Saturday, 25 July 2015

நவரத்தின கற்களை பயன்படுத்தும் முறைகள்:



           ஒவ்வொரு ராசிகளுக்கும் சொல்லப்படும் கற்களை நீங்களே செய்து கொள்ளலாம்.
பொதுவாக நவரத்தின கற்களை மோதிரமாக கையில் போட்டால், எப்பொழுதும் கையில் சுற்றி கொண்டே இருப்பார்கள். சில பேர் கழற்றி வைத்து விடுவார்கள். இவ்வாறு செய்தால் அதற்கு பலன்களே இருக்காது. பொதுவாக உங்கள் ராசிக்கு உள்ள கற்களை வெள்ளி தாயத்தில் அடைத்து அதற்கு உண்டான கோவில்களுக்கு அதற்கு உண்டான கிழமைகளில் சென்றால் நீங்கள் அணியும் கற்கள் ஆக்டிவ் ஆகி விடும்.  இரண்டு கற்களுக்கு மேல் இருந்தால் ஒரு கல் வைத்து மெழுகு ஊற்றி அடுத்த கல்லை வைக்க வேண்டும். ஒவ்வொறு கல்லும் மற்றொரு கல்லுடன் உரசக் கூடாது. இவ்வாறு அடைத்து தாயத்தின் மூடியை பெவி குயிக் வைத்து முடி விடலாம். தரமான கற்கள் குறைவான விலையில் கிடைக்கும் இடம்.

சஞ்சிவி ஜெம்ஸ்,
பெரியவர் கடை,
82,பெரிய செட்டித்தெரு, மாடியில் கடை.
திருச்சி செல்.98424 77153.
என்ற முகவரியில் நயமான கற்கள் கிடைக்கும் 1 காரட் 20 ருபாய் முதல் 1500 வரைக்கும் கிடைக்கும்.
அன்பு நண்பர்களே:



       நாளை முதல் 12 ராசிநேயர்களுக்கும் நவரத்தினங்கள் அணியும் முறையையும், வழிபட வேண்டிய கோவில்களையும் எழுதலாம் என்று நினைக்கிறேன்.

      நவரத்தினங்களின் வலிமை பற்றி சாந்தி பரிகார ரத்னாஹரம் நூலில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. நவரத்தின ஆபரணங்களை அணிந்து நவக்கிரகங்களை சாந்தப்படுத்தி அவற்றின் நல்லருளைப் பெறவும் உடல்நலம், மனநலம், படிப்பு, தொழில், தடைகள் அகல, சிறியவர் முதல் பெரியவர் வரை பயன் படுத்தும் விதமாக நம் முன்னோர் நவரத்தினங்களை அன்றாட வாழ்வில் உயர்வு படுத்தியுள்ளனர். எல்லோருக்கும் ஒரு குழப்பம் உள்ளது. பிறந்த நட்சத்திரத்திற்கு கல் அணிவதா? ராசிக்கு அணிவதா ? நடக்கும் திசைக்கு கல் அணிவதா? இந்த குழப்பத்தை பயன்படுத்தி கல் வியாபாரிகளும், ஜோதிடர்களும, போலியான கற்களை அதிக விலைக்கு விற்கின்றனர். அதிகபட்சம் நயமான கற்கள் 200 ரூபாய் முதல் 1500 ரூபாய்க்கு வாங்கி விடலாம்.
தெளிவான பதிவுகளை 12 ராசிகளுக்கும் எழுதுகிறேன்.

Tuesday, 14 July 2015

ரேவதி நட்சத்திர நண்பர்களே:

      நட்சத்திர அதிபதி புதன். பகை வீட்டில் நட்சத்திரம் இருந்தாலும் புதனுடைய நட்பு கிரகமான சுக்கிரன் இங்கு தான் உச்சம். அதனால் உங்கள் நட்சத்திரம் அதிக வலிமை பெறும். அழகான தோற்றம் மச்சங்கள் உடையவர்களாகவும். படித்த மேதையாக இருப்பார்கள். சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்கள். எல்லோரிடமும் சகஜமாக குணம் கொண்டவர்கள். திறமைசாலியாகவும், தைரியசாலியாகவும், எளிமையான வாழ்க்கை வாழ்வார்கள். அவர்களை பற்றி அவர்களே மேலாக நினைப்பார்கள். நீதி, நேர்மை, சத்தியம், சத்ருக்களை வெல்லும் ஆற்றல் பெற்றவர்கள். சகல சுகங்களை பெற்று வசதியான வாழ்க்கை வாழ்வார்கள்.

     கணிதம், வாதம், வைத்திய தொழிலுக்கு, காரணமான புதன் கேந்திரம் பெற்று ஆட்சி உச்சம் நட்பு சூரியன், சுக்கிரன், சனி சம்பந்தம் பெற்றால் வலிமையான கல்வி யோகத்தை கொடுக்கும். மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய வீடுகளில் புதன் இருந்தால் சாஸ்த்திர ஆராய்ச்சியும் விஞ்ஞான படிப்பும் அமையும்.


     தாய்மாமன் கிரகமான புதன் வலிமை பெற்றாலும் மறைந்தாலும் அவர்களால் அன்பும், ஆதரவும் உண்டு. பாவ கிரகத்துடன் சேர்ந்தால் பாவ பலனையும் சுப கிரகங்களுடன் சேர்ந்தால் சுப பலனையும் தருவார்கள்.
 

 ரேவதி நட்சத்திர கோவில். திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டை அருகிலுள்ள துருகுடி கைலாசநாதர் கோவில் சென்று வணங்குவது நல்லது.
உத்திரட்டாதி நட்சத்திர நண்பர்களே:

        நட்சத்திர அதிபதி சனி, குருவின் வீட்டில். உ என்று அரம்பிக்கும் மூன்று நட்சத்திரமான உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சுகம் போகம், சௌபாக்கியம் பெற்று சுகமுடன் வாழ்வார்கள் என்பது சந்திரகாவியம் என்ற ஜோதிட நூலின் விதி. மக்களின் செல்வாக்கை பெற சனி பகவான் ஜாதகத்தில் பலம் பெற வேண்டும். நல்ல நோக்கங்கள், அழகான வாக்கு, வன்மைகளுடன், செல்வாக்கு, சொல்வாக்கு, பக்தி நாட்டம், கல்வி, ஞானம் பெற்று கடின உழைப்பில் முன்னேற்றம் காண்பீர்கள்.
 திறமைசாலியாக இருந்தாலும் சொந்த புத்தி இருக்காது. பெரிய குடும்ப பொறுப்பில் இருப்பீர்கள். நட்பு வட்டங்கள் பெரிய அளவில் இருந்தாலும் இழிவான நண்பர்கள் சேர்க்கையும் இருக்கும். சனிபகவான் நட்பு ஆட்சி உச்சபலம் பெற்று கேந்திரம் பெற்றாலும் 3, 6, 11- இருந்தாலும் சுய சாரம் பெற்றாலும் சாசயோகம் பெற்று அதிகார மிக்க பதவியை கொடுப்பார். வசதி வாய்ப்புகளை தேடி போக வேண்டாம். தானே தேடி வரும். முப்பது வயது வரை உருண்டு பிரண்டாலும் செல்வம் சேராது. பின் பலன் பதவிகள் தானே தேடி வரும். ஒவ்வொரு திசையிலும் சனி புத்தி அந்தரம் வரும் பொழது மேன்மையான பலன்களை கொடுப்பார்கள். சுய தொழில் அரசு மத்திய அரசு பணி அதிகாரம் செய்ய கூடிய பதவிகள் அமையும்.

உத்திரட்டாதி நட்சத்திர கோவில். புதுக்கோட்டை ஆவுடையார் கோவில் அருகே உள்ள தீயத்தூர் ஊரில் இருக்கும் அருள்மிகு ஸ்ரீசகஸ்ர லட்சுமீஸ்வரர் ஆலயம் சென்று வழிபடுவது நல்லது.
பூரட்டாதி நட்சத்திர நண்பர்களே:


       உங்கள் நட்சத்திர அதிபதி குரு சனியின் வீட்டில். மற்றவர்களின் நோக்கம் அறிந்து அதற்கு ஏற்றவாறு காரியம் சாதிக்கும் குணம் கொண்டவர்கள். மனைவியின் சொல்லுக்கு கட்டுபட்டு நடப்பவர்கள். ஆடை, ஆபரணங்கள் போட்டு அழகாய் பிரகாசிப்பீர்கள். திடமான சாரிரத்துடன் பக்தி நெறியில் வாழ்வீ ர்கள். பெரிய மனிதர்கள் சகவாசம் பெற்று கௌரவமான வாழ்க்கை வாழ்
வீர்கள்.

     படித்த அறிஞ்சர்களாகவும், கவிஞராகவும், ஆசிரியர்களாகவும், நாகரிக குணங்களுடன் எல்லோரிடமும் சகஜமாக பழகும் ஆற்றல் பெற்ற நீங்கள் அடுத்தவர்கள் காரியத்தை முடித்து கொடுப்பீர்கள். உங்கள் காரியங்கள் முடிக்க முடியாமல் திண்டாடுவீர்கள். சுவை விரும்பிகள், சொந்த பந்தம் போற்றும் மனிதராக நட்பு வட்டங்கள் உங்கள் ஆலோசனை பெற்றுதான் செயல்படுவார்கள்.


     தொழில் வளம், வாக்கு, நாணயம், நீதி, நேர்மையுடன் செயல்படுவீ ர்கள். சாதாரண மனிதனையும் சாதிக்க வைக்கும் நட்சத்திரமாகும். குரு பகவான் மற்ற கிரகங்களுடன் சேரும் பொழுது அதிக வலிமை பெறுவார். சந்திரன், செவ்வாய், சூரியன் சேர்க்கை பார்வை பெற்றால் விவேகத்தை அளிப்பார். வித்தைகளில் வல்லமை தருவார். பண்டிதர்களை உருவாக்குவார். நட்சத்திர அதிபதி திரிகோணம் பெற்றால் சகல சக்தியையும் கொடுப்பார். ரிஷபம், சிம்மம், விருட்சிகம், கும்பம் வீடுகளில் அமர்ந்தால் முதல் தர யோகத்தை கொடுப்பார். குரு இருக்கும் வீட்டை விட பார்க்கும் இடத்தை வலிமையாக்குவார். புத்திரகாரகன் பிள்ளைகளால் பெருமையை தருவான். வலியவனை எளிமையாக்கி கோபுர உச்சியில் கொண்டு செல்வான்.
சாரபலம், திக்பலம், திருக்பலம் பெற்றால் நாட்டை ஆளவைப்பார்.


       பூரட்டாதி நட்சத்திர கோவில் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுபள்ளி அருகே ரெங்கநாதபுரத்தில் இருக்கும் திருஆனேஸ்வரர் ஆலயம் சென்று வழிபடுவது நல்லது.

Sunday, 12 July 2015

சதய நட்சத்திர நண்பர்களே:


           உங்களுடைய நட்சத்திர அதிபதி ராகு நட்பு வீட்டில் பிரவேசம். ராகு சாய கிரகமானாலும் வலிமையான வளமான வாழ்வு கொடுக்கும் நட்சத்திரம்.
அழகான வசிகர தோற்றமும், தான தருமம் செய்யும் குணங்களுடன், எதிர்மறையான சிந்தனை உடையவர்களாக இருப்பார்கள். கோப குணமும், உற்சாகம் நிறைந்த குணமும் இருக்கும். நினைத்த காரியத்தை முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். பிரபல நோக்கமும் எந்த காரியத்தையும் தீர யோசித்து நல்லது செய்வார்கள். கடின உழைப்பு உழைத்து மற்றவர்களால் புகழை பெறுவார்கள்.

