Saturday, 25 July 2015

நவரத்தின கற்களை பயன்படுத்தும் முறைகள்:



           ஒவ்வொரு ராசிகளுக்கும் சொல்லப்படும் கற்களை நீங்களே செய்து கொள்ளலாம்.
பொதுவாக நவரத்தின கற்களை மோதிரமாக கையில் போட்டால், எப்பொழுதும் கையில் சுற்றி கொண்டே இருப்பார்கள். சில பேர் கழற்றி வைத்து விடுவார்கள். இவ்வாறு செய்தால் அதற்கு பலன்களே இருக்காது. பொதுவாக உங்கள் ராசிக்கு உள்ள கற்களை வெள்ளி தாயத்தில் அடைத்து அதற்கு உண்டான கோவில்களுக்கு அதற்கு உண்டான கிழமைகளில் சென்றால் நீங்கள் அணியும் கற்கள் ஆக்டிவ் ஆகி விடும்.  இரண்டு கற்களுக்கு மேல் இருந்தால் ஒரு கல் வைத்து மெழுகு ஊற்றி அடுத்த கல்லை வைக்க வேண்டும். ஒவ்வொறு கல்லும் மற்றொரு கல்லுடன் உரசக் கூடாது. இவ்வாறு அடைத்து தாயத்தின் மூடியை பெவி குயிக் வைத்து முடி விடலாம். தரமான கற்கள் குறைவான விலையில் கிடைக்கும் இடம்.

சஞ்சிவி ஜெம்ஸ்,
பெரியவர் கடை,
82,பெரிய செட்டித்தெரு, மாடியில் கடை.
திருச்சி செல்.98424 77153.
என்ற முகவரியில் நயமான கற்கள் கிடைக்கும் 1 காரட் 20 ருபாய் முதல் 1500 வரைக்கும் கிடைக்கும்.
அன்பு நண்பர்களே:



       நாளை முதல் 12 ராசிநேயர்களுக்கும் நவரத்தினங்கள் அணியும் முறையையும், வழிபட வேண்டிய கோவில்களையும் எழுதலாம் என்று நினைக்கிறேன்.

      நவரத்தினங்களின் வலிமை பற்றி சாந்தி பரிகார ரத்னாஹரம் நூலில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. நவரத்தின ஆபரணங்களை அணிந்து நவக்கிரகங்களை சாந்தப்படுத்தி அவற்றின் நல்லருளைப் பெறவும் உடல்நலம், மனநலம், படிப்பு, தொழில், தடைகள் அகல, சிறியவர் முதல் பெரியவர் வரை பயன் படுத்தும் விதமாக நம் முன்னோர் நவரத்தினங்களை அன்றாட வாழ்வில் உயர்வு படுத்தியுள்ளனர். எல்லோருக்கும் ஒரு குழப்பம் உள்ளது. பிறந்த நட்சத்திரத்திற்கு கல் அணிவதா? ராசிக்கு அணிவதா ? நடக்கும் திசைக்கு கல் அணிவதா? இந்த குழப்பத்தை பயன்படுத்தி கல் வியாபாரிகளும், ஜோதிடர்களும, போலியான கற்களை அதிக விலைக்கு விற்கின்றனர். அதிகபட்சம் நயமான கற்கள் 200 ரூபாய் முதல் 1500 ரூபாய்க்கு வாங்கி விடலாம்.
தெளிவான பதிவுகளை 12 ராசிகளுக்கும் எழுதுகிறேன்.

Tuesday, 14 July 2015

ரேவதி நட்சத்திர நண்பர்களே:

      நட்சத்திர அதிபதி புதன். பகை வீட்டில் நட்சத்திரம் இருந்தாலும் புதனுடைய நட்பு கிரகமான சுக்கிரன் இங்கு தான் உச்சம். அதனால் உங்கள் நட்சத்திரம் அதிக வலிமை பெறும். அழகான தோற்றம் மச்சங்கள் உடையவர்களாகவும். படித்த மேதையாக இருப்பார்கள். சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்கள். எல்லோரிடமும் சகஜமாக குணம் கொண்டவர்கள். திறமைசாலியாகவும், தைரியசாலியாகவும், எளிமையான வாழ்க்கை வாழ்வார்கள். அவர்களை பற்றி அவர்களே மேலாக நினைப்பார்கள். நீதி, நேர்மை, சத்தியம், சத்ருக்களை வெல்லும் ஆற்றல் பெற்றவர்கள். சகல சுகங்களை பெற்று வசதியான வாழ்க்கை வாழ்வார்கள்.

