Wednesday, 24 June 2015

ஆவுடையார் கோயில் சிறப்புகள்:
 

இன்றைய மாலைமலா் செய்தித்தாளில் வந்திருந்த புதுக்கோட்டை அருகில் உள்ள ஆவுடையார் கோவில் பற்றிய பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
1. ஆவுடையார் கோவில் என்பது புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி அருகில் உள்ளது. சிற்பக்கலைக்கும், இது கட்டிடக்கலைக்கும் புகழ்பெற்ற பெயர் பெற்ற சிவஸ்தலமாகும்.
2. இந்த ஊரில் உள்ள, ஆத்மநாத சுவாமி கோவிலில் மூலவர் சிவலிங்கத்தின் ஆவுடையார் எனப்படும் பீடம் மட்டும் இடம் பெற்றிருப்பதால், இந்த கோவிலும், கோவில் அமைந்துள்ள ஊரும், ஆவுடையார் கோவில் என்ற சிறப்பான பெயரால் அழைக்கப்படுகிறது.
3. இந்த ஊரின், பழம்பெயர் திருப்பெருந்துறை என்பது. சைவ, சமய குரவர் நால்வருள் நான்காமவரான மாணிக்கவாசக பெருமானின் வாழ்வில், பல அற்புதங்களை நிகழ்த்தியவர், இந்த 'திருப்பெருந்துறை உறை சிவபெருமான்' தான்.
4. அம்பாள் ஸ்ரீ யோகாம்பாளும் விக்கிரகத் திருமேனியாக இல்லை. அவளது திருவடிகளை மட்டுமே தரிசிக்க முடியும். தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறும்
5. முதல் கால பூஜையில் சுத்த அன்னம் (வெறும் சாதம்), 2-ம் கால பூஜையின் போது, சர்க்கரைப் பொங்கல், 3-ம் கால பூஜையில் தேன்குழல் பாயசம், அதிரசம், பிட்டு, தோசை, 4-ம் கால பூஜையில் சுத்த அன்னம், வடை, கீரை, 5-ம் கால பூஜையின் போது, சுத்தம் அன்னம் மட்டுமே, 6-ம் கால அர்த்தசாம பூஜையின் போது, புழுங்கல் அரிசி சாதம் வடிக்காமல், புளியோதரை, பாகற்காய் என நைவேத்தியம், சூடு பறக்கும் உணவின் ஆவி சுவாமிக்கு பிரசாதமாகும். இந்த பிரசாதங்களை சாப்பிட, பித்ருக்கள் எனப்படும் முன்னோரின் சாபங்கள் நீங்கப் பெறுவதுடன், அவர்களின் ஆசிர்வாதமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
6. ஆனித் திருமஞ்சனம் விழா 10 நாட்கள் நடக்கும் 50 ஆயிரத்துக்கும் மேல் பக்தர்கள் கூடுவர்.
7. மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட மிகச் சிறப்புவாய்ந்த சிவதலம் இது.இக்கோயிலின் மண்டபங்களில் முறுக்கு கம்பிகளால் வேயப்பட்டது போல கொடுங்கைகள் (தாழ்வாரம்) அமைக்கப்பட்டுள்ளது
8. புதிதாக ஒரு கோபுரமோ, மண்டபமோ அமைப்பது என்றால், தங்கள் திறமைக்கு சவாலாக இருக்கிற பணிகளை, செய்வதற்கு ஸ்தபதிகள் ஆயத்தமாகவே இருப்பர். ஆனால், கட்டட கலையின் உச்சக்கட்ட சாதனையாக அமைந்த படைப்புகள் என்று, சிலவற்றைக் குறிப்பிட்டு, அவற்றுக்கு இணையாக மட்டும், தங்களால் சாதனை படைக்க இயலாது என்று, எழுதிக் கொடுத்து விடுவர். ஆவுடையார் கோவிலின் 'கொடுங்கை!' இக்கோவிலில் சிறப்பு பெற்று இருப்பதால் ஆவுடையார் கோவில் கொடுங்கை நீங்கலாக, பிற பணிகளை செய்ய ஆயத்தமாக இருக்கிறோம்' என, புதிய பணிகளை துவங்குவதற்கு முன், இங்கு வேலைக்கு வரும் ஸ்தபதிகள் ஒப்பந்தம் போட்டுக் கொள்வர்.
9. பஞ்சாட்சர மண்டபத்தின் உத்தர கல்லில், சுற்றிலும், நான்கு திசைகளிலும், தொடர்ச்சியாக கட்டளை கலித்துறைப் பாக்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. அவற்றில், 'இந்த அற்புதமான மண்டப திருப்பணி, மனித முயற்சியால் கைகூடவில்லை. யோகநாயகி (ஆவுடையார் கோவில் இறைவி), கோபுரவேலவன் (பழைய கோபுரத்தில் இடம் பெற்றுள்ள முருகக் கடவுள்), விநாயகர், மாணிக்கவாசகர் ஆகியோரே செய்வித்தனர்' என, பொருள்படும் கவித்துவமான வரிகள் உள்ளன. தென்காசி காசிவிசுவநாதர் கோவிலை கட்டுவித்த, பராக்கிரம பாண்டியன், அந்த பணி தன் செயல் அல்ல என, ஒரு பாடலில் கூறுவதை இதனோடு ஒப்பிடலாம்.