நீதி சொல்லும் நீதிமானும், குற்றவாளி கூண்டில் நிற்கும் குற்றவாளியும் இந்த நட்சத்திரத்தில் தான் பிறந்து இருப்பார்கள். கடத்தல் கள்ள தொடர்பு தொழில்கள் செய்ய துண்டும் நட்சத்திரம். ராகு பலம் பெற்றால் ஸ்பெகுலேஷன், சுதாட்டம், ஷேர் வர்த்தகம் மூ லம் கோடீஸ்வரர்களை உருவாக்குவார்கள்.

பலம் பெறும் ராகு, சூரியன், சந்திரன் சேர்க்கை பெறாமலும் சாரம் பெறாமல் 3, 6, 11 - லிருந்தால் டெக்னிக்கல் சாப்ட்வேர், விஞ்ஞானத்துறை மூலம் பெரும் செல்வாக்கை தருவார்.

புதன், சுக்கிரன், சனி பார்வை பெற்றால் இனிமையான இன்பமான வாழ்வை தருவார். ஆனால் டென்சன், டெம்டேசனுடன் வாழ்வார்கள். தான தருமங்கள் செய்வார்கள். ஆனால் விளம்பர படுத்தி கொள்வார்கள். களத்திர வாழ்க்கை மட்டும் சுகத்தை தராது.

சதய நட்சத்திர கோவில். திருவாருர் மாவட்டம் நன்னிலம் அருகே திருப்புகலூர் அருள்மிகு அக்னீஸ்வரர் சிவாலயம் சென்று வழிபடுவது நல்லது.
அவிட்ட நட்சத்திர நண்பர்களே:



           உங்கள் நட்சத்திர அதிபதி செவ்வாய். செவ்வாய்க்கு, மகரம் தான் உச்ச ராசி. அவிட்டத்தில் பிறந்தால் தவிட்டு பானையும் தங்கமாம். பானை இருக்கும் தவிடு இருக்காது. முதல் திசையே பாதகாதிபதி திசை என்பாதல் வீடு விட்டு மனை விட்டு தன்னறிவாலே மோசம் போக வைக்கும். பாலரிஷ்ட தோஷங்களையோ மருத்துவ செலவுகளை கொடுத்து உயிரை காப்பாற்றி கொள்ள நேரும். இந்த நட்சத்திரகாரர்களுக்கு அவசர புத்தி இருக்கும். செய்யும் காரியங்களை யோசித்து செய்ய மாட்டார்கள். முன்கோபம் கொண்டு சஞ்சல புத்தி கொண்டவர்கள்.

     வீ ரம், தீரம், விவேகம் கொண்ட நட்சத்திரம் என்பதால் 25-வயதுக்கு மேல் கங்கண யோகம் ஏற்பட்டு பூமி, வீடு, செல்வாக்கு செல்வத்தை பெற்று மேன்மையான வாழ்க்கை வாழ்வார்கள். ராகு திசை, போலீஸ், ராணு வம். எலக்ட்ரிக்கல் மெக்கானிக். இன்ஜினியரிங் தொழில்களில், படிப்பும் அன்னிய தேச சம்பாத்தியம் போன்றவற்றை தருவார். படித்தது ஒன்று செய்கிற தொழில் வேறவாக இருக்கும். செவ்வாய் பலம் பெற்று கேந்திரத்தில் இருந்தாலும் குரு சந்திரன் சுக்கிரன் பார்வை பட்டாலும் சேர்ந்தாலும் முதல் தர யோகத்தை கொடுத்து சாதனைகளை செய்ய வைக்கும். ராகு   ,கேது, பாதகாதிபதி தொடர்பு பெற்றால் கடைசி காலம் வரை வறுமையை கொடுக்கும். தரித்திர வாழ்க்கை வாழ வைக்கும்.


கடகம், சிம்மம் லக்னங்களில் பிறந்தால் செவ்வாயால் ஊர், உலகம் போற்றும் தரமான வாழ்க்கை அமையும்.
அவிட்ட நட்சத்திர கோவில். கும்பகோணம் அருகில் கொருக்கை என்னும் ஊரிலிருக்கும் ஞானபுரீஸ்வரர் ஆலயம் சென்று வழிபட்டால் வாழ்க்கையில் மேன்மை கிட்டும்.
திருவோண நட்சத்திர நண்பர்களே:



      உங்களுடைய நட்சத்திர அதிபதி சந்திரன். திருமலை பெருமாள் அவதரித்த நட்சத்திரம். பெருமையையும், புகழையும் தர கூடிய நட்சத்திரம். ராஜ கிரகங்கள் என்று வர்ணிக்கப்படும் சூரியன், சந்திரன் மட்டும் தான். பகலில் சூரியனின் ஒளிவட்ட பாதையில் சந்திரன் செல்வார். இரவில் சந்திரனின் ஒளி வட்ட பாதையில் சூரியன் செல்வார். அதனால் தான் இரண்டு கிரகங்கள் ராஜ கிரகங்கள்.

    மிடுக்கான தோற்றமும், எளிமையான வாழ்க்கை வாழ வழிசெய்வார். வசதி வாய்ப்புகளை கொடுத்து ஆடம்பரம் இல்லாமலும், தன்னடக்கம், நன்னடத்தை காப்பாற்றி கொள்வார்கள். வாக்கு, நாணயத்தை காப்பாற்றுவதில் வல்லமை உடையவர்கள். எளிதில் கோபப்பட மாட்டார்கள். கோபம் வந்தால் யானையை அடக்க முடியாத அளவுக்கு கோபம் வந்துவிடும்.

      ஜாதகத்தில் சந்திரன் வலுபெற்றால் ஆட்சி உச்சம் நட்பு பெற்றாலும் வலுபெற்றாலும் அறிவு, ஆனந்தம், புகழ், ஆற்றல், அழகு, சுக போகம் அனைத்தையும் கொடுப்பான். 1, 4, 7, 10-ல் வலு பெற்றால் அரசருக்கு ஒப்பான வாழ்க்கை கொடுப்பார். 4-வது வீட்டில் பலம் பெற்றால் அதிகார மிக்க பதவிகளை கொடுப்பார். லக்ன பாவம் சூரிய பாவம் கெட்டாலும், சந்திர பாவம் வலுத்தால் போதும்..

     ராகு, கேது பாதகாதிபதி சம்பந்தம் பெறாது. நல்ல நிலையில் இருந்தால் மனதிடம் சிறப்பாக இருக்கும். வளர்பிறையில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டம பாதிப்பு இருக்கும். தேய்பிறையில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டம பாதிப்பு இருக்காது.

    திருவோணம் நட்சத்திர கோவில் சென்னை காவேரிபாக்கம் அருகில் உள்ள திருப்பாற்கடல் ஊரில் இருக்கும் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயம் சென்று வழிபடுவது நல்லது.

உத்திராட நட்சத்திர நண்பர்களே:

      உங்களுடைய நட்சத்திர அதிபதி, சூரியன் நட்பு வீட்டில் ஓரு பாதமும் தன்னுடைய மகனின் வீட்டில் 3-பாதங்களிலும் சஞ்சரிப்பார்.

     உத்திராடத்தில் ஓரு பிள்ளையும், ஊருக்கு பக்கத்தில் ஒரு குழி நிலமும் இருந்தால் பிள்ளை வளர வளர ஒரு குழி தோப்பாகுமாம். விவேகமாக செயல் படுவார்கள். அழகான தோற்றம், சாமர்த்தியம், கலைகளில் நாட்டம், திறமைசாலியாக செயல்படுவார்கள். செல்வந்தவர்களாகவும், பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுவார்கள்.

     நல்ல சுறுசுறுப்புபாக செயல்படுவார்கள். ஜாதகத்தில் 3, 6,11, ல் சூரியன் இருந்தால் சர்வ வல்லமையை தருவார். ராகு, கேது தொடர்பு இல்லாமல் ஆட்சி நட்பு உச்சம் பெற்ற சூரியன் பெறும் பதவி அந்தஸ்து புகழ் சகல செல்வமும் கொடுப்பார்.

    ராகு, கேது சாரம் தொடர்பு பாதாகதிபதி தொடர்பு இருந்தால் பிதுர் தோஷத்தை கொடுப்பார். கல்வி, அறிவு, ஞாபகசக்தி அதிகமாக இருந்தாலும் சோம்பேறிதனம் அதிகமாக இருக்கும்.

     நாம் எந்த காரியத்தை தொடங்கினாலும் செய்தாலும் அந்த நேரத்தில் 11-ல் சூரியன் இருந்து செய்தால் அந்த காரியங்கள் வெற்றியை கொடுக்கும். சுய ஜாதகத்தில் சூரியனுக்கு, குரு, சந்திரன், செவ்வாய், புதன் பார்வை சேர்க்கை பெற்றால் சிறந்த மேதையாகவும் தலை வணங்காத தலைமை பதவியை கொடுப்பார்.

        சூரியனும், சனியும் பகை என்பார்கள். இரு கிரகமும் ஒன்றை ஒன்று விட்டு கொடுக்காது. சிம்ம ராசியையும், மகர ராசியையும் எந்த பொருத்தமும் பார்க்காமல் இணைக்கலாம்.

உத்திராட நட்சத்திர கோவில். மதுரை மேலூர் அருகே  கீழ்ப்பூங்குடி என்னும் ஊரிலிருக்கும் சுந்தரேஸ்வரர் ஆலயம் சென்று வணங்குவது நல்லது.

பூராட நட்சத்திர நண்பர்களே:



      உங்களுடைய நட்சத்திர அதிபதி சுக்கிரன், குருவின் வீட்டில். குருவும், சுக்கிரனும் பகைவர்கள். வீடு கொடுக்கும் குரு சுக்கிரனின் நட்சத்திரத்தை வலுபெற வைப்பார். அய்யரும், ஐயங்காரும் ஒரு இடத்தில் சந்தித்தால் அண்ணா நல்ல இருக்கிறீங்களா? கேட்பது போல.

      பிறந்தது முதல் முழுமையான யோகத்தை அனுபவிக்க கூடியவர்கள். வசதி, வாய்ப்புகள், அந்தஸ்து, கௌரவமான வேலை வாய்ப்புகள். தொழில்கள் அமையும். எல்லோரிடமும் பணிவு, தெய்வ நம்பிக்கை, நிலையான வசதி, வாய்ப்புகள் பெற்று நியாயம், தர்ம சிந்தனையுடன் செயல்படுவார்கள். மத்திய அரசு பணி, கணினி சம்பந்தபட்ட தொழில்கள், வெளிநாட்டு வர்த்தகம் போன்ற தொழில்கள் ஏற்றம் தரும்.

     நினைக்கும் செயலை செய்து முடிக்காமல் ஒய மாட்டார்கள். கங்கண குணம் அதிகமாக இருக்கும். எந்த செயலிலும் அடுத்தவர்களுக்கு எந்த பாதிப்பையும் தரமாட்டார்கள். முதன்மையான கல்வி யோகம் உண்டு.
பூராடத்தின் கழுத்தில் நூலாடாது என்ற பழமொழி உண்டு. அதன் பொருள் என்ன என்றால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லாம் எல்லா நூலையும் கற்கும் ஆற்றலை பெற்று இருப்பார்கள் என்பது தான் உண்மையான அர்த்தம்.


