவில் கிரிவலம் வருபவர்கள் உடல் வலிமை. முகப்பொலிவு ஊக்கம் பெற்று நலமுடன் வாழலாம்.

No comments:

Post a Comment