Wednesday, 24 June 2015

கண்ணீர்த் துளிகள்:
ஏன் இந்த பிறப்பு..
ஏன் இந்த இழப்பு..


என் இனிய நண்பர்களே இந்த சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தால் நான் பிறவி எடுத்ததே பயனற்றதாகி விடும்.
கடந்த 6.5.2015 - அன்று 70 வயது உள்ள பெண்மணி என்னிடம் ஜாதகம் பார்க்க வந்தார்கள். அவர்கள் ஓரு பெண்ணின் ஜாதகத்தை கொடுத்து பலனை கேட்டார்கள்.
ஜாதகம் இது தான்,
ரிஷப லக்னம், கன்னி ராசி.
4 - ல் ராகு
5 - ல் சந்திரன்
7 - ல் சுக்கிரன், சூரியன், புதன்
8 - ல் செவ்வாய்
9 - ல் குரு
10 - ல் கேது
11 - ல் சனி
வயது 17, செவ்வாய் திசை 19 - வயது வரை.
குருவின் பார்வை லக்னம் ராசியிலிருந்து, லக்னாதிபதி லக்னத்தைப் பார்த்தாலும், ஆயுள்காரகன் சனி லக்னத்தை 8 - ம் வீட்டை பார்த்தாலும், அவர்களுக்கு ஆயுள் பலம் உண்டு.
ஜாதகம் பார்த்து சில விஷயங்ளை சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுது தந்தைக்கு கர்மம் செய்யக் கூடிய நேரம் என்று நான் சொன்ன பொழுது அந்த பெண்மணி கண்ணீர் விட்டுக் கதறி விட்டார். காரணம் கேட்ட பொழுது இறந்தது நான் மேலே சொன்ன பெண் தான் கொள்ளி வைத்துக் கர்மம் செய்தது அப்பா தான்.
காரணம் என்ன :
நெய்வேலியை சேர்ந்த அந்த பெண் நாகப்பட்டினத்தில் ஒரு தனியார் பாலிடெக்னிக்கில் ஹாஸ்டலில் தங்கி படித்து கொண்டு இருந்து வந்திருக்கிறார். அங்கு உள்ள வார்டன்கள் அங்கு உள்ள பெண்களை, ஆண்களை வைத்து தவறான முறைகளில் பணம் சம்பாரித்து வந்து உள்ளனர். இது அந்த பெண்ணுக்கு தெரிந்து இருக்க வேண்டும். இல்லை இந்த பெண்ணை அதற்கு வற்புறுத்தி இருக்க வேண்டும். அதனால் அந்த பெண்ணை கொலை செய்திருக்க வேண்டும்.
இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் அவங்க பாட்டியை பார்த்து விட்டு வந்துள்ளார். அந்த பெண் நல்ல படியாக தான் இருந்துள்ளார். பெண்ணின் நடவடிக்கைளில் ஏதேனும் தவறு இருந்தால் கல்லூரி நிர்வாகத்தினர் பெற்றோரை அழைத்து ஏதாவது எச்சரிக்கை செய்து இருக்க வேண்டும். அதுவும் இல்லை
ஜாதகப்படி பெண்ணின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது தான் கேள்வி ஜாதகக் கட்டத்தில் சனியும், செவ்வாயும், சுட்சமப் பார்வை பெற்றால் அதாவது 4 - ம் பார்வையாக செவ்வாயும், 10 -ம் பார்வையாக சனியும், பார்த்துக் கொண்டால் அகால மரணம், வாகன கண்டம், கொலை செய்யப்படுவது, ஆகியவை நடக்கும்.
8 - ல் உள்ள செவ்வாய், அவர் திசையில் தான் இந்த மரணத்தை நிகழ்த்திதயுள்ளார்.
பெண்ணுரிமைக்குப் போராடும் இயக்கங்கள் நிறைய இருந்தாலும் அவர்களும் கண்டு கொள்ளுவது இல்லை.
இந்த சம்பவம் நடந்து 65 நாட்கள் ஆகிறது. நிர்வாகத்தை அணுகி ஏதேனும் கேட்டால் மிரட்டல் விடுவதும். மௌனம் சாதிப்பது. போஸ்மார்ட்டம் ரிப்போரட்டை தர மறுப்பதும் ஏன் என்று தெரியவில்லை.
ஏழையாக பிறந்தது தான் அந்த பெண் செய்த பாவம். பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு தரமானக் கல்வி நிலையங்களை தேர்ந்து எடுங்கள். பாதுகாப்பான தங்கும் வசதி உள்ளாதா? என்று நன்றாக தெரிந்து கொண்டு சேர்த்து விடுங்கள்.
நண்பர்ளே இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் சேர் செய்து கொள்ளுங்கள்.
இனி யாருக்கும் இந்த அவலம் வேண்டாம்.
அந்த பெண்ணின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வோம்.

No comments:

Post a Comment