Friday, 10 July 2015

கேட்டை நட்சத்திர நண்பர்களே:


          உங்களுடைய நட்சத்திர அதிபதி புதன். கேட்டையில் பிறந்தால் கோட்டை கட்டி வாழலாம் என்பது பழமொழி இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் முதலில் கோட்டையை விட்டு தான் பின் கோட்டையை பிடிக்குலாம். நண்பர்கள், உற்றார், உறவினர் சூழ்ச்சியில் சிக்கி பின்னர் தான் புத்தி வந்து தவற்றை உணர்ந்து வாழ்க்கையை மேம்படுத்தி கொள்வார்கள். நல்ல புத்தியையும், நல்ல சிந்தனையும் கொடுக்கும் நட்சத்திரங்களில் இதுவும் ஓன்றுதான் என்ற அகந்தையை ஓரு பொழதும் விட்டு கொடுக்க மாட்டார்கள். கலைகளில் தேர்ச்சியும் எழுதுவதில் கீர்த்தியையும் தன்னை பற்றி அடுத்தவர் பெருமையாக பேசுவதை ரசிப்பதும், தர்மகுணம் கொண்டவர்களாகவும், தைரியசாலியாகவும் இருப்பார்கள்.
சில காலம் சிலருக்கு அஞ்சி பயந்து ஓளியும் இவர்கள் ஒரு முறை நேருக்கு நேர் நின்று சவால் விட்டு எதிர் நடை போடுவார்கள்.
முன்கோப குணங்களுடன் குறும்புத்தனம் அழகாய் பேசும் திறனுடன் இருப்பார்கள்.

பகை வீட்டில் புதனின் நட்சத்திரம் இருப்பாதல் சில மனிதர்கள் அடுத்தவர்களை ஏமாற்றி சுய நலவாதியாக காலம் நடத்துவார்கள்.
புதன் 1, 4, 7, 10,ல் இருந்து ஆட்சி உச்சம். நட்பு பெற்றால் வழக்கறிஞர் கணித சாஸ்திரம். வங்கி தொடர்பு, ஜோதிடர்கள், புரோகிதர்கள், சிறு தொழில் அதிபர்களை உருவாக்குவார்.
மறைந்த புதன் நிறைந்த தனத்தை கொடுப்பார். புதன் வலுபெற்றால் தாய்மாமன் வகையில் யோகத்தை கொடுப்பார்.
கேட்டையின் மைத்துனன் கட்டையில் போவான் என்பது பழமொழி. இது நடைமுறையில் சாத்தியம் இல்லாதது. பஞ்சாங்கள் தான் சொல்லுதே தவிர சாஸ்திர நூல்களில் ஆதார குறிப்புகள் இல்லை.
சூரியன், சனி, சுக்கிரன் சேர்க்கை, பார்வை புதனுக்கு கிடைத்தால் அறிஞன் ஆக்குவான். கிரக சேர்க்கை பெற்ற புதன் ஜாதகரை உன்னத நிலைக்கு கொண்டுவருவான்.
புதன், ராகு, கேது பாதகாதிபதி சாரம் தொடர்பு பெற்றால் தன்னுடைய நட்சத்திரத்தை பலம் இழக்க செய்து வீடும்.கேட்டைக்கு உண்டான கோவில். தஞ்சாவூர் அருகில் பசுபதி கோவில் என்ற ஊரிலுள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயம் சென்று வணங்குவது நல்லது.

No comments:

Post a Comment