     கணிதம், வாதம், வைத்திய தொழிலுக்கு, காரணமான புதன் கேந்திரம் பெற்று ஆட்சி உச்சம் நட்பு சூரியன், சுக்கிரன், சனி சம்பந்தம் பெற்றால் வலிமையான கல்வி யோகத்தை கொடுக்கும். மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய வீடுகளில் புதன் இருந்தால் சாஸ்த்திர ஆராய்ச்சியும் விஞ்ஞான படிப்பும் அமையும்.


     தாய்மாமன் கிரகமான புதன் வலிமை பெற்றாலும் மறைந்தாலும் அவர்களால் அன்பும், ஆதரவும் உண்டு. பாவ கிரகத்துடன் சேர்ந்தால் பாவ பலனையும் சுப கிரகங்களுடன் சேர்ந்தால் சுப பலனையும் தருவார்கள்.
 

 ரேவதி நட்சத்திர கோவில். திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டை அருகிலுள்ள துருகுடி கைலாசநாதர் கோவில் சென்று வணங்குவது நல்லது.
உத்திரட்டாதி நட்சத்திர நண்பர்களே:

        நட்சத்திர அதிபதி சனி, குருவின் வீட்டில். உ என்று அரம்பிக்கும் மூன்று நட்சத்திரமான உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சுகம் போகம், சௌபாக்கியம் பெற்று சுகமுடன் வாழ்வார்கள் என்பது சந்திரகாவியம் என்ற ஜோதிட நூலின் விதி. மக்களின் செல்வாக்கை பெற சனி பகவான் ஜாதகத்தில் பலம் பெற வேண்டும். நல்ல நோக்கங்கள், அழகான வாக்கு, வன்மைகளுடன், செல்வாக்கு, சொல்வாக்கு, பக்தி நாட்டம், கல்வி, ஞானம் பெற்று கடின உழைப்பில் முன்னேற்றம் காண்பீர்கள்.
 திறமைசாலியாக இருந்தாலும் சொந்த புத்தி இருக்காது. பெரிய குடும்ப பொறுப்பில் இருப்பீர்கள். நட்பு வட்டங்கள் பெரிய அளவில் இருந்தாலும் இழிவான நண்பர்கள் சேர்க்கையும் இருக்கும். சனிபகவான் நட்பு ஆட்சி உச்சபலம் பெற்று கேந்திரம் பெற்றாலும் 3, 6, 11- இருந்தாலும் சுய சாரம் பெற்றாலும் சாசயோகம் பெற்று அதிகார மிக்க பதவியை கொடுப்பார். வசதி வாய்ப்புகளை தேடி போக வேண்டாம். தானே தேடி வரும். முப்பது வயது வரை உருண்டு பிரண்டாலும் செல்வம் சேராது. பின் பலன் பதவிகள் தானே தேடி வரும். ஒவ்வொரு திசையிலும் சனி புத்தி அந்தரம் வரும் பொழது மேன்மையான பலன்களை கொடுப்பார்கள். சுய தொழில் அரசு மத்திய அரசு பணி அதிகாரம் செய்ய கூடிய பதவிகள் அமையும்.