     பூராடம் வாழ்க்கையில் போராடும் என்பார்கள். எல்லா செல்வமும் இருந்தாலும் அனுபவிக்க முடியாது என்பது தான் பொருள்.
சுக்கிரன் 1, 2, 4, 5, 8, 9, 10, 11, 12,ல் இருந்தாலும் செவ்வாய், குரு, புதன் பார்வை பெற்றாலும் சேர்ந்தாலும். முதல் தர யோகத்தை கொடுப்பார். உச்ச நிலையைவிட நட்பு நிலை நல்லது.


     ராகு, கேது, சனி சாரம் சேர்க்கை பெற்றால் களத்திரத்தால் உபத்திரத்தை கொடுப்பார். திருமண தாமதம், குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் தீரவும் இந்த நட்சத்திர கோவில் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே கடுவெளி கிராமத்தில் அருள் பாவிக்கும் ஆகாசபுரீஸ்வரர் சிவாலயம் சென்று வாசனை திரவியங்கள் வாங்கி கொடுத்து தரிசனம் செய்வது நல்லது.

Friday, 10 July 2015

மூல நட்சத்திர நண்பர்களே:


      ஆஞ்சிநேயர் அவதரித்த நட்சத்திரத்தில் பிறந்த உங்களுடைய நட்சத்திர அதிபதி கேது குருவின் வீட்டில் இருப்பதால் ஞானசக்தி தைரியம் தன்னம்பிக்கை கடவுள் பக்தி நிரம்பியவர்கள். தர்மத்திற்கு தலை வணங்குவீர்கள். அதர்மத்தை அழிக்க கடும் பாடுபடுவீ ர்கள். இரண்டாவது
திசையே சுக்கிரதசை வருவதால், சுக போக வாழ்க்கையும். எல்லோருக்கும் செல்ல பிள்ளையாக வளர்வீர்கள். படிப்பு தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள், எதையும் சாதிக்க கூடிய திறமைசாலியாகவும். எதிலும் நிதான போக்கும், பெரியோர்களிடம் பக்தி மரியாதை கொண்டவர்கள். ஆசார அனுஷ்டானம் விரத முறைகளை கடைப்பிடிப்பிர்கள்.

      கேது 3,6,11- இருந்தாலும் கேதுவுக்கு, குரு, சுக்கிரன், புதன் பார்வை கிடைத்தாலும் சுபிட்சம், சௌபாக்கியம், சுக போகம் அனைத்தும் கிட்டும். ஒருவருடைய ஜாதகத்தில் கேது பலம் பெற்றால் இகம் பரம் என்ற இரு உலகங்களிலும் சுகம் பெற வைப்பார். அடுத்தவர்களை வாழ வைப்பார்கள். கலை, இலக்கியம், சங்கிதம் ஆகியவற்றில் நாட்டங்களை தருவார்.
கம்பியூ ட்டர் டெக்னாலிஜ் துறைகளில் வல்லுனராக பிரகாசிக்க வைப்பார்.

ஜாதகத்தில் சனி, செவ்வாய், ராகு பாதகாதிபதி சாரம் பெற்றால் பெறும் துன்பத்தை தருவார். 27-நட்சத்திரங்களில் பெரும் மக்களால் விமர்சனம் செய்யபடும். முல நட்சத்திரத்தின் பயம் என்ன என்றால் மாமனாருக்கு ஆகாது என்று. ஆண் முலம் அரசாலும், பெண் முலம் நிர்முலம் என்று பஞ்சாங்களில் குறிக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு எந்தவித நட்சத்திர தோஷமும் கிடையாது.பெண்களுக்கு மட்டும் தான் நட்சத்திர தோஷங்கள் எல்லாம்.பெண்கள் 2, 3,4, பாதங்களில் பிறந்தால் தோஷம் கிடையாது. ஞாயிற்றுக்கிழமை பிறந்தால் 4 - பாதங்களும் தோசம். சூரியன், சந்திரன் சேர்க்கை சாரம் பெற்றால் மட்டுமே 4 பாதங்களும் தோஷம்.கேதுவை குரு சுக்கிரன் பார்த்தாலும் சேர்ந்தாலும் தோஷமில்லை. எத்தனையோ பேர் மாமானர், மாமியார் இருந்து பெண்கள் திருமணம் செய்து கொண்டு நல்ல விதமாக வாழ்க்கை வாழ்வதே நான் பார்த்து இருக்கேன். நட்சத்திர தோஷம் என்பது எல்லாம் ஓரு பிரம்மைதான். ஓரு பெண் இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் இளம் வயது முதல் சங்கடஹரசதுர்த்தி அன்று விநாயகருக்கு பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்தாலே போதும்.முழுமையாக தோஷங்கள் விலகி வீடும்.

மூல நட்சத்திர கோவில், சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே மப்பேடு என்னும் ஊரிலிருக்கும் ஸ்ரீசிங்கீஸ்வரர் ஆலயம் சென்று வழிபடுவது நன்று.
கேட்டை நட்சத்திர நண்பர்களே:


          உங்களுடைய நட்சத்திர அதிபதி புதன். கேட்டையில் பிறந்தால் கோட்டை கட்டி வாழலாம் என்பது பழமொழி இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் முதலில் கோட்டையை விட்டு தான் பின் கோட்டையை பிடிக்குலாம். நண்பர்கள், உற்றார், உறவினர் சூழ்ச்சியில் சிக்கி பின்னர் தான் புத்தி வந்து தவற்றை உணர்ந்து வாழ்க்கையை மேம்படுத்தி கொள்வார்கள். நல்ல புத்தியையும், நல்ல சிந்தனையும் கொடுக்கும் நட்சத்திரங்களில் இதுவும் ஓன்றுதான் என்ற அகந்தையை ஓரு பொழதும் விட்டு கொடுக்க மாட்டார்கள். கலைகளில் தேர்ச்சியும் எழுதுவதில் கீர்த்தியையும் தன்னை பற்றி அடுத்தவர் பெருமையாக பேசுவதை ரசிப்பதும், தர்மகுணம் கொண்டவர்களாகவும், தைரியசாலியாகவும் இருப்பார்கள்.
சில காலம் சிலருக்கு அஞ்சி பயந்து ஓளியும் இவர்கள் ஒரு முறை நேருக்கு நேர் நின்று சவால் விட்டு எதிர் நடை போடுவார்கள்.
முன்கோப குணங்களுடன் குறும்புத்தனம் அழகாய் பேசும் திறனுடன் இருப்பார்கள்.

பகை வீட்டில் புதனின் நட்சத்திரம் இருப்பாதல் சில மனிதர்கள் அடுத்தவர்களை ஏமாற்றி சுய நலவாதியாக காலம் நடத்துவார்கள்.
புதன் 1, 4, 7, 10,ல் இருந்து ஆட்சி உச்சம். நட்பு பெற்றால் வழக்கறிஞர் கணித சாஸ்திரம். வங்கி தொடர்பு, ஜோதிடர்கள், புரோகிதர்கள், சிறு தொழில் அதிபர்களை உருவாக்குவார்.
மறைந்த புதன் நிறைந்த தனத்தை கொடுப்பார். புதன் வலுபெற்றால் தாய்மாமன் வகையில் யோகத்தை கொடுப்பார்.
கேட்டையின் மைத்துனன் கட்டையில் போவான் என்பது பழமொழி. இது நடைமுறையில் சாத்தியம் இல்லாதது. பஞ்சாங்கள் தான் சொல்லுதே தவிர சாஸ்திர நூல்களில் ஆதார குறிப்புகள் இல்லை.
சூரியன், சனி, சுக்கிரன் சேர்க்கை, பார்வை புதனுக்கு கிடைத்தால் அறிஞன் ஆக்குவான். கிரக சேர்க்கை பெற்ற புதன் ஜாதகரை உன்னத நிலைக்கு கொண்டுவருவான்.
புதன், ராகு, கேது பாதகாதிபதி சாரம் தொடர்பு பெற்றால் தன்னுடைய நட்சத்திரத்தை பலம் இழக்க செய்து வீடும்.கேட்டைக்கு உண்டான கோவில். தஞ்சாவூர் அருகில் பசுபதி கோவில் என்ற ஊரிலுள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயம் சென்று வணங்குவது நல்லது.
அனுஷ நட்சத்திர நண்பர்களே:



     உங்களுடைய நட்சத்திர அதிபதி சனி பகவான் செவ்வாய் வீட்டில் பகை பெறுகிறார். வீடு கொடுத்த செவ்வாய் சனியின் வீட்டில் உச்சம் பெறுகிறார்.அதனால் அனுச நட்சத்திரகாரர்கள் எதிலும் நீதி, நேர்மையை கடைபிடித்து வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பார்கள். படிப்பில் கவனத்தையும் ஆராய்ச்சி செய்வதிலும், வேத சாஸ்திரங்களில் பற்றுதல் கொண்டவர்களாகவும் நல்ல பதவி அந்தஸ்து பெற்று உண்மை,நேர்மை. வாக்கு நாணயத்துடன் செல்வ சீமானக வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவார்கள். சொந்த பந்தங்களை அனுசரித்து நடக்க கூடியவர்கள்.

     அரசாங்க கௌரவங்களை பெறுபவர்களாகவும் மற்றவர்களின் குணங்களை அறிந்து நடக்கும் குணங்களுடனும் பெருந்தன்மை மிக்கவர்களாகவும் இருப்பார்கள். திறமைசாலியாகவும் தர்ம சிந்தனையுடன் ஊர் உலகம் போற்றும் விதத்தில் செயல்படுவார்கள்.
பிறரிடம் பேசுவதற்கே வெட்கபடுவார்கள்.

      சனி பலம் பெற்றவர்கள் சர்வசக்தியும் பெற வாய்ப்புண்டு. கடினமான உழைப்பால் பல சாதனைகள் செய்ய வாய்புகள் வரும். சனி பகவான் மகரத்தில் கன்னியில் 3,11, பலம்பெற நாட்டிற்கோ ஊருக்குவோ தலைமை தாங்கும் தகுதி உண்டாகும்.
கலை, இலக்கியம், விஞ்ஞானம், தொழில் நுட்ப துறைகளில் சாதனை செய்ய வைப்பார்.

வண்டி வாகனம். இரும்பு இயந்திரங்கள்  துறைகளில் முதலாளித்துவம் கொடுப்பார். ராகு, கேது, செவ்வாய் சாரம் பெறாமல். சேர்க்கை பெறாமல் 3, 6, 11, பலம் பெற்றால் உயர்நிலை யோகத்தை கொடுப்பார். செல்வ வளம் மிகுந்து செழிப்புடன் வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.

புதன், சுக்கிரன், குரு, பார்வை பெற்றால் உலகம் அறிந்த நிபுணர் ஆகலாம். பொதுவாக பூசம், அனுசம், உத்திராட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஏழரை சனி, அஷ்டம சனி. கண்ட சனி எந்த பாதிப்பையும் தாரது. அந்த கால
கட்டங்களில் கடல் தாண்டி அன்னிய தேசம் சென்று சம்பாதிக்க வைக்கும்.

அனுச நட்சத்திரம் பலம் பெற மயிலாடுதுறைக்கு அருகில் திருநின்றியூர் என்ற ஊரில் உள்ள ஸ்ரீலட்சுமிபுரீஸ்வரர் கோவிலுக்கு ஜென்ம நட்சத்திரம்  வரும் நாளில் சென்று வணங்கினால் சகல நன்மைகள் ஏற்படும்.