10. பஞ்சாட்சர மண்டபத்தில் பொறிக்கப்பட்டு உள்ள, மற்றொரு பாடலில், விசைய (விஜய) ஆண்டு, துலா மாதத்தில், இந்த மண்டப திருப்பணியை துவங்கி, பிலவ ஆண்டு பங்குனி மாதத்தில், யோகநாயகி காரிகை இந்த பணியை முடித்தாள் என்று, கூறப்பட்டு உள்ளது. மேலும், 'சுவரோவியங்களை வரைந்து, பாக்கல் (பாவுகல்) எல்லாம் அமைத்தவன் விநாயகனே' என்று, மற்றொரு பாடலில் கூறப்பட்டு உள்ளது.
11. ஆத்மநாதர் கோயில் சிற்பக்கலைக்கு சான்றாக சிறப்புற கட்டப்பட்டுள்ளது. இங்கு இரண்டாம் பிரகாரத்தில் உள்ள தில்லை மண்டபத்தில் அர்ஜுனனுக்கு பாசுபதம் கொடுத்த சிவன், அம்பாள் சிற்பமும், புலையன், புலத்தி வேடத்தில் வந்த சிற்பமும் உள்ளது.
12. இந்த சிவதலத்தில் வழிபடுவோர்க்கு குருபலன் கூடும். மாணிக்கவாசகருக்கு ஈசனே குருவாய் வந்து உபதேசித்த தலம் என்பதால் இந்த தலத்தில் வழிபடுவோர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதோடு சிறந்த ஞானம் பெற்றவராகத் திகழ்வர்.
13. ரூபம் (வடிவம்), அரூபம் (வடிவம் இல்லாமை), அருவுருவம் (லிங்க வடிவம்) ஆகிய மூன்று வடிவங்களில் அருளும் சிவன் இத்தலத்தில் மூலஸ்தானத்தில் அரூபமாகவும், அருவுருவமாக குருந்தமர (ஸ்தல விருட்சம்) வடிவிலும், உருவமாக மாணிக்கவாசகராகவும் அருளுகிறார்.
14. இங்கு ஒரு விசேஷம் என்னவென்றால் குருந்தமரத்தையும் சிவனாகக் கருதுவதால், கார்த்திகை சோமவாரத்தில் இந்த மரத்தின் முன்பாகவே, 108 சங்காபிஷேகம் நடக்கிறது
15. மூலஸ்தானத்தில் சதுர வடிவ ஆவுடையார் மட்டுமே இருக்கிறது. அதன்மீது ஒரு குவளை சாத்தப்பட்டுள்ளது. குவளை உடலாகவும், அதனுள் இருப்பது ஆத்மாவாகவும் கருதப்படுகிறது. இதன் காரணமாகவும், ஆத்மாக்களை காத்தருள்பவர் என்பதாலும் சுவாமிக்கு ஆத்மநாதர்' என்று பெயர் ஏற்பட்டது
16. ஆறு கால பூஜையின் போதும், இவருக்கு 108 மூலிகைகள் கலந்த தைல அபிஷேகம் நடப்பது விசேஷம்.
17. கோயில்களில் தீபாராதனை செய்யும் போது, பக்தர்கள் அதை கண்ணில் ஒற்றிக் கொள்வார்கள். ஆனால், ஆவுடையார் கோயில் மூலவருக்கு, தீபாராதனை செய்யும் தட்டை வெளியில் கொண்டு வருவதில்லை.
18. இங்கு சிவனே ஜோதி வடிவமாக இருக்கிறார். அவரை வணங்குவதே தீபத்தை வணங்கியதற்கு ஒப்பானது தான். எனவே, தீபாராதனையை கண்ணில் ஒற்றிக் கொள்ள வெளியில் கொண்டு வருவதில்லை.
19. ஆவுடையார்கோயில் மூலஸ்தானத்தில் சிவனுக்கு பின்புறத்தில் வெள்ளை, சிவப்பு, பச்சை ஆகிய நிறங்களில் மூன்று தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளன. வெள்ளை நிறம் சூரியன், சிவப்பு அக்னி, பச்சை நிறம் சந்திரனாக கருதப்படுகின்றன.
20. சுவாமிக்கு இங்கு சிலை இல்லை என்பதால், அவரது மூன்று கண்களை குறிக்கும் விதமாக இந்த தீபங்களை ஏற்றியுள்ளனர்.
21. பஞ்சாட்சர மண்டபத்தில் உள்ள சிவனை குதிரைச்சாமி என்று அழைக்கிறார்கள்.
22. மாணிக்கவாசகருக்காக, சிவன், குதிரைகளுடன் மதுரைக்கு சென்று அரிமர்த்தன பாண்டிய மன்னனிடம் ஒப்படைத்தார். குதிரை மீது சென்ற சிவன், இக்கோயிலில் பஞ்சாட்சர மண்டபத்தில் இருக்கிறார். இவரை, குதிரைச்சாமி' என்று அழைக்கிறார்கள்.
23. குதிரைக்குகீழே நரிகளும் உள்ளன. இவருக்கு அசுவநாதர்' என்றும் பெயர் உண்டு.
