Friday, 10 July 2015

சுவாதி நட்சத்திர நண்பர்களே:

சுக்கிரன் வீட்டில் ராகுவின் நட்சத்திரம், தெய்வ வழிபாடுகள், வேத சாஸ்திரங்கள், பக்தி, பெரியோர்களிடம் மரியாதை, நல்ல குணம், பெரிய மனிதர்கள், சகவாசத்தை ஏற்படுத்தி நேர்மையாகவும் எல்லோருக்கும் ஆலோசனைகள் வழங்குவீர்கள். இரண்டாவது திசையே குரு திசை வருவதால் அரசாங்க பதவி, புகழ் இவற்றையும் அதிகாரத்தையும் தருவார். உலக விஷயங்களில் அறிவையும், உள்ளத்தில் தெளிவை தருவார். மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய வீடுகளில் ராகு பலம் பெற்றால் பெண்கள் மூலம் சுகத்தையும், செல்வத்தையும் தருவான். அன்னிய தேசம் கடல் தாண்டி வேலை வாய்ப்பை உருவாக்குவான். மாற்று இனத்து மனிதர்கள் மூலம் செல்வாக்கை தருவான். ஊர் முழுதும் உலகம் முழுதும் சுற்றி உயர் புகழ் பெறவும் பொருள் வளம் பெற வைப்பார். ராகு, சூரியன், சந்திரன் சேர்க்கை பெறாமல் 3, 6,11 - இருந்தாலும் கேந்திரத்தில் இருந்தாலும் கற்ற வித்தையால் செழிப்பை தருவார்.

செவ்வாய், சனி சாரத்தில் ராகு இருந்தால் கள்ளம், கபடு, சிறை வாசம் போன்ற கெடு பலனை கொடுப்பார்.

ராகு கிரகணம் தோஷம் பெற்றால் சென்னை பூந்தமல்லி திருமழிசை அருகில் சித்துகாடு என்ற ஊரில் உள்ள ஸ்ரீ தாந்திரீஸ்வரர் சிவ ஆலயம் சென்று ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் தரிசனம் செய்வது நல்லது.

No comments:

Post a Comment