Wednesday, 8 July 2015

கன்னி ராசி நண்பர்களே :


இது வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரித்த குரு பகவான் இப்பொழுது 12-ம் பாவமான விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார்.
வாய்மை யுற்றிட ராவணன் முடி பன்னிரெண்டில் வீழ்ந்ததும் என்பது பாடல். கோட்சாரத்தில் குரு 12 ல் சஞ்சரிக்கும் காலத்தில் மாறாக பயமும், பதவி நாசமும் ஏற்படும். என்பது பொது விதி தான்.
11-ல் குரு இருந்த காலத்தில் நீங்கள் நினைத்ததை விட ஏமாற்றம் அடைந்தது தான் மிச்சம்.
அதற்கு காரணம் கன்னி, மிதுனம் ஆகிய வீடுகளுக்கு பாதகாதபதி குரு தான். தனுசு, மீனம் ஆகிய வீடுகளுக்கு பாதகாதிபதி புதன் தான். அதனால் கெட்ட இடத்திற்கு குரு வரும் காலம் கெட்டவன் கெட்டிட கீட்டிடும் ராஜ யோகம் என்ற அடிப்படையில் மிகவும் நன்மையை செய்யும்.
4-ம் வீடு பூமி, வீடு,வாகனம், சுகம், கல்வி, தாய் ஆகிய ஸ்தானங்களை பார்ப்பாதல் அதன் அடிப்படையில் யோகங்கள் வரும்.சகல காரியங்கள் சித்தி பெறும்.
6-ம் பாவத்தை குரு பார்ப்பாதல் கடன் சுமை குறையும், நோய் நொடி நீங்கும், தொழில் அபிவிருத்தி உண்டாகும். வர வேண்டிய தொகைகள் வந்து சேரும்.
8-ம் பாவத்தை குரு பார்ப்பாதல் வழக்கு வெற்றிகள் சாதகமாகும், மரண பயம் நீங்கும். எதிர்பாராத வகையில் பணவரவு வரும்.
ஆடி மாதம் வரை ஏழரை சனி வக்கிரத்தில் இருப்பதால் கவனமாக இருக்கவும்.
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும், வேண்டுவது பொறுமை, வேண்டாதது கோபம்.
ஒரு முறை திருவெண்காடு சென்று புதனுக்கும், குருவுக்கும் அர்ச்சனை செய்யவும்.

No comments:

Post a Comment