24. ஆத்மநாதர் கோயிலில் உள்ள ஒவ்வொரு வாசலிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தீபங்கள் ஏற்றப்படுகிறது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவத்தை குறிக்கின்றன. சிவனை சுற்றி திருவாசியில் உள்ள 27 தீபங்கள் நட்சத்திரங்களையும், அருகிலுள்ள 2 தீபங்கள் ஜீவாத்மா, பரமாத்மாவையும் குறிக்கின்றன
25. சன்னதியிலிருந்து வெளியே வரும் அடுத்தடுத்த வாசல் நிலைகளில் பஞ்சகலைகளை குறிக்க 5 தீபம், 36 தத்துவங்கள், 51 அட்சரங்கள், 11 மந்திரங்கள், 224 உலகங்கள் இவற்றை குறிக்கும் விதமாக அந்தந்த எண்ணிக்கையில் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.
26. இத்தலத்தில் குருவாக இருந்து மாணவர்களுக்கு உபதேசம் செய்தபோது, சீடர்கள் அவருக்கு படைத்த உணவை ஏற்றுக்கொண்டார். அவரிடம் பயின்றவர்கள் வீட்டிலிருந்து புழுங்கல் அரிசி சாதம், கீரை, பாகற்காய் என எளிய பொருட்களை அவருக்கு கொடுத்தனர். அதனை சிவனும் விரும்பி வாங்கி சாப்பிட்டார். இதன் அடிப்படையில், ஆத்மநாதருக்கு புழுங்கல் அரிசி சாதம்தான் நைவேத்யம் செய்யப்படுகிறது.
27. அடுப்பில் இருந்து இறக்கப்பட்ட சாதத்தை அப்படியே சுவாமி சன்னதிக்கு கொண்டு சென்று, படைக்கல்லில் ஆவி பறக்க கொட்டி விடுகின்றனர். அப்போது சன்னதி கதவுகள் சாத்தப்பட்டு, சிறிதுநேரம் கழித்து திறக்கப்படும். சுவாமி அரூப வடிவானவர் என்பதால், அரூபமாகி விடும் ஆவியுடன் நைவேத்யம் படைக்கப்படுகிறது.
28. தட்சனின் யாகத்திற்கு சிவனை மீறிச் சென்றதற்கு மன்னிப்பு பெறுவதற்காக, அம்பாள் இத் தலத்தில் அரூப வடிவில் தவம் செய்தாள். எனவே, இங்கு அம்பாளுக்கும் விக்ரகம் இல்லை. அவள் தவம் செய்த போது, பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை நடக்கிறது.
29. இந்த பாதத்தை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக, கண்ணாடியில் பாதம் பிரதிபலிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவளது சன்னதி எப்போதும் அடைத்தே இருக்கும் என்பதால், சன்னதி முன்புள்ள ஜன்னல் துவாரம் வழியாகத்தான் பாதத்தை தரிசிக்க முடியும்.
30. சூரிய, சந்திர கிரகணங்களின்போது கோயில்களின் பூஜை செய்யமாட்டர். ஆனால், ஆவுடையார் கோயிலில் கிரகணநாளிலும் ஆறு கால பூஜை நடக்கிறது. ஆதியந்தம் அல்லாத அருவ வடிவ சிவனுக்கு சிவபூஜை எந்த காரணத்தாலும், தடைபடக்கூடாது என்பதற்காக பூஜை நடக்கிறது.
31. குரு இருக்குமிடத்தில் சிஷ்யர்கள், மரியாதை கொடுப்பதற்காக அவர்முன்பு அமராமல் நின்று கொண்டிருப்பார்கள். இக்கோயிலில் ஆத்மநாதருக்கு மரியாதை செய்யும் விதத்தில், மாணிக்கவாசகர், சொக்க விநாயகர், முருகன், வீரபத்திரர் ஆகியோர் நின்ற கோலத்திலேயே இருக்கின்றனர்.
32. ஆவுடையார் கோயிலில் நவக்கிரக சன்னதி இல்லை. ஆனால், நவக்கிரக தூண்கள் வைக்கப் பட்டுள்ளன. முதல் தூணில் ராகு, கேது, 2வது தூணில் சனி, வியாழன், சுக்கிரன், செவ்வாய், மூன்றாவது தூணில் உஷா, பிரத்யூஷா, சூரியன், புதன், நான்காம் தூணில் சந்திரனும் இருக்கின்றனர். அருகிலுள்ள 2 தூண்களில் காளத்தீஸ்வரர், கங்காதேவி உள்ளனர்.
33. முக்தியை அடைவதற்கான பிரதான மூன்று நிலைகளான சச்சிதானந்த நிலை அமைப்பில் இக்கோயில் உள்ளது. சத்' அம்சமாக கோயில் மகா மண்டபமும், சித்' அம்சமாக அர்த்தமண்டபமும், ஆனந்த' மயமாக கருவறையும் இருப்பது விசேஷம். 