விசாகம் நட்சத்திர நண்பர்களே:


உங்களுடைய நட்சத்திர அதிபதி குரு பகை வீட்டில் 3-பாதத்திலும் நட்பு வீட்டில், 1-பாதமாக இருப்பார். குருவும், சுக்கிரனும் பகை கிரகமாக இருந்தாலும் குருவின் வீட்டில் சுக்கிரன் உச்சம் என்பாதல் விசாக நட்சத்திரத்திற்கு அதிக வலிமையை கொடுப்பார்.ஞானத்தையும் நல்ல அறிவையும் உயர் கல்வியறிவுவையும்,நிரந்தர வேலைவாய்ப்பு அதிகாரமிக்க பதவி பொன் பொருள் வசதி வாய்ப்பு செல்வ செழிப்பு போன்ற வற்றை குரு கொடுப்பார்.வியாபாரத்தில் வெற்றியை கொடுத்து சதா காலமும் கையில் காசு பணம் புரள வைப்பார்.வேத விற்பனர்கள் ஜோதிட சாஸ்திரம் போன்றவற்றில் ஞானத்தை கொடுப்பார்.நடக்காத காரியங்களை சாதிக்க வைப்பார்..தந்திர என்னங்களை கையாளுவார்கள்.திறமையாக பேசுவதில் சாமர்த்தியம் கொண்டவர்கள்.தானதருமம் செய்யும் குணமுள்ளவர்கள்.குரு பகவான் ஜாதகத்தில் 1, 5, 9, இருந்தாலும் சந்திரன் செவ்வாய் சூரியன் பார்வை பெற்றால் வளமான வலிமையான வாழ்க்கை அமையும்.புதன் சுக்கிரன் பார்வை பெற்றால் தரித்திர நிலையை கொடுக்கும்.
ஜாதகத்தில் ஏனைய கிரகங்கள் வலிமை இழந்தாலும் நட்சத்திர அதிபதி குரு வலிமை பெற்றால் சகல செல்வாக்கு கிடைக்கும்.
ஸ்திர ராசிகளான ரிசபம்.சிம்மம்.விருட்சிகம்.கும்பம் ஆகிய வீடுகளில் குரு இருப்பது பொதுவாகவே நல்லது..
விசாக நட்சத்திர கோவில் தென்காசியில் இருந்து அச்சன்கோவில் செல்லும் வழியிலுள்ள திருமலை முருகன் ஆலயம் சென்று வழிபடுவது நல்லது.
அன்பு நண்பர்களே:

நேற்று இரவு நடந்த குரு பெயர்ச்சியில் திருவாரூரில் உள்ள சோமேஸ்வர அந்தபுர நாயகி கோவிலில் நடந்த குரு பெயர்ச்சி பூஜையில் நம்முடைய நண்பர்கள் பெயர்களுக்கு புரோகிதர்கள் மூலம் சங்கல்பம் செய்யபட்டது.
1.பிரதிபா, அசுவினி.
2.ராமன், மூலம்.
3.ராஜலெட்சுமி, அவிட்டம்.
4.வெங்கட சுப்பிரமணியன், திருவோணம்.
5.ராஜா, அஸ்தம்.
6.விபு சௌத்ரா, பரணி.
7.ராஜா நந்தபாலன், கிருத்திகை.
8.அய்யப்பன், பூரம்.
9.சிவராம ஷர்மா, உத்திரட்டாதி.
10.வரதராஜ பெருமாள், திருவாதிரை.
11.வெங்கடசுப்பிரமணியன்.
12.அனந்தபத்மநாபன், அசுவினி.
13.ராஜீவ், அஸ்தம்.
14.பாலசுப்பிரமணியன், விசாகம்.
15.பாலாஜி, சித்திரை.
16.கண்ணன், மகம்.
17.முத்து லெட்சுமி, மூலம்.
18,விஜய பெருமாள், மூலம்.
19.நந்தகுமார், அனுசம்.
20.நிலகண்டன், அனுசம்.
21.ராஜகணபதி, சித்திரை.
22.உதயநிதி கிருஷ்ணா, திருவோணம் .
23.சிதம்பரம், ரேவதி.
24.மாறன், உத்திரட்டாதி.
25.ராஜ சேகரன், மூலம்.
26.சுபா, அசுவினி.
27.கிருஸ்னமுர்த்தி, ரோகிணி.
28.நவின், அனுசம்.
28.சினிவாஷ், உத்திரட்டாதி.
29.மெய்கண்டன், மகம்.
30.அனுநிவேதா, விசாகம்.
31.கௌசிக்குமரன், கிருத்திகை.
32.விரபாண்டியன், ரோகிணி.
33.கேசவன், புனர்பூசம்.
34.ரகுரமேஷ், சித்திரை.
35.பாலமுருகன், உத்திரம்.
36.வேலு, மகம்.
37.கோபால கிருஷ்ணன், அவிட்டம்.
38.பாஸ்கரன், உத்திரம்.
39.அழகர், கார்த்திகை.
40.மாதேஷ்கலியமூர்த்தி, உத்திராடம்.
41.ரோகித் சினிவாசன், பரணி.

எல்லோரும் குரு பெயர்ச்சியால் சகல நன்மைகள் பெற வேண்டுகிறேன்.

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவ குரு மகேஸ்வராய
குரு சாட்சாத் பரபிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமக.
சுவாதி நட்சத்திர நண்பர்களே:

சுக்கிரன் வீட்டில் ராகுவின் நட்சத்திரம், தெய்வ வழிபாடுகள், வேத சாஸ்திரங்கள், பக்தி, பெரியோர்களிடம் மரியாதை, நல்ல குணம், பெரிய மனிதர்கள், சகவாசத்தை ஏற்படுத்தி நேர்மையாகவும் எல்லோருக்கும் ஆலோசனைகள் வழங்குவீர்கள். இரண்டாவது திசையே குரு திசை வருவதால் அரசாங்க பதவி, புகழ் இவற்றையும் அதிகாரத்தையும் தருவார். உலக விஷயங்களில் அறிவையும், உள்ளத்தில் தெளிவை தருவார். மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய வீடுகளில் ராகு பலம் பெற்றால் பெண்கள் மூலம் சுகத்தையும், செல்வத்தையும் தருவான். அன்னிய தேசம் கடல் தாண்டி வேலை வாய்ப்பை உருவாக்குவான். மாற்று இனத்து மனிதர்கள் மூலம் செல்வாக்கை தருவான். ஊர் முழுதும் உலகம் முழுதும் சுற்றி உயர் புகழ் பெறவும் பொருள் வளம் பெற வைப்பார். ராகு, சூரியன், சந்திரன் சேர்க்கை பெறாமல் 3, 6,11 - இருந்தாலும் கேந்திரத்தில் இருந்தாலும் கற்ற வித்தையால் செழிப்பை தருவார்.

செவ்வாய், சனி சாரத்தில் ராகு இருந்தால் கள்ளம், கபடு, சிறை வாசம் போன்ற கெடு பலனை கொடுப்பார்.

ராகு கிரகணம் தோஷம் பெற்றால் சென்னை பூந்தமல்லி திருமழிசை அருகில் சித்துகாடு என்ற ஊரில் உள்ள ஸ்ரீ தாந்திரீஸ்வரர் சிவ ஆலயம் சென்று ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் தரிசனம் செய்வது நல்லது.
சித்திரை நட்சத்திர நண்பர்களே:


உங்களுடைய நட்சத்திர அதிபதி செவ்வாய் எல்லா காரியங்களையும் தன்னம்பிக்கையுடன், விவேகமாக செயல்பட வைப்பார்.
சித்திரையின் தந்தை தெருவிலே என்பது பழமொழி.
சில நட்சத்திரங்களுக்கு சில பழமொழிகள் சொல்லபட்டது
ஓன்று நாளடைவில் அது வேற பொருளாக சொல்ல படுகிறது. சித்திரையில் பிறந்தவர்கள் தன்னுடைய காரியங்களில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். ஓரு காரியம் நடக்க எந்த அளவு முயற்சி பெற வேண்டுமோ அந்த அளவுக்கு பாடுபடுவார்கள். சதா காலமும் எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். சொன்ன சொல்லை திரும்ப திரும்ப சொல்லி கொண்டே இருப்பார்கள். ஊருக்கு எல்லாம் நல்லவர்கள். வீட்டில் எல்லோருக்கும் பகையாளி.

திறமைசாலி தைரியவான் நல்ல குணங்களுடன் பரந்த நோக்கம் கொண்டவர்கள். இளமை பருவத்திலேயே ராகு திசை வருவாதல் இரும்பு இயந்திரங்கள். டிப்லோமா, இன்ஞினிரிங் போன்ற படிப்பும் வெளிநாட்டு தொடர்பும் வேலையும், இளமையிலேயே சம்பாதிக்கும் வாய்ப்பும் கிட்டும்.
செவ்வாய் பலமாக இருந்தால் ரானுவம், காவல் துறை, மத்திய அரசு பணி கிடைக்கும். குரு, சந்திரன், சூரியன் பார்வை பெற்றோ கேந்திரம் ஏறி உச்சம் பெற்றால் ஜாதகரை செழிப்பான வாழ்வை வாழ வைத்தே திருவான்.ராகு கேது புதன் தொடர்பு சாரம் பெற்றால் கள்ளத்தனமான தொழில் செய்து பணம் சம்பாதிக்க வைப்பார். கன்னியில் செவ்வாய் இருந்தால் கடலே வற்றி போகும் என்பார்கள். கடகத்தில் செவ்வாய் நிச்சம் பெற்றால் அடிக்கடி ரத்த தானம் செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.
சித்திரை நட்சத்திர கோவில். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலுக்கு ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் சென்று வணங்கினால் சித்திரை நட்சத்திரம் பலம் பெறும்.
அஸ்த நட்சத்திர நண்பர்களே:

உங்கள் நட்சத்திர அதிபதி சந்திரன் ஜாதகத்தில் மனதுக்கும் உடலுக்கும் காரகன். ஜாதகத்தில் சந்திர பலமே முக்கியம். உயர்ந்த தோற்றமும் எல்லோரிடமும் சகஜமாகப் பேசி பழக கூடியவர்கள். தாயாரின் பற்றுதலை கொண்டவர். நற்குணமும், நற்செயலும், சந்தோஷ குணத்துடன் மற்றவரை கவரும் வகையில் நடந்து கொள்வீர்கள்.
எதிலும் நிதானமாக போக்கும் எடுத்த செயலை முடிக்கும் வரை போராடும் குணமும் தீர்க்கமான முடிவு எடுப்பீர்கள்.சந்திரன் 1, 3, 4, 6, 9,10,11, ல் இருப்பது நல்லது. சந்திரனுக்கு குரு, செவ்வாய், சுக்கிரன், பார்வை பெற்றால் மிகவும் நல்லது.
பாதகாதிபதி ராகு, கேது, சனி பார்த்தால் சந்திரனின் பலம் குறைந்து விடும். கல்வி, தொழில் வாழ்க்கையில் சிறப்பு பெற்று வளமுடன் வாழலாம்.
சில நேரங்களில் தோல்விகள் ஏற்பட்டாலும் விடா முயற்சியால் வெற்றி பெறுவீர்.
தேய்பிறையில் பிறந்தவர்கள் சில நேரங்களில் சின்ன விசயங்களுக்கு எல்லாம் பெரிய அளவில் டென்ஷன் ஆவார்கள்.
சுய ஜாதகத்தில் சந்திரன், ராகு, கேது, சனி சேர்க்கை பெற்றாலும் பார்வைபட்டாலும், அவர்களுடைய சாரம் பெற்றாலும் ஒரு முறை ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் கும்பகோணம் குத்தாலம் பாதையில் கோமல் என்ற ஊரிலிருக்கும் ஸ்ரீகிருபாகூபாரேசுவரர் ஆலயம் சென்று வழிபடுவது நல்லது
உத்திர நட்சத்திர நண்பர்களே:


உங்கள் நட்சத்திராதிபதி சூரியன் 1 ம் பாதம் ஆட்சி வீட்டிலும் 2, 3, 4,பாதத்திலும் நட்பு வீட்டிலும் வருவாதல் திடமான புத்தி நல்ல சிந்தனை அறிவு ஆற்றல் சிறப்பாக இருக்கும். எந்த காரியத்தை செய்தாலும் திறம்பட முடிக்கும் ஆற்றல் இருக்கும். செழிப்பு, செல்வாக்கு, அந்தஸ்து பெற்று சிறப்பாக இருக்கும்.

