Tuesday, 7 July 2015

நம்புங்கள் நல்லதே நடக்கும்:

 

       உற்ற கலை மடந்தை இன்னும் ஒதுகிறாள். இதன் பொருள் கல்விக்கு அதிபதியான சரஸ்வதிதேவி இன்னும் படித்து கொண்டே இருக்கிறாள். எவ்வளவு படித்தாலும் தெரிந்து இருந்தாலும் அனுபவ அறிவு மட்டும் தான் கைகொடுக்கும்.
ஜோதிடம் என்பது ஓரு வழி காட்டி தானே தவிர அதுவே வாழ்கை அல்ல. எத்தனையோ ஜோதிடர்களை சந்தித்தாலும் பலன் கேட்டாலும் பரிகாரம் செய்தாலும் பலனே நடக்கவில்லை என நொந்து போனாலும் உங்களுடைய கர்மா ஒத்து வந்தால் தான் எல்லாமும் கைகூடி வரும்.
அது ஜோதிடர்களின் தவறு அல்ல. பிரம்மா தீர்ப்பின் படி தான். ஜாதகம் எவ்வளவு சாதகமாக இருந்தாலும் விதியின் சீற்றத்துக்கு நாம் கஷ்டபட்டு தான் ஆக வேண்டும்.
பெரிய ஜோதிட வித்வான்கள் சொல்வது கூட நடக்காது. ஓரு கிளி ஜோதிடன் சொல்வது அப்படியே நடந்து விடும்.
உங்கள் வாழ்க்கை உங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் தான் அமையும். இறைவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது. அவர் கொடுக்க கூடாததை யாரலும் கொடுக்க முடியாது.
நினைத்த ஒரு காரியம் தடைபட்டு வந்து கொண்டே இருந்தால் நாட்டு மருந்து கடையில் வெள்ளருக்கு நார் கிடைக்கும் அதை வாங்கி திரி நூல் அளவுக்கு நறுக்கி நல் எண்ணெயில் ஊற வைத்து கொள்ளுங்கள். தினமும் மாலை நேரத்தில் விநாயகர் கோவிலுக்கு சென்று அகல் விளக்கில் திரியால் நல்ல எண்ணெய் தீபம் 48 நாட்களுக்கு தீபம் போடுங்கள். எல்லா தடையும் விலகி விடும்.
ஓம் ஸ்ரீம் கரிம் கலிம் கம்!
கணபதாய நமக.

No comments:

Post a Comment