Wednesday, 8 July 2015

கிருத்திகை நட்சத்திர நண்பர்களே:


உங்கள் நட்சத்திர அதிபதி சூரியன் 1 ம் பாதமாக செவ்வாய் வீட்டில் இருந்தாலும் சூரியனின் உச்ச வீடு மேசமாகும்.நம்முடைய ஜாதகத்தில் ஆன்மாகாரகன்.சூரியன் பலமாக அமைந்தால் எப்பொழதும் அதிகாரமிக்க பதவி புகழ் அந்தஸ்து செல்வாக்கு தனம் ஆகியவற்றை கொடுப்பார். எல்லா மொழிகளையும் கற்ற மேதையாக்குவார்.முன் கோபியாகவும் சுத்தமான நிலையில் வாழம் முறையையும்.திறமையான மனிதராக வாழ்ந்தாலும் 20 வயதில் ராகு திசை நடப்பு கால கட்டங்களில் வந்தால் அரசியல். தொழில் நுட்பம் மத்திய அரசு பணி ரானுவம் ஆகியவற்றில் பணிபுரியம் வாய்ப்பை கொடுப்பார்.வேத சாஸ்திரங்களில் நம்பிக்கை இருக்காது.தன்னுடைய சுய முயற்சியால் வாழ்க்கையில் பலவித வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்விர்கள்.முதாதையர் சொத்துகள் இருந்தாலும் அதை அனுபவிக்க இயலாமல் கோர்ட் வம்பு வழக்கு தொடுப்பார்கள்.
சூரியன் ஆட்சி உச்சம் நட்பு பெற்றால் குரு பார்வை இருந்தால் சகல காரியமும் சாதிக்க கூடிய வல்லாமை உண்டாகும்.2, 4, 6, 8,9,ஆகிய தசைகள் புத்திகள் நன்மையை செய்யும்..
சூரிய்ன் ராகு கேது சனி சம்பந்தம் பெற்றால் முண்னோர் வகை சாபம் குடும்பத்திற்கு உண்டு.சித்த பிரம்மை போன்ற மன நோய்கள் ஏற்படுத்துவார்.
சூரியனுக்கு முன்னும் பின்னும் சுப கிரகங்கள் இருப்பது வாசி யோகம் வேசி யோகம் அமைந்து செல்வ சீமானக வாழ்க்கை அமையும்.
சூரியனுக்கு குரு சந்திரன் செவ்வாய் முவரும் நட்பு.
மற்ற கிரகங்கள் எல்லாம் நட்பு சமமும் ஆகும்.
கார்த்திகை நட்சத்திரத்திற்கு கோவில்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகில் கஞ்சனாகரம் என்னும் ஊரிலிருக்கும் ஸ்ரீ காத்ர சுந்தரேசுவரர் ஆலயம்.

No comments:

Post a Comment