Wednesday, 8 July 2015

அரணம் செய்யும் தசா புத்திகளின் சுட்சுமம்:



எந்த ஒரு கிரகமும் ஜெனன கால ஜாதகத்தில் தமது நீச்ச வீட்டை விட்டு உச்ச வீட்டை நோக்கி செல்லும் பொழுது ஆரோகன கதியில் இருப்பதாக பொருள் கொள்ள வேண்டும். அப்படி உள்ள கிரகங்களின் தசா புத்திகள் எல்லாம் யோகத்தை தரும். பலன்கள் முழுமையான சுப பலன்களை தரும்.

அப்படி இன்றி ஒரு கிரகம் உச்ச வீட்டை நிச வீட்டை நோக்கி செல்லும் பாதையில் இருந்தால் அது அவரோகணகதியில்இருப்பதாக பொருள் கொள்ள வேண்டும். அந்த கிரகத்தின் தசா புத்திகள் எல்லாம் அற்ப சுப பலன்களை தரும் என்பது சாஸ்திர விதி.

பொதுவாக அஷ்டமாதிபதிகள் திசைகள் கெடுபலன்களை தரும் என விதி இருந்தாலும்.

1. மேஷ லக்னத்திற்கு அட்டமாதிபதி செவ்வாய்
2. துலாம் லக்னத்திற்கு அட்டமாதிபதி சுக்கிரன்
3. தனுசு லக்னத்திற்கு அட்டமாதிபதி சந்திரனும்
4. மகர லக்னத்திற்கு அஷ்டமாதிபதி சூரியன்.
ஆகிய கிரகங்கள் தமது தசா புத்தி காலங்களில் அஷ்டமாதிபதி தோஷங்களை தராது என்பதும் சாஸ்திர விதியே. மேலும் அறிவோம்.

No comments:

Post a Comment