உத்திரட்டாதி நட்சத்திர கோவில். புதுக்கோட்டை ஆவுடையார் கோவில் அருகே உள்ள தீயத்தூர் ஊரில் இருக்கும் அருள்மிகு ஸ்ரீசகஸ்ர லட்சுமீஸ்வரர் ஆலயம் சென்று வழிபடுவது நல்லது.
பூரட்டாதி நட்சத்திர நண்பர்களே:


       உங்கள் நட்சத்திர அதிபதி குரு சனியின் வீட்டில். மற்றவர்களின் நோக்கம் அறிந்து அதற்கு ஏற்றவாறு காரியம் சாதிக்கும் குணம் கொண்டவர்கள். மனைவியின் சொல்லுக்கு கட்டுபட்டு நடப்பவர்கள். ஆடை, ஆபரணங்கள் போட்டு அழகாய் பிரகாசிப்பீர்கள். திடமான சாரிரத்துடன் பக்தி நெறியில் வாழ்வீ ர்கள். பெரிய மனிதர்கள் சகவாசம் பெற்று கௌரவமான வாழ்க்கை வாழ்
வீர்கள்.

     படித்த அறிஞ்சர்களாகவும், கவிஞராகவும், ஆசிரியர்களாகவும், நாகரிக குணங்களுடன் எல்லோரிடமும் சகஜமாக பழகும் ஆற்றல் பெற்ற நீங்கள் அடுத்தவர்கள் காரியத்தை முடித்து கொடுப்பீர்கள். உங்கள் காரியங்கள் முடிக்க முடியாமல் திண்டாடுவீர்கள். சுவை விரும்பிகள், சொந்த பந்தம் போற்றும் மனிதராக நட்பு வட்டங்கள் உங்கள் ஆலோசனை பெற்றுதான் செயல்படுவார்கள்.


     தொழில் வளம், வாக்கு, நாணயம், நீதி, நேர்மையுடன் செயல்படுவீ ர்கள். சாதாரண மனிதனையும் சாதிக்க வைக்கும் நட்சத்திரமாகும். குரு பகவான் மற்ற கிரகங்களுடன் சேரும் பொழுது அதிக வலிமை பெறுவார். சந்திரன், செவ்வாய், சூரியன் சேர்க்கை பார்வை பெற்றால் விவேகத்தை அளிப்பார். வித்தைகளில் வல்லமை தருவார். பண்டிதர்களை உருவாக்குவார். நட்சத்திர அதிபதி திரிகோணம் பெற்றால் சகல சக்தியையும் கொடுப்பார். ரிஷபம், சிம்மம், விருட்சிகம், கும்பம் வீடுகளில் அமர்ந்தால் முதல் தர யோகத்தை கொடுப்பார். குரு இருக்கும் வீட்டை விட பார்க்கும் இடத்தை வலிமையாக்குவார். புத்திரகாரகன் பிள்ளைகளால் பெருமையை தருவான். வலியவனை எளிமையாக்கி கோபுர உச்சியில் கொண்டு செல்வான்.
சாரபலம், திக்பலம், திருக்பலம் பெற்றால் நாட்டை ஆளவைப்பார்.


       பூரட்டாதி நட்சத்திர கோவில் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுபள்ளி அருகே ரெங்கநாதபுரத்தில் இருக்கும் திருஆனேஸ்வரர் ஆலயம் சென்று வழிபடுவது நல்லது.

Sunday, 12 July 2015

சதய நட்சத்திர நண்பர்களே:


           உங்களுடைய நட்சத்திர அதிபதி ராகு நட்பு வீட்டில் பிரவேசம். ராகு சாய கிரகமானாலும் வலிமையான வளமான வாழ்வு கொடுக்கும் நட்சத்திரம்.
அழகான வசிகர தோற்றமும், தான தருமம் செய்யும் குணங்களுடன், எதிர்மறையான சிந்தனை உடையவர்களாக இருப்பார்கள். கோப குணமும், உற்சாகம் நிறைந்த குணமும் இருக்கும். நினைத்த காரியத்தை முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். பிரபல நோக்கமும் எந்த காரியத்தையும் தீர யோசித்து நல்லது செய்வார்கள். கடின உழைப்பு உழைத்து மற்றவர்களால் புகழை பெறுவார்கள்.