உறவினர்கள் நண்பர்கள் ஆதரவு இனிய வார்த்தைகளால் எல்லோரிடமும் நல்ல பெயர் எடுப்பீர்கள். பிறர் செய்த உதவிகளை, நன்றிகளை மறக்காதவர்கள். ஏழ்மையான வாழ்க்கையில் தொடங்கி உன்னதமான நிலையை அடைவீர்கள்.

தெய்விக அறிவும், வாக்கு, நாணயம் தவறாதவர்களாக இருப்பார்கள்.
சூரியன், ராகு,கேது, சனி சேர்க்கை பார்வை இல்லாமல் 3, 6,11,ல் இருந்தாலும் ஆட்சி உச்சம் நட்பு பெற்று கேந்திரம் பெற்றாலும் அரசு மற்றும் அதிகாரமிக்க பதவியும், தொழிலும் அரசருக்கு ஒப்பான வாழ்க்கை அமையும்.

இளம் வயதிலேயே தாய் அல்லது தந்தையை இழந்து வறுமையில் தொடங்கி முதுமையில் செல்வ சீமானக வாழ்க்கை அமையும்.
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நம்பிக்கையே அவர்களது வலிமை.

உத்திர நட்சத்திர கோவில். திருச்சி லால்குடி அருகில் உள்ள இடையாற்றுமங்கலம் ஊரில் உள்ள ஸ்ரீமாங்கல்ய ஈஸ்வரர் கோவிலுக்கு ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் சென்று வழிபாடு செய்வது நல்லது.
பூர நட்சத்திர நண்பர்களே:

 
உங்கள் நட்சத்திர கிரகம் சுக்கிரன். சூரியனின் வீட்டில்,
செவ்வாய் வீட்டில், பரணி இருந்தால் பெண் பித்து. காமம் அதிகமாக இருக்கும். சிம்மத்தில், சூரியனின் வீட்டில், பூரம் நட்சத்திரத்தில் பிறந்தால் கண்ணியம், கட்டுபாடு, பெண்களை மதித்து நடக்க கூடிய பண்பு இருக்கும். ஜாதக கட்டத்தில் சுக்கிரன் 1, 5, 9, 12, இருப்பது நல்லது. சுக்கிரனுக்கு மறைவு ஸ்தானங்கள் 3, 8, மட்டுமே. ராகு, கேது சேர்க்கையோ. சனி பார்வை சுக்கிரனுக்கு இருந்தால் மட்டுமே கெடுதலை தரும். தெய்வ அனுகிரகம், தைரியம், வியாபாரத்தில் நாட்டம், புத்தி சாதுர்யம். எல்லா காரியங்களையும் வெற்றிகரமாக முடிப்பது சாமர்த்தியமாக செயல்படுவது பிளஸ் பாயிண்டுகள்.
குட்டி சுக்கிர திசையில் பிறப்பாதல் மனை விட்டு, மாடி விட்டு வேறு நகரத்தில் குடி ஏறுவார்கள்.

நீதி, நேர்மை, நல்ல குணங்களையும் பெற்று இருப்பார்கள்.
சுக்கிரனுக்கு, குரு பார்வை, புதன் பார்வை, செவ்வாய் பார்வை இருந்தால் நட்சத்திரம் வலிமை பெற்று சகல பாக்கியம் கிட்டும். அடிமைத்தொழில் செய்ய மாட்டார்கள். தான் தலை எடுத்து தான் சகல செல்வங்களை சேர்ப்பார்கள். முற்பலனை விட பிற்பலன் நன்றாக இருக்கும்.

பூர நட்சத்திரத்திற்கு உண்டான கோவில். புதுக்கோட்டை அருகில் திருவரங்குளம் என்ற ஊரிலுள்ள ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் ஆலயம்
மகம் நட்சத்திர நண்பர்களே:


       உங்களுடைய நட்சத்திர அதிபதி கேது என்பதால் அசுவினி, மூலம் ஆகிய நட்சத்திரத்திற்கு உண்டான பலன்களை அப்படியே எழுத முடியாது. எந்த வீட்டில் நட்சத்திர கிரகம் உள்ளதோ அதற்கு தகுந்தவாறு நட்சத்திர பலன்கள் மாறுப்படும். ஒரே நேரத்தில் எத்தனையோ பேர் பிறந்தாலும் ஒரே பலன்களை சொல்ல முடியாது. ஒவ்வொருத்தருக்கும் ஓவ்வொரு விதி பலன்கள் உண்டு. குலம்,கோத்திரம் முக்கியம். சூரியனின் வீட்டில் கேதுவின் நட்சத்திரம். கேதுவும், சூரியனும் சேர்ந்தால் கிரகண தோஷம். மக நட்சத்திரத்தில் பிறந்தால் தான் என்ற அகந்தை இருக்கும். நல்ல எண்ணம், நல்ல புத்தி இருந்தாலும் நல்ல செயலுக்கு பயன்படுத்த மாட்டார்கள். எல்லாவித மொழிகளும், ஞானமும் இருந்தாலும் எதிலும் நிதானமாக செயல்படுவார்கள். சுற்றத்தாரை அனுசரித்து போனாலும் சில நேரங்களில் கடுமையான கோபத்தால் தன்னுடைய சுய நினைவை இழப்பார்கள். எந்த வேலையும் எளிதாகவும், செம்மையாகவும் செய்யக் கூடிய ஆற்றல் உடையவர்களாக இருப்பார்கள்.

பெண்காளக இருந்தால் களத்திர வாழ்க்கையில் சில சங்கடங்களை சந்திப்பார்கள். கல்வி, அறிவு, தொழில், வாழ்க்கை சிறப்பாக அமையும்.
இரண்டாவது திசையே சுக்கிரதிசை நடந்தால் தந்தையாருக்கு தொழில் லாபம், எதிர்பாரத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். மொத்தத்தில் இளமை முதல் கஷ்டபட்டாலும் 20-வயதுக்கு மேல் நல்ல காலம் பிறக்கும்.எப்படி தான் வாழ்ந்தாலும் கண்ணதாசன் எழுதியவாறு


வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை

 
என்ற நிலைதான். எத்தனை கோடி சொத்து இருந்தாலும் கொள்ளி வைக்க ஓரு பிள்ளை இல்லை என்றால் இந்த பிறவி எடுத்த பலன் இல்லை. பாவ பட்ட ஜென்மம் தான். அதனால் பெண் பிள்ளையை பெற்றவர்கள் கோபித்து கொள்ள வேண்டாம். உங்கள் மகளுக்கு பிறக்கும் ஆண் குழந்தை உங்களுக்கு கர்மம் செய்தால் நீங்கள் கட்டாயம் சொர்கத்துக்கு செல்வீர்கள்.
ஏன் என்றால் கேது மோட்சகாரகன் அல்லவா?
மகம் நட்சத்திர கோவில் திண்டுக்கல் நத்தம் செல்லும் பாதையில் தவசி என்ற ஊரிலிருக்கும் ஸ்ரீமகாலிங்க சுவாமி ஆலயம் சென்று வழிபாடு செய்வது நல்லது.

Wednesday, 8 July 2015

ஆயில்ய நட்சத்திர நண்பர்களே:


உங்களுடைய நட்சத்திர அதிபதி புதன் நல்ல புத்தியை நிலைக்க செய்பவர். கல்விக்கும் அறிவுக்கும் அதிபதி அறிவியல் மேதைகளையும் பேச்சாற்றல். கணிதம், வைத்தியம் ஜோதிடம். சம்பந்தபட்ட வகையில் பட்டங்கள் பதக்கங்களை கொடுப்பார்.இருந்தும் இல்லாதவர்களை போல பேசுவார்கள்.அகங்கார குணங்கள் மற்றவர்களிடம் சாமர்த்தியமாக பேசி தன்னுடைய காரியங்களை சாதிக்கும் வரை அவர்களை சுற்றி வருவார்கள். கல்நெஞ்சமும் அதிக கோபமும் உடையவர்கள். தான் நியாயமாக செல்லாமல் அடுத்தவர்களுக்கு நியாயம் பேசுவார்கள். தாழ்ந்த நிலைகளில் உள்ளவர்கள் சகவாசத்தால் தன் நிலையை தாழ்த்தி கொள்வார்கள்.சில நேரங்களில் தைரியசாலி. சில நேரங்களில் கோழையாக இருப்பார்கள்.
சித்திரை மாதம்.ஆவணி மாதம் பிறக்கும் பொழது சூரியனுடன் சேரும் பொழது நிபுனத்துவம் பெற்று செழிப்பான வாழ்க்கை அமைத்து கொள்வார்கள்.
ஜாதகத்தில் பாவ கிரகத்துடன் சேரும் பொழது பாவ பலன்களை செய்வார்.சுப கிரகங்களுடன் சேரும் பொழது சுப பலன்களை தருவார்.
தனித்த புதன் நல்ல புத்திசாலிதனத்தை கொடுப்பார்.புதன் 1, 2, 4, 7, 10, ல் அமர்ந்து ஆட்சி.உச்சம்.நட்பு பெற்று அதன் தசா புத்தி காலங்களில் ஜாதகரை உன்னத உயர்வான நிலைக்கு கொண்டுவருவார்.
ஆசிரியர, வக்கில், நிதிபதிகள், கணக்கு, காசாளர், ஜோதிடர், புரோகிதர் ஆகியோரை தோற்றுவிப்பார்.
மறைந்த புதன் நிறைந்த தனத்தை தருவார்.ஆயில்யம் நட்சத்திர கோவில். கும்பகோணம் அருகே திருந்துதேவன்குடி ஊரில் உள்ள கற்கடகேஸ்வரர் கோவிலுக்கு ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் தரிசனம் செய்தால் சகல பாக்கியம் கிட்டும்.
பூச நட்சத்திர நண்பர்களே:


