பூராட நட்சத்திர நண்பர்களே:
உங்களுடைய நட்சத்திர அதிபதி சுக்கிரன், குருவின் வீட்டில். குருவும், சுக்கிரனும் பகைவர்கள். வீடு கொடுக்கும் குரு சுக்கிரனின் நட்சத்திரத்தை வலுபெற வைப்பார். அய்யரும், ஐயங்காரும் ஒரு இடத்தில் சந்தித்தால் அண்ணா நல்ல இருக்கிறீங்களா? கேட்பது போல.
பிறந்தது முதல் முழுமையான யோகத்தை அனுபவிக்க கூடியவர்கள். வசதி, வாய்ப்புகள், அந்தஸ்து, கௌரவமான வேலை வாய்ப்புகள். தொழில்கள் அமையும். எல்லோரிடமும் பணிவு, தெய்வ நம்பிக்கை, நிலையான வசதி, வாய்ப்புகள் பெற்று நியாயம், தர்ம சிந்தனையுடன் செயல்படுவார்கள். மத்திய அரசு பணி, கணினி சம்பந்தபட்ட தொழில்கள், வெளிநாட்டு வர்த்தகம் போன்ற தொழில்கள் ஏற்றம் தரும்.
நினைக்கும் செயலை செய்து முடிக்காமல் ஒய மாட்டார்கள். கங்கண குணம் அதிகமாக இருக்கும். எந்த செயலிலும் அடுத்தவர்களுக்கு எந்த பாதிப்பையும் தரமாட்டார்கள். முதன்மையான கல்வி யோகம் உண்டு.
பூராடத்தின் கழுத்தில் நூலாடாது என்ற பழமொழி உண்டு. அதன் பொருள் என்ன என்றால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லாம் எல்லா நூலையும் கற்கும் ஆற்றலை பெற்று இருப்பார்கள் என்பது தான் உண்மையான அர்த்தம்.
பூராடம் வாழ்க்கையில் போராடும் என்பார்கள். எல்லா செல்வமும் இருந்தாலும் அனுபவிக்க முடியாது என்பது தான் பொருள்.
சுக்கிரன் 1, 2, 4, 5, 8, 9, 10, 11, 12,ல் இருந்தாலும் செவ்வாய், குரு, புதன் பார்வை பெற்றாலும் சேர்ந்தாலும். முதல் தர யோகத்தை கொடுப்பார். உச்ச நிலையைவிட நட்பு நிலை நல்லது.
ராகு, கேது, சனி சாரம் சேர்க்கை பெற்றால் களத்திரத்தால் உபத்திரத்தை கொடுப்பார். திருமண தாமதம், குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் தீரவும் இந்த நட்சத்திர கோவில் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே கடுவெளி கிராமத்தில் அருள் பாவிக்கும் ஆகாசபுரீஸ்வரர் சிவாலயம் சென்று வாசனை திரவியங்கள் வாங்கி கொடுத்து தரிசனம் செய்வது நல்லது.

No comments:
Post a Comment