நீதி சொல்லும் நீதிமானும், குற்றவாளி கூண்டில் நிற்கும் குற்றவாளியும் இந்த நட்சத்திரத்தில் தான் பிறந்து இருப்பார்கள். கடத்தல் கள்ள தொடர்பு தொழில்கள் செய்ய துண்டும் நட்சத்திரம். ராகு பலம் பெற்றால் ஸ்பெகுலேஷன், சுதாட்டம், ஷேர் வர்த்தகம் மூ லம் கோடீஸ்வரர்களை உருவாக்குவார்கள்.

பலம் பெறும் ராகு, சூரியன், சந்திரன் சேர்க்கை பெறாமலும் சாரம் பெறாமல் 3, 6, 11 - லிருந்தால் டெக்னிக்கல் சாப்ட்வேர், விஞ்ஞானத்துறை மூலம் பெரும் செல்வாக்கை தருவார்.

புதன், சுக்கிரன், சனி பார்வை பெற்றால் இனிமையான இன்பமான வாழ்வை தருவார். ஆனால் டென்சன், டெம்டேசனுடன் வாழ்வார்கள். தான தருமங்கள் செய்வார்கள். ஆனால் விளம்பர படுத்தி கொள்வார்கள். களத்திர வாழ்க்கை மட்டும் சுகத்தை தராது.

சதய நட்சத்திர கோவில். திருவாருர் மாவட்டம் நன்னிலம் அருகே திருப்புகலூர் அருள்மிகு அக்னீஸ்வரர் சிவாலயம் சென்று வழிபடுவது நல்லது.
அவிட்ட நட்சத்திர நண்பர்களே:



           உங்கள் நட்சத்திர அதிபதி செவ்வாய். செவ்வாய்க்கு, மகரம் தான் உச்ச ராசி. அவிட்டத்தில் பிறந்தால் தவிட்டு பானையும் தங்கமாம். பானை இருக்கும் தவிடு இருக்காது. முதல் திசையே பாதகாதிபதி திசை என்பாதல் வீடு விட்டு மனை விட்டு தன்னறிவாலே மோசம் போக வைக்கும். பாலரிஷ்ட தோஷங்களையோ மருத்துவ செலவுகளை கொடுத்து உயிரை காப்பாற்றி கொள்ள நேரும். இந்த நட்சத்திரகாரர்களுக்கு அவசர புத்தி இருக்கும். செய்யும் காரியங்களை யோசித்து செய்ய மாட்டார்கள். முன்கோபம் கொண்டு சஞ்சல புத்தி கொண்டவர்கள்.

     வீ ரம், தீரம், விவேகம் கொண்ட நட்சத்திரம் என்பதால் 25-வயதுக்கு மேல் கங்கண யோகம் ஏற்பட்டு பூமி, வீடு, செல்வாக்கு செல்வத்தை பெற்று மேன்மையான வாழ்க்கை வாழ்வார்கள். ராகு திசை, போலீஸ், ராணு வம். எலக்ட்ரிக்கல் மெக்கானிக். இன்ஜினியரிங் தொழில்களில், படிப்பும் அன்னிய தேச சம்பாத்தியம் போன்றவற்றை தருவார். படித்தது ஒன்று செய்கிற தொழில் வேறவாக இருக்கும். செவ்வாய் பலம் பெற்று கேந்திரத்தில் இருந்தாலும் குரு சந்திரன் சுக்கிரன் பார்வை பட்டாலும் சேர்ந்தாலும் முதல் தர யோகத்தை கொடுத்து சாதனைகளை செய்ய வைக்கும். ராகு   ,கேது, பாதகாதிபதி தொடர்பு பெற்றால் கடைசி காலம் வரை வறுமையை கொடுக்கும். தரித்திர வாழ்க்கை வாழ வைக்கும்.


கடகம், சிம்மம் லக்னங்களில் பிறந்தால் செவ்வாயால் ஊர், உலகம் போற்றும் தரமான வாழ்க்கை அமையும்.
அவிட்ட நட்சத்திர கோவில். கும்பகோணம் அருகில் கொருக்கை என்னும் ஊரிலிருக்கும் ஞானபுரீஸ்வரர் ஆலயம் சென்று வழிபட்டால் வாழ்க்கையில் மேன்மை கிட்டும்.