 
 

திதி சூன்ய தோஷம்:
 



நீங்கள் எந்த திதியில் பிறந்து இருந்தாலும் உங்கள் ஜென்ம லக்னம் சூன்ய தோசம் அடையக் கூடாது. அவ்வாறு இருந்தால் தலைவலி, மன உளைச்சல், எதிர் மறை எண்ணங்கள், டென்ஷன், வாழ்கையில் விரக்தி, வேதனை, போன்ற பிரச்சனைகள் எற்படும்.
திதிகள், லக்னம் :
1. பிரதமை, துலாம், மகரம்.
2. துதியை, தனுசு, மீனம்.
3. திருதியை, மகரம், சிம்மம்.
4. சதுர்த்தி, கும்பம், ரிஷபம்.
5. பஞ்சமி, மிதுனம், கன்னி.
6. சஷ்டி, மேஷம், சிம்மம்.
7. சப்தமி, தனுசு, கடகம்.
8. அஷ்டமி, மிதுனம், கன்னி.
9. நவமி, சிம்மம், விருச்சிகம்.
10. தசமி, சிம்மம், விருச்சிகம்.
11. ஏகாதசி, தனுசு, மினம்.
12. துவாதசி, துலாம், மகரம்.
13. திரயோதசி, ரிஷபம், சிம்மம்.
14. சதுர்த்தசி, மிதுனம், கன்னி, தனுசு, மீனம்.
அமாவாசை, பௌர்ணமி, ஆகிய திதிகளுக்கு சூன்ய லக்னம் கிடையாது.
மேற்கண்ட திதிகளில் பிறந்து அதற்குரிய லக்னங்களில் பிறந்து இருந்தால்
நீங்கள் பிறந்த திதியில் கும்பகோணம் அருகில் உள்ள சூரியனர்கோவில் சென்று வழிபாடு செய்தால் சூனிய தோஷம் விலகி விடும்.
குறிப்பு:
ஓருவர் மேஷ லக்னத்தில் பிறந்து பரணி நட்சத்திர சாரத்தில் லக்னம் இருந்தால் அவர்கள் சூரியன், செவ்வாய், சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்வது நன்று.
ஓம் ஆதித்யா நமக!

