Tuesday, 7 July 2015



1. சிவ யோகம்:

லக்னத்திற்கு 5 - க்குடைய பஞ்சமாதிபதியும் 11- க்குரிய லாபாதிபதியும், 9 - ம் இடமான பாக்ய ஸ்தானத்தில் இருந்து 10 - க்குடையவர் 5 - ல் இருந்தால் சிவயோகம் ஆகும். இந்த யோகம் உள்ளவர்கள் அரசியலில் பெரும் செல்வாக்கு பெற்று நாட்டை ஆளும் தகுதி உடையவராக இருப்பர். எல்லா வசதிகளும் நிறைந்திருக்கும். குணமான மனைவி, கணவன் அமையப் பெற்றவராக 
இருப்பார்.

2. மாருத யோகம்:

லக்னத்துக்கு 3,6,11 - ஆகிய வீடுகளில் ஒன்றில் ராகு இருந்து லக்னத்தை சுப கிரகங்கள் பார்த்தால் மாருத யோகம். இந்த யோகமிருந்தால் முன்னேற்றம், அதிர்ஷ்டம் நிறைந்த வாழ்க்கையாக இருக்கும். திடீர் திடீரென அதிர்ஷ்ட வாய்ப்புகளும் பெரும் செல்வமும் தேடிவரும்.

3. பிரபை யோகம்:

லக்னத்திற்கு பதினொன்றுக்குரிய லாபாதிபதி உச்சம் பெற்று சுக்கிரனுடன் சேர்ந்து இருந்து அந்த இடம் 1,4,7,10 - ஆக இருந்தால் பிரபை யோகம். முன்பகுதி யோகமுள்ளவர் அரசியலில் ஈடுபாடு செல்வாக்கு பெற்று இருப்பார். உயர்ந்த பதவியும் பெறுவர். தியாக உள்ளத்துடன் இருப்பார். பணம் பல வழிகளில் வந்து சேரும்படியாக மூன்று வகை தொழில்களை உடையவராக இருப்பார்.

யோகங்கள் பலவிதம். ஒவ்வொன்றும் கர்மாவின்படி அமைவது தான்.

No comments:

Post a Comment