உங்களுடைய நட்சத்திர அதிபதி சனிஸ்வர பகவான். ஓன்பது கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற ஓரே கிரகம். பகை வீட்டில் பூச நட்சத்திரம். எப்பொழதும் மகிழ்ச்சியை தருபவர் சனி பகவான்.
பெரியோர்களிடம் பக்தி சிரத்தையும்,கல்வியில் திறமை.தெய்வ பக்தி வழிபாடு போன்ற நாட்டங்கள் நிறைய உண்டு.சாதாரண நிலையில் இருந்தாலும் பெரிய மனிதர்களின் நட்பை பெற்று நன்மதிப்பு பெறுவார்கள். எந்த செயலை செய்தாலும் பொறுமையாகவும், நிதானமாகவும்,செய்வார்கள். ஓரு காரியத்தை ஓரு முறைக்கு பல முறை யோசித்து தான் செய்வார்கள்.
எவ்வளவோ கவலைகள் இருந்தாலும் சதா காலம் சிரித்து பேசும் குணமுடையவர்கள். ஜாதகத்தில் சனி பலம் பெற்றால் சர்வ வல்லமை. எல்லா காரியங்கள் சாதிக்கும் ஆற்றலை கொடுக்கும்.
இரும்பு எண்னெய், கிணறு, இன்ஜினியரிங், அரசாங்க உத்யோகம், சனி பகவான் ஆட்சி, உச்சம் நட்பு 3, 6,11- ல் இருந்தால் ஓரு நாட்டை ஆளும் சக்தியையும் ஓரு ஊருக்கு தலைவராக விளங்க கூடிய யோகத்தை தரும்.
சனி தசையும், ராகு தசையும், ஓரு ஜாதகத்திற்கு யோகத்தை கொடுத்தால் வாழ்நாள் முழுதும் நிலைத்து இருக்கும்.மற்ற கிரகங்கள் கொடுத்து காலை வாரி விடும்.
போன ஜென்மத்து பாவ பூண்ணிய கணக்கை கையில் வைத்து கொண்டு ஓரு மணிதனை கோபுர உச்சிக்கு கொண்டு போவதும்.பிச்சை எடுக்க வைப்பதும் சனிபகவான் தான்.
சனிக்கு, புதன், சுக்கிரன் நட்பு. செவ்வாவ், சூரியன், சந்திரன் பகைவர்கள். கேந்திராதிபதி தோஷத்தை தாரத சனி பகவான் 1, 4, 7, 10, ல் இருந்தால் நிலையான உத்யோகமும் நிரந்தர செல்வந்தராக வாழும் யோகத்தை கொடுப்பார்.
பூச நட்சத்திர கோவில்.
புதுக்கோட்டை மாவட்டம் பேராவூரணி அருகே இருக்கும். விளங்குளம் ஸ்ரீ அட்சயபுரீஸ்வரர் ஆலயம்.ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் அங்கு சென்று வழிபாடு செய்தால் சனிபகவான் எல்லா சிக்கல்களையும் போக்குவார்.
புனர்பூச நட்சத்திர நண்பர்களே:


உங்களுடைய நட்சத்திராதிபதி குரு ராமர் அவதரித்த புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்ததால் தர்மத்திற்கு தலை வணங்கி நீதி நெறி தவறாமல் நடப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சால் நட்பு வட்டாரம் குடும்பம். அடுத்தவர்கள் நலனில் அக்கறை காட்டி உங்களுக்கு என்று தனிதத்துவமும் மதிப்பு மரியாதையும் பெற்றிருப்பீர்கள். ஒரு காலகட்டம் உங்களை வைத்து முன்னேறியவர்கள் எல்லாம் உங்களை உதாசீனம் செய்தவர்கள் எல்லாம் ஒரு கால கட்டத்தில் உங்களுடைய உதவியை நாடி வருவார்கள். செல்வாக்கை தேடும் அளவுக்கு பணம், பொன், பொருளுக்கு ஆசைப்பட மாட்டீர்கள். வாக்கு நாணயத்தை காப்பாற்றி கொள்வீர்கள். குடும்பம், குழந்தைகளால் அன்பும் ஆதரவும் கடைசி வரை கூட வரும்.
பொதுவாக குரு 1, 5, 9,ல் இருப்பது நல்லது. லக்னம், ராசி, கோசாரத்தில் குரு ஜாதக கட்டத்திற்கு 2, 5, 7, 9, வரும் பொழுது அதிக நன்மையை உங்களுக்கு செய்வார்.
பொதுவாக குரு பகவான் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு. வேறு கிரகங்களுடன் சேர்ந்தால் யோக பலன்களை வாரி வழங்குவார் பொதுவாக நிர்வாகம், வங்கி, பைனான்ஸ், கணக்கு வழக்கு C.A சம்பந்தபட்ட படிப்பு தொழில் விஞ்ஞான ஆராய்ச்சி போன்ற துறைகளில் சாதிக்க வைப்பார்.
தேடி போய் உதவி செய்யும் குணமுடையவர்.
குருவுக்கு என்று நட்சத்திர கோவில்
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் இருக்கும் ஸ்ரீஅதிதீஸ்வரர் ஆலயம் சென்று ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்தால் புனர்பூச நட்சத்திரம் வலிமையுடன் செயல்படும்.
திருவாதிரை நட்சத்திர நண்பர்களே:


உங்கள் நட்சத்திராதிபதி ராகு, சாய கிரகம் சிவ பெருமான் அவதரித்த நட்சத்திரம். உங்களுக்கு கோபம் வாரது. வந்தால் பாம்பு படம் எடுத்து ஆடுவதை போல ஓரு ஆட்டம் ஆடி விடுவீர்கள். சாதுவாக தோற்றத்தில் இருந்தாலும் எல்லா வில்லங்களும் செய்ய கூடிய சுபாவங்களும். அடுத்தவரை நேரம் பார்த்து பழி வாங்கி விடுவீர்கள்.
ஜாதக கட்டத்தில் ராகு 3, 6, 9, ஆகிய வீடுகளில் இருந்தாலும்.குரு பார்வை இருந்தாலும் உலகம் முழவதும் சுற்றி உயர்பதவி புகழ் பெறவும் பல வித மொழிகள் கற்கவும் அதிகாரம் அந்தஸ்து பொருள் வளத்தில் சிறப்பை பெறுவீர்கள். பின் நடக்க போவதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர். தெய்வ அனுகூலம் எப்பொழதும் துனை நிற்கும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் படித்தவர்களை காட்டிலும், படிக்காதா மேதைகள் தான் அதிகம். கடின உழைப்பு செய்தும் பணம் சம்பாதிப்பார்கள், தகடு தத்தம் செய்தும் பணம் சம்பாதிப்பார்கள். குடும்ப ஸ்தானத்தில் ராகு கேது அமைந்து சனி பார்த்தால் இரண்டு வாழ்க்கை அல்லது மனைவியால் டார்ச்சர் அதிகமாக இருக்கும்.
ராகுவுக்கு புதன், சுக்கிரன், சனி முவரும் நன்பர்கள். சூரியன் சந்திரன், குரு பகைவர்கள்.
நினைவு தெரிந்த நாள் முதலே பல வித கஷ்டங்கள் பட்டாலும் உங்களை முழுமையாக உயர்த்தி கொள்வதற்காக தீவிரமாக முயற்சி செய்து படிப்படியாக உயர்ந்து விடுவீர்கள்.
ராகுவுக்கு உண்டான கோவில். தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டை அருகில் ஆதிராம்பட்டினம் ஸ்ரீ அபயவரதிஸ்வரர் ஆலயம்.
மிருகசிரிஷம் நட்சத்திர நண்பர்களே:



உங்கள் நட்சத்திராதிபதியான செவ்வாய் செல்வத்தையும் வளமான வாழ்க்கையும் கொடுப்பவர். வாழ்ந்த குடும்பத்தில் பிறந்து ஓரு கால கட்டங்களில் எல்லா வற்றையும் இழந்து பின் வாழ்க்கையில் பிரபலம் பெற்று எல்லா வசதிகளையும் தேடி கொள்விர்கள். திறமை பரந்த என்னம். நல்ல புத்தி. இருந்தாலும் சில நேரங்களில் கிரிமினல் மாதிரி நடந்து கொள்விர்கள். சின்ன சின்ன காயங்கள். சிறங்குகள் தழம்பு உடலில் இருக்கும்.தான் செய்த தவற்றை அடுத்தவர்கள் மிது சுமத்தி நிங்கள் தப்பித்து கொள்விர்கள்.

இளமையில் இரண்டாவது தசையாக ராகு திசை வந்து விடுவாதல் I T I,டிப்ளமோ, போன்ற கல்வியும், அனுபவத்தில் ஓரு தொழிலை கற்று கொண்டு அதில் முதலாளியாக இருப்பிர். செவ்வாய் பலமானல் ஆட்சி உச்சம், குரு பார்வை பெற்றால் காவல்துறை, ரானுவம், சாப்ட்வேர் சம்பந்தபட்ட வேலையை கொடுக்கும்.

சனி, செவ்வாய் பார்வையும், இரு கிரகமும் சேர்ந்தால் கோசாரத்தில் சனி செவ்வாய் சேரும் பொழது விபத்து கண்டம், கால் முறிவு போன்ற அவஸ்தைகளை கொடுக்கும்.

இந்த நட்சத்திரத்திற்கு 4, தசையாக சனி நடந்தால் மரண கண்டம் வரும் என்பார்கள். அது அனுபவத்தில் எற்று கொள்ள முடியாது.
செவ்வாய், ராகு, கேது, சனி சம்பந்தம் பெற்றால் சென்ற பிறவியில் சகோதரன் மனைவியை அபகரித்தல். பங்காளிகள் துரோகங்கள், செய்த வகையில் சில பிரச்சனைகள் வரலாம்.

மிருகசிரிஷம் நட்சத்திர கோவில், திருவாருர் மாவட்டம் கொரடாச்சேரி வட்டம் எண்கன் ஸ்ரீ ஆதிநாராயணப் பெருமாள் கோவில்.
ரோகினி நட்சத்திர நண்பர்களே:


பெருமையும் புகழையும் தேடி கொள்ளும் சந்திரனின் ஆதிக்கம் பெற்ற உங்கள் நட்சத்திராதிபதி சந்திரன் உச்ச ராசிவிடான சந்திரனின் நட்சத்திரத்தில் பிறந்த நிங்கள் ஆசைகள் அதிகம் கொண்டவர்கள். பெண்கள் மிது அதிகம் விருப்பம் கொள்விர்கள். நட்பு வட்டாரங்கள் எல்லாம் எப்பொழதும் உங்களை புகழ்ந்து பேச வேண்டும் என்று நினைப்பிர்கள். சொன்ன சொல்லில் தவற மாட்டிர்கள். நல்ல குணங்கள் நிறைய இருந்தாலும் பிறர் பேச்சால் மனதளவில் வேதனை படுவிர்கள். உங்கள் நட்சத்திர கிரகம் சந்திரன் வேகமாக செல்லுவதை போல உங்கள் செயலும் நடையும் வேகமாக இருக்கும். பத்து நாளில் நடக்க வேண்டிய காரியங்களை இரண்டே நாளில் முடித்து விடுவீர்கள். விருட்சிகத்தில் இருந்து ரிஷபத்தை நோக்கி ஆரோ கதியில் சந்திரன் வரும் பொழது உங்கள் மனது தெளிவாக இருக்கும். எல்லா செயலும் வெற்றி பெறும். நீதி நேர்மையாக செயல்படுவிர்கள்.ரிஷபத்தில் இருந்து விருட்சிகத்தை நோக்கி போகும் பொழது வார்த்தைகளை கொடுத்து மாட்டி கொள்விர்கள். பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்து 15 வயதுக்கு மேல் வரும் ராகு மகா திசையில் இன்ஜினிரிங் தொழில் நுட்ப கல்விகளில் தேர்ச்சி அடைந்து வெளிநாட்டு தொடர்பு உத்யோக வாய்ப்பை பெறுவிர்கள். ராகு, மேஷம், ரிசபம், கடகம், கன்னி, மகரம் விடுகளில் இருந்தால் உள்ள நாட்டிலேயே நல்ல உத்யோகம் கிட்டும்.
சந்திரன் 3, 6, 9, 11,ல் இருப்பது நல்லது. 8-மிடத்தில் இருந்தால் மன குழப்பம் அதிகமாக இருக்கும். சந்திரன், ராகு, கேது, சனி சம்பந்தம் பெறுவது தாயாதி வர்க்கத்தில் பெண் சாபம் உடன் பிறந்த சகோதரிகள் வகையில் பிரச்சனைகளை கொடுக்கும்.பாதகாதிபதி தொடர்ப்பு.சாரம் பெற்றால் மணநிலை பாதிப்புகள் இருக்கும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் தாய்மாமன் குடும்பத்திற்கு ஆகாது என்று ஒரு தவறான கருத்து உள்ளது..அதற்கு அதாரம் எந்த நூலிலூம் இல்லை.
ரோகினிக்கு உண்டான கோவில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள ஸ்ரீ பாண்டவ தூத ஸ்ரீ கிருஷ்ண பெருமாள் கோவில்.
கிருத்திகை நட்சத்திர நண்பர்களே:


உங்கள் நட்சத்திர அதிபதி சூரியன் 1 ம் பாதமாக செவ்வாய் வீட்டில் இருந்தாலும் சூரியனின் உச்ச வீடு மேசமாகும்.நம்முடைய ஜாதகத்தில் ஆன்மாகாரகன்.சூரியன் பலமாக அமைந்தால் எப்பொழதும் அதிகாரமிக்க பதவி புகழ் அந்தஸ்து செல்வாக்கு தனம் ஆகியவற்றை கொடுப்பார். எல்லா மொழிகளையும் கற்ற மேதையாக்குவார்.முன் கோபியாகவும் சுத்தமான நிலையில் வாழம் முறையையும்.திறமையான மனிதராக வாழ்ந்தாலும் 20 வயதில் ராகு திசை நடப்பு கால கட்டங்களில் வந்தால் அரசியல். தொழில் நுட்பம் மத்திய அரசு பணி ரானுவம் ஆகியவற்றில் பணிபுரியம் வாய்ப்பை கொடுப்பார்.வேத சாஸ்திரங்களில் நம்பிக்கை இருக்காது.தன்னுடைய சுய முயற்சியால் வாழ்க்கையில் பலவித வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்விர்கள்.முதாதையர் சொத்துகள் இருந்தாலும் அதை அனுபவிக்க இயலாமல் கோர்ட் வம்பு வழக்கு தொடுப்பார்கள்.
சூரியன் ஆட்சி உச்சம் நட்பு பெற்றால் குரு பார்வை இருந்தால் சகல காரியமும் சாதிக்க கூடிய வல்லாமை உண்டாகும்.2, 4, 6, 8,9,ஆகிய தசைகள் புத்திகள் நன்மையை செய்யும்..
சூரிய்ன் ராகு கேது சனி சம்பந்தம் பெற்றால் முண்னோர் வகை சாபம் குடும்பத்திற்கு உண்டு.சித்த பிரம்மை போன்ற மன நோய்கள் ஏற்படுத்துவார்.
சூரியனுக்கு முன்னும் பின்னும் சுப கிரகங்கள் இருப்பது வாசி யோகம் வேசி யோகம் அமைந்து செல்வ சீமானக வாழ்க்கை அமையும்.
சூரியனுக்கு குரு சந்திரன் செவ்வாய் முவரும் நட்பு.
மற்ற கிரகங்கள் எல்லாம் நட்பு சமமும் ஆகும்.
கார்த்திகை நட்சத்திரத்திற்கு கோவில்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகில் கஞ்சனாகரம் என்னும் ஊரிலிருக்கும் ஸ்ரீ காத்ர சுந்தரேசுவரர் ஆலயம்.
பரணி நட்சத்திரம்:

திடககத்திர உடலுடன் நற்குண நற்செய்கைகள் எதிரிகளை சுலபத்தில் வெற்றி கொள்பவர்களாகவும் நன்றி அன்பு பாசம் குடும்ப பொருப்பு ஆகியவைகள் உங்களுடைய. பிளஷ் பாயிண்டுகள்.

திறமைகளை கொண்டவர்களாகவும் மற்றவர்களை புரிந்து கொண்டும் தான தருமங்கள் செய்வதில்லும் மற்றவர்களால் புகழையும் கிர்த்தியும் பெறுவார்கள்.
உங்கள் நட்சத்திராதிபதி சுக்கிரன் பரணி நட்சத்திரம் தரணி ஆளும்.குட்டி சுக்கிர திசை குடும்பத்தை நாசம் செய்யும் பழமொழிகள் இருந்தாலும் கங்கன குனத்துடனும் வஞ்சக நெங்சத்துடன் தன்னுடைய காரியங்களை சாதித்து கொள்வதில் திறமைசாலியாக விளங்குவார்.

செவ்வாயின் விட்டில் சுக்கிரனின் நட்சத்திரம் வருவாதல் காதல் கள்ள தொடர்பு போன்ற பாதகத்தையும் செய்யும். கல்வி அறிவு பொதுமான அளவு இல்லாவிட்டாலும் அனுபவ அறிவை கொண்டு பின் வாழ்க்கையில் செல்வம் செல்வாக்கு போன்ற நல்ல யோகத்தை கொடுக்கும்..30 வயது வரை வண்டி சக்கரம் போல் உருண்டு பிரண்டாலும் பின் பலன் புகழ் அந்தஸ்து கிர்த்தி பெற்ற கௌரவமான வாழ்வு கிடைக்கும்.


சுக்கிரன் திரிகோன ஸ்தானமான 1, 5, 9, ஆகிய ஸ்தானங்களிலும் ஆட்சி உச்சம்.நட்பு பெற்றாலும் அதிக நன்மையை செய்யும்.பாதகாதிபதி சனி சேர்க்கை பார்வை பெறாமலும்..6, 8, 12, சாரம் பெறாமல் இருப்பதும் நல்லது.அவ்வாறு அமைந்தால் போன ஜென்மத்தில் கட்டிய மணைவிக்கு துரோகம் செய்த பாவம் பின் தொடரும்.
நல்ல மணைவி.நல்ல குழந்தைகள் அமைந்தாலும் பிற மாதர் மேல் இச்சையால் பொன் பொருள் காசு இழக்க நேரிடும்..
சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் குதிரைகள் யானைகள் இவற்றை கொடுத்து வியாபாரத்தில் பெறும் ஆதாயத்தை கொடுத்து வித்தையால் உலகத்தின் பார்வையை கவர வைப்பான்.
கட்டிய மனைவியால் பெரும் யோகத்தை கொடுப்பார்.
சுக்கிரனுக்கு சனியும்.புதனும் நண்பர்கள்.குருவும் செவ்வாய்யும் சமமானவர்கள் மற்ற கிரகங்கள் எல்லாம் பகைவர்கள்.
பரணி நட்சத்திரத்திற்கு என்று தனி கோவில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை நாகப்பட்டினம் சாலையில் உள்ள நல்லாடை ஏனும் ஊரில் இருக்கும் ஸ்ரீ அக்னிஸ்வரர் கோவிலில் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
நட்சத்திர பலன்கள்:

அசுவினி:



இந்த நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவான். வேதாந்த அறிவுக்கு காரகன். மோட்சத்திற்கும், பாவ விமோசனத்துக்கு காரகன். விஞ்ஞானம் தொழில் நுட்ப அறிவுக்கு காரக தன்மை உள்ள கேது பகவான் சுபிட்சம், சௌபாக்கியம், சுகபோகம் அனைத்தும் கொடுப்பான்.
நல்ல அறிவு, ஆற்றல் எதையும் சாதிக்க வைப்பார். சில நேரங்களில் எதிர்பாராத சங்கடங்களை சந்தித்தாலும் முடிவில் நீங்கள் தான் வெற்றி பெறுவீர்கள் .வெற்றிகளை, சந்தோஷத்தை கண்டு கொள்ள மாட்டீர்கள். தோல்வி வந்தால் அதை பெரியதாக நினைத்து கவலை படுவீர்கள்.
தங்களை யாரும் மிஞ்சிட கூடாது என்ற கங்கனத்தில் குறிக்கோளை மனதில் வைத்து செயல்படுவீர்கள். தொழில் வாழ்க்கையில் பெறும் சாதனைகளை செய்வீர்கள். மருத்துவம், இன்ஜினியரிங், தொழில்களில் சாதனை செய்வீர்கள்.
குடும்ப பொறுப்பு, தேவைகளை உடனுக்குடனே செய்து முடிப்பீர்கள். நீடித்த நோய் நோடி தாக்காது. அவ்வப்பொழது சின்ன சின்ன மன குழப்பங்கள் உங்களை வேதனைபடுத்தும். இரண்டாவது திசையே சுக்கிர திசை வந்து விடுவாதல் சுக போக வாழ்க்கை வாழ ஆசைப் படுவிர்கள். சிலர் கலப்பு திருமணம், காதல் திருமணம் செய்து கொள்வார்கள்.
சிலர் காதல் தோல்விகளை சந்தித்து வாழ்நாள் முழுதும் வேதனை படுவார்கள். சிலர் வெளிநாட்டு வேலை அன்னிய தேசத்திலேயே தங்கி வாழ்கை வாழ்வார்கள்.
ஜாதக கட்டத்தில் லக்னத்தில் இருந்து 3, 6, 11, கேது பகவான் இருந்தால் செல்வ சீமானாக வாழ்க்கை அமையும். கேதுவை குரு பார்த்தாலும், கேதுவுக்கு திரிகோணத்தில் குரு இருந்தாலும் அரசு வேலை, தலைமை பதவி, புகழ் அந்தஸ்து பெற்று வளமான வாழ்க்கை அமையும்.
கேந்திரம் 1, 4, 7, 10 ல் கேது இருந்தாலும் நிரந்தர உத்தியோகத்தில் வருமானம் கிடைக்கும்.
2, 8,ல் கேது இருந்தாலும், பாதகாதிபதி சாரம் பெற்றாலும், 6, 8,12, அதிபதி சாரம் பெற்றாலும் குடும்ப வாழ்கையில் சங்கடங்களை கொடுக்கும்.
மோட்ச கிரகமான கேது முன்னோர் வகையில் சாபங்களை கொடுப்பாா். கேது, சனியுடன் சேர்ந்தாலும், சனி பார்வை கேதுவுக்கு இருந்தாலும், குடும்பத்திற்கு பெண் சாபம். மனநிலை பாதிக்கபட்டவர்கள் சாபங்கள் உள்ளது என்பது பொது விதி.
குரு பார்வை பெற்றால் சாப விமோசனம் பெறலாம். அசுவினியில் பிறந்தவர்கள் பின் வாழ்க்கை நன்றாக இருக்கும். புதன், சுக்கிரன், சனி, குரு இவருடைய நண்பர்கள். சூரியன், சந்திரன், கடும் எதிர்ப்பு பகைவர்கள். இந்த நட்சத்திரத்திற்கு என்று கோவில் நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டி இருக்கும் ஸ்ரீ பவ ஓளஷதீஸ்வரர் ஆலயத்திற்கு ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் சென்று அர்ச்சனை செய்து கற்பூர ஆர்த்தி பார்த்தால் கேது பகவான் உங்கள் நட்சத்திரத்தை வலிமையாக்கி பிரகாசிக்க வைப்பார்.
என் இனிய நண்பர்களே:


நான் இது வரை பிறந்த நாள் கொண்டாடியது இல்லை. ஏதேனும் ஒரு கோவிலுக்கு சென்று ஒரு நாள் என்னுடைய வருமானத்தில் பத்து ரூபாய் சேமித்து பிறந்த நாள் வரும் பொழுது அன்னதானம் செய்து வருவேன். நான் பேஸ் புக்கில் வந்து மூன்று மாதங்கள் ஆகிறாதால் நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வோம் என்ற எண்ணத்தில் பகிர்ந்து கொண்டேன். நமக்கு இப்பொழுது 2200 பேர் நண்பர்கள்.
எந்த பிறந்த நாளிலும் இல்லாத சந்தோசம் இந்த பிறந்த நாளில். எனக்கு இத்தனை வாழ்த்துகளா? இதை நன்மதிப்பாக வெகுமதியாக நினைத்து இனி வரும் காலங்களில் எல்லோரையும் நம்முடைய சங்கல்ப பூஜையில் சேர்க்க உள்ளேன். எல்லோரும் எல்லாம் பெற ஊக்கபடுத்திய நல் இதயங்களுக்கு நன்றி.
குழந்தை செல்வங்கள்:



அவரவர் முற்பிறவியில் செய்த நல்வினை. திவினைகளின் தன்மைகளை பார்த்து பிரம்ம தேவனால் உருவாதே ஒரு ஜெனனம். பிறக்கும் நேரம், விதிபலன், நட்சத்திரம் எல்லாம் இறைவனின் கால கணிதத்தில் பதிவு செய்த பின்தான் இந்த உலகத்தில் கண் விழிக்கிறார்கள். பிறக்கும் எல்லா குழந்தைகளும் ஒரு வருஷத்துக்கு கடவுளின் குழந்தைகள். எல்லா குழந்தைகளுக்கும் ஒரு வருஷம் வரை பாலரிஷ்ட தோஷம் உண்டு. ஒரு வயது வரை ஜாதகம் எழுத கூடாது. மூன்றாவது நாள் நட்சத்திரம், ராசியை மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும். 16 - நாள் சென்ற பின் ஒரு சுத்தமான வெள்ளை துணியில் ஒரு பிடி வேப்ப இலையை வைத்து முடிந்து கொள்ள வேண்டும். பூஜை அறையில் வைத்து தினமும் கண்களில் வைத்து பெயர், நட்சத்திரம் சொல்லி ஆயுள், அறிவு, ஆற்றலை தரும்படி வேண்டி கொள்ள வேண்டும். இவ்வாறு 90 நாட்கள் வேண்டி கொண்டு பின் ஓடும் ஆற்றில் அல்லது கோவில் குளத்தில் விட்டுவிட வேண்டும்.

பின்னர் 3 வது மாதத்தில் இருந்து அரைகுயர் நோட்டில் உங்கள் குழந்தையின் பெயரை தினமும் 48 முறை எழுதி 48 நாட்கள் எழுதி பின்னர் அந்த நோட்டை கோவில் குளத்தில் விட்டு விட வேண்டும்.

ஒரு வருஷம் கழித்து ஜாதகம் எழுதி குலதெய்வம், எல்லை தெய்வம், ஆகியவற்றிற்கு தத்தம் மாற்றி கொடுக்க வேண்டும். கீழ்கண்ட பொருட்களுடன் கோவிலுக்கு சென்று

1. 2 படி தவிடு
2. மஞ்சள் வேஷ்டி - 1
3. மஞ்சள் துண்டு -1
4. அர்ச்சனை சாமான்கள்
5. 11 ருபாய் காசு
ஆகியவற்றை கொண்டு பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியோர்களிடம் தவிடுக்கு பிள்ளையை மாற்றி கொண்டு அய்யருக்கு வேஷ்டி துண்டு தானமாக தர வேண்டும்.

காசை ஊண்டியலில் செலுத்த வேண்டும்.
முருகனுக்கு தத்தம் கொடுத்தால் கருப்பட்டி வாங்கி கொடுக்க வேண்டும். பெருமாளுக்கு தத்தம் கொடுத்தால் துலாபாரம் கொடுக்க வேண்டும். பொதுவாக பெயர் வைக்கும் பொது விதி என் பிறவி எண்ணுக்கு பெயர் வைப்பதைவிட பிரமிடு முறைபடி கூட்டு எண் 1, 3, 6, 9, என்ற முறையில் இன்சியலுடன் சேர்த்து வைப்பதே நல்லது. உதாரணமாக
V.Bindu.
621546
83691
2961
267
84
3
இப்படி தான் பிரமிடு எண் கண்டு பிடிக்கலாம். இந்த எண்கள் காலண்டர், டைரி போன்றவற்றில் ஆங்கில வார்த்தைக்கு ஒவ்வொறு எண்தெரியும்.
நான் ஒரு முறை தஞ்சாவூர் சரஸ்வதி மாஹலில் 90 வயது உள்ள ஓரு சிவாச்சாரியாரை சந்தித்தேன். அஅப்பொழது அவர் என்னிடம் தஞ்சையை இராஜராஜ சோழன் ஆண்ட பொழுது அவரது வம்சாவளியினர் குழந்தைகளுக்கு அம்மை, பாலரிஷ்ட தோசம் வரக்கூடாது என்பதற்காக தான் புன்னைநல்லுர் மாரியமமன் கோவிலை கட்டி குழந்தைகளுக்கு தத்தம் மாற்றி கொடுக்கும் பழக்கம் வந்ததாம்.

நாமும் நம்முடைய செல்வங்களை காப்போம்.
நாளை முதல் 27 நட்சத்திர பலன்களும் கோவில்களையும் பார்ப்போம்.
அன்பு நண்பர்களே:

      30.06.2015 என்னுடைய பிறந்த நாள். இன்று முதல் குழந்தைகள் தத்தம் மாற்றி கொடுப்பது முதல் நட்சத்திரங்களின் பலன்கள் கோவில்கள் விரிவாக எழுதி நம்முடைய நண்பர்கள் வீட்டில் ஒவ்வொறு சாளகிராமம் கொடுத்து ஏழு தலைமுறைக்கு நீங்கள் புண்ணியம் செய்த பலனை அடைய வரும் 2016 முதல் உங்கள் முகவரிக்கு கிடைக்க சாளகிராமம் வாங்கி தர உள்ளேன். அப்பொழுது உங்கள் முகவரியை தெரிந்து கொள்கிறேன். நானும், என் மனைவி அபிராமி, என் மகள் பிந்து உங்களுடைய ஆசிர்வாதத்தால் இந்த சேவையை தொடர்கிறோம்.
அன்பு நண்பர்களே :



இன்றைய நமது ஸ்படிக லிங்க பூஜையில் பதிவு செய்யபட்ட பெயர்களுடன் விடுபட்ட பெயர்களும், புதிய நண்பர்களின் பெயர் ராசிகளையும் குறித்து கொண்டு இனி வரும் பிரதோஷங்களில் எல்லோர் பெயரையும் நட்சத்திரம் சொல்லி சங்கல்பம் செய்வோம். நம்முடைய நண்பர்கள் குடும்பத்தினர் எந்த குறையும் இல்லாத வாழ்க்கை வாழ, நிறைவும், நிம்மதி பெற பிரதோஷ பூஜை செய்வோம், சாளகிராம பூஜை செய்வோம்.
இன்று விடுபட்ட நண்பர்கள் வருத்தபட வேண்டாம். உங்களது பெயரை பதிவு செய்து உள்ளேன். அடுத்த பிரதோஷம், சாளகிராம பூஜையில் சங்கல்பம் செய்வேன்.
அன்பு நண்பர்களே:
 

1. பிரதிபா, அசுவினி
2. ராமன், முலம்
3. ராஜலெட்சுமி, அவிட்டம்
4.வெங்கடசுப்பிரமனியன், திருவோனம்.
5. ராஜா, அஸ்தம்.
6. விபு சௌத்ரா, பரணி
7. ராஜா நந்தபாலன், கிருத்திகை
8. அய்யப்பன், பூரம்
7. சிவராம ஷர்மா, உத்திரட்டாதி
8. வரதராஜாபெருமாள், திருவாதிரை
9. வெங்கடசுப்பிரமனியன்
10. ஆனந்த பத்மநாபன், அசுவினி
11. ராஜிவ்,அஸ்தம்
12. பாலசுப்பிரமனியன், விசாகம்
13. பாலாஜி, சித்திரை
14. கண்னன், மகம்
15. முத்துலெட்சுமி, முலம்.
16. விஜய பெருமாள், முலம்.
15. நந்தகுமார், அனுசம்.
16. நிலகன்டன், அனுசம்.
17. ராஜாகணபதி, சித்திரை.
18. உதயநிதி கிருஷ்னா, திருவோனம்
19. சிதம்பரம், ரேவதி.
20. மாறன், உத்திரட்டாதி.
21, ராஜசேகரன், முலம்.
22. சுபா, அசுவினி.
22. கிருஷ்னமுர்த்தி, ரோகினி.
23. நவின், அனுசம்.
24. சினிவாஷ், உத்திரட்டாதி.
25. மெய்கண்டன், மகம்.
26. அனுநிவேதா, விசாகம்.
27. கௌசிக்குமரன், கிருத்திகை.
26. விரபாண்டியன், ரோகினி.
27. கேசவன், புனர்பூசம்
28. ரகுரமேஸ், சித்திரை.
29. பாலமுருகன், உத்திரம்.
30. வேலு, மகம்.
31. கோபால கிருஸ்னன், அவிட்டம்.
32. பாஸ்கரன், உத்ரம்.
33. ரமேஷ் ராம், உத்திரம்.
34. கிள்ளிவானன், அவிட்டம்.
35. ராமா, சதையம்.
36, நாகமுத்து பரணி.
ஆகிய நண்பர்களுக்கும் திங்கள் கிழமை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சந்திர ஓறையில் ஸ்படிக லிங்க பூஜையில் தங்கள் பெயர் நட்சத்திரம் சொல்லி சங்கல்பம் செய்துள்ளேன். இதே போல் தங்களுடைய பெயர்களை பதிவு செய்து வைத்து தமிழ் மாத பிறக்கும் முதல் நாள் சாளகிராம பூஜையிலும் சங்கல்பம் செய்ய படும்.
நமது குடும்ப நண்பர்கள் யாவரும் எல்லா நலமும் வளமும் ஆயுள், ஆரோக்கியம், எடுக்கும் காரியங்கள் வெற்றி பெறவும் தொழில் வியாபரம் சிறக்க எல்லாம் வல்ல சிவபெருமானை வேண்டி கொள்கிறேன்.
நமச்சிவாயம் வாழ்க!
நாதன்தாள் வாழ்க!
இமை பொழதும் என் நெஞ்சில்
நிங்காதாள் வாழ்க!
சிவ சிவ நமச்சிவாய!
அன்பு நண்பர்களே:



நம்முடைய நண்பர்கள் சிலரது முயற்சிகள் கால தாமதம்..எடுக்கின்ற காரியங்கள் கை கூடாமை.குழப்பம் சங்கடங்கள் விரக்தி வேதனைகளில் உள்ளார்கள்.உங்களுடைய முயற்சிகள் வெற்றி பெறவும் உங்கள் தேவைகள் பூர்த்தியாகவும் நாளை திங்கள் கிழமை சோம வாரத்தில் ஸ்படிக லிங்க பூஜை செய்ய செய்ய உள்ளேன்.
அதானல் தங்களுடைய பெயர் நட்சத்திரம் மட்டும் காமென்ட்ஸில் பதிவு செய்தால் சங்கல்பம் செய்ய உதவியாக இருக்கும்.
வாழ்க வளமுடன்