Tuesday, 7 July 2015

ஜாதகமும் யோகங்களும்:

1. உபசரி யோகம்:
சூரியன் நின்றிருக்கும் வீட்டிற்கு முன்னும், பின்னும் சுபகிரகங்கள் இருந்தால் உபசரி யோகமாகும். இந்த யோகம் இருந்தால் வசதியுடன் வாழ்வர். பலரும் மதிக்கும் நிலையில் பெருமை பெறுவர். அரசாங்கத்தாலும், அரசாங்க அதிகாரிகளாலும் பெருத்த யோகம் உண்டாகும்.
2. வசுமதி யோகம்:
லக்னம், ராசி இவைகளுக்கு 3,6,10,11, சுப கிரகங்கள் இருந்தால் வசுமதி யோகமாகும். இந்த யோகம் உள்ளவர் சகல செல்வங்ளும் பெற்று வசதியுடன் வாழ்வர். எங்கும் எப்போதும் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.
3. நாபி யோகம்:
லக்னத்திலும், லக்னத்துக்கு 6,7, 8, ஆகிய இடங்களில் சுப கிரகங்கள் மட்டுமே இருக்குமானால் நாபி யோகம்.
லக்னத்துக்கு 11- ல் குரு இருந்து அந்த வீட்டுக்குறிய லாபாதிபதி சந்திரனுடன் கூடி பாக்கியமான ஒன்பதில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு. அறிவு நுட்பமானவர். தாராள மனமுள்ளவா். வசதியும் வளமையும் மிக்கவர். பாரம்பரிய பூர்விக சொத்துகள் கிடைக்கும் பாக்கியம் உள்ளவர்.
4. திருமூர்த்தி யோகம்:
லக்னத்துக்கு இரண்டுக்குரிய தனாதிபதி இருந்த வீட்டுக்கு 2, 8,12, ஆகிய இடங்களில் பாவர்கள் கூடியிருந்தால் திருமூர்த்தி யோகமாகும். இந்த யோகம் இருப்பவர்கள் வசதியான வாழ்க்கை அமையும். சகல பாக்கியங்களும் பெற்று சுகமாக வாழ்வர் ஓரு சிலர் பரம்பரை பரம்பரையாக பலர் மதிக்கும் பிரபலமான குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

No comments:

Post a Comment