Wednesday, 8 July 2015

புனர்பூச நட்சத்திர நண்பர்களே:


உங்களுடைய நட்சத்திராதிபதி குரு ராமர் அவதரித்த புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்ததால் தர்மத்திற்கு தலை வணங்கி நீதி நெறி தவறாமல் நடப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சால் நட்பு வட்டாரம் குடும்பம். அடுத்தவர்கள் நலனில் அக்கறை காட்டி உங்களுக்கு என்று தனிதத்துவமும் மதிப்பு மரியாதையும் பெற்றிருப்பீர்கள். ஒரு காலகட்டம் உங்களை வைத்து முன்னேறியவர்கள் எல்லாம் உங்களை உதாசீனம் செய்தவர்கள் எல்லாம் ஒரு கால கட்டத்தில் உங்களுடைய உதவியை நாடி வருவார்கள். செல்வாக்கை தேடும் அளவுக்கு பணம், பொன், பொருளுக்கு ஆசைப்பட மாட்டீர்கள். வாக்கு நாணயத்தை காப்பாற்றி கொள்வீர்கள். குடும்பம், குழந்தைகளால் அன்பும் ஆதரவும் கடைசி வரை கூட வரும்.
பொதுவாக குரு 1, 5, 9,ல் இருப்பது நல்லது. லக்னம், ராசி, கோசாரத்தில் குரு ஜாதக கட்டத்திற்கு 2, 5, 7, 9, வரும் பொழுது அதிக நன்மையை உங்களுக்கு செய்வார்.
பொதுவாக குரு பகவான் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு. வேறு கிரகங்களுடன் சேர்ந்தால் யோக பலன்களை வாரி வழங்குவார் பொதுவாக நிர்வாகம், வங்கி, பைனான்ஸ், கணக்கு வழக்கு C.A சம்பந்தபட்ட படிப்பு தொழில் விஞ்ஞான ஆராய்ச்சி போன்ற துறைகளில் சாதிக்க வைப்பார்.
தேடி போய் உதவி செய்யும் குணமுடையவர்.
குருவுக்கு என்று நட்சத்திர கோவில்
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் இருக்கும் ஸ்ரீஅதிதீஸ்வரர் ஆலயம் சென்று ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்தால் புனர்பூச நட்சத்திரம் வலிமையுடன் செயல்படும்.

No comments:

Post a Comment