வக்ர கதியில் கிரகங்களின் அவஸ்தைகள் :
வக்ரம் என்றால் பின்னோக்கி செல்லுவது என்று பொருள்.
ஜாதக கட்டத்தில் 4 - வது வீட்டில் ஒரு கிரகம் வக்கிரம் என்றால் அது 3 - வது வீட்டின் பலனை தான் செய்யும். கோசாரத்தில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் உலாவி வரும் பொழுது ஒரே வீட்டிலோ அல்லது பக்கத்து வீடுகளில் உலாவி வரும். சில மாதங்கள் செவ்வாய் ஒரே வீட்டில் சில மாதங்கள் தங்கி விடும். கோசாரத்தில் குரு, சனி, ஆகிய கிரகங்களுக்கு 5 - வது இடத்தில் சூரியன் வரும் பொழுது அதிக வக்ர தன்மையால் இரு கிரகங்களும் செயல் இழந்து விடும். அந்தக்கால கட்டங்களில் அந்த திசை, புத்தி, நடப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். 9 - வது வீட்டில் சூரியன் வரும் பொழுது வக்ர நிவர்த்தி உண்டாகிவிடும்.
ஜாதக கட்டத்தில் வக்ரத்தில் ஒரு கிரகம் இருந்தால் கோசாரத்தில் வக்ர கதி ஏற்படும் பொழுது வக்கிரத்தில் உக்கிரமாக செயல்பட்டு அதிக நன்மைகள் செய்யும்.ஜாதகத்தில் இரண்டு கிரகங்களுக்கு மேல் வக்ர கதி ஏற்பட்டால் ஜாதகத்திற்கு யோக பங்கம் ஏற்படுத்தி விடும்.இவ்வாறு உங்கள் ஜாதகம் அமையுமானால் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம் இது தான்.
விழுப்புரம் அருகே உள்ள திருவாக்கரை என்ற ஊரில் அருள்பாலிக்கும் வக்ர காளியம்மன் கோவிலுக்கு உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் சென்று உங்கள் வயதுக்கு தக்க எண்ணிக்கையில் எலுமிச்சை பழத்தை மாலையாகக் கட்டி வக்ர காளியம்மனுக்கு சாற்றி வழிபாடு செய்தால் வக்ர கதி தோஷம் விலகிவிடும்.
வாழ்க வளமுடன்!
No comments:
Post a Comment