சாதகமாகும் ஜாதகம் :

ஒரு உயிர் ஜனனமாகும் பொழுது மூன்று லக்னம் முக்கியமானது.
1. விதி லக்னம், லக்னம்.
2. மதி லக்னம், சந்திரன்.
3. கதி லக்னம், சூரியன்.
ஆகியவை முக்கியமானது. அடுத்தது,
9 - ம் பாவம் பாக்கிய ஸ்தானம் போன ஜென்மம் ..
9 - ம் அதிபதி 9 - ம் வீட்டில் இருந்து 6,8,12 - ல் மறையக் கூடாது.
5 - ம் பாவம் பூர்வ புண்ணிய ஸ்தானம் அடுத்த தலைமுறை.
5 - ம் அதிபதி, 5 - ம் வீட்டிற்கு 6, 8, 12, மறையக் கூடாது.
1 - ம் பாவம் லக்னம், இந்த பிறப்பில் நாம் வாழும் நிலையை சொல்லுவது லக்னாதிபதி, லக்னத்தில் இருந்து 6, 8, 12 மறையக் கூடாது.
லக்னாதிபதி 5 - ம், அதிபதி 9 - ம் அதிபதி, பாதகாதிபதி சாரம் பெறக் கூடாது. பாதகாதிபதி வீட்டில் இருக்க கூடாது.
இவ்வாறு உங்கள் ஜாதகம் அமையுமானால் சாதகமான பலன்களை நீங்கள் அடைய முடியாது.
கோச்சாரம், திசை, புத்தி பலன்கள் நன்மை செய்யாது.
இதற்கு சிறந்த பரிகாரம் இது தான்.
30 கிராம் வெள்ளி வேல் செய்து கொண்டு ஓரு வியாழக்கிழமை திருச்செந்தூர் சென்று வேலுடன் கடலில் ஸ்நானம் செய்து நாழிக் கிணற்றில் குளித்து விட்டு நேராக முருக பெருமானை தரிசனம் செய்து வேலை அவர் பாதத்தில் வைத்து வாங்கிக் கொண்டு வந்து செவ்வாய்க் கிழமை தோறும் விபூதி அபிஷேகம் செய்து வந்தால் ஜாதகத்தில் ஏற்படும் சகல தோஷங்களும் விலகி மேன்மையான பலன்களை நீங்கள் அடைய முடியும்.
வறுமைகள் நிங்கும் :
பொருளாதார முன்னேற்றம் வரும்,
நோய் நொடி தொந்தரவு நீங்கும்,
ஜோதிடர்கள் தினமும் அபிஷேகம் செய்து வந்தால் வாக்கு பலிதம் மேன்மை அடைந்து ஜோதிட ஞானம் சித்திக்கும்.
வாழ்க வளமுடன்.

கண்ணீர்த் துளிகள்:
ஏன் இந்த பிறப்பு..
ஏன் இந்த இழப்பு..


என் இனிய நண்பர்களே இந்த சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தால் நான் பிறவி எடுத்ததே பயனற்றதாகி விடும்.
கடந்த 6.5.2015 - அன்று 70 வயது உள்ள பெண்மணி என்னிடம் ஜாதகம் பார்க்க வந்தார்கள். அவர்கள் ஓரு பெண்ணின் ஜாதகத்தை கொடுத்து பலனை கேட்டார்கள்.
ஜாதகம் இது தான்,
ரிஷப லக்னம், கன்னி ராசி.
4 - ல் ராகு
5 - ல் சந்திரன்
7 - ல் சுக்கிரன், சூரியன், புதன்
8 - ல் செவ்வாய்
9 - ல் குரு
10 - ல் கேது
11 - ல் சனி
வயது 17, செவ்வாய் திசை 19 - வயது வரை.
குருவின் பார்வை லக்னம் ராசியிலிருந்து, லக்னாதிபதி லக்னத்தைப் பார்த்தாலும், ஆயுள்காரகன் சனி லக்னத்தை 8 - ம் வீட்டை பார்த்தாலும், அவர்களுக்கு ஆயுள் பலம் உண்டு.
ஜாதகம் பார்த்து சில விஷயங்ளை சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுது தந்தைக்கு கர்மம் செய்யக் கூடிய நேரம் என்று நான் சொன்ன பொழுது அந்த பெண்மணி கண்ணீர் விட்டுக் கதறி விட்டார். காரணம் கேட்ட பொழுது இறந்தது நான் மேலே சொன்ன பெண் தான் கொள்ளி வைத்துக் கர்மம் செய்தது அப்பா தான்.
காரணம் என்ன :
நெய்வேலியை சேர்ந்த அந்த பெண் நாகப்பட்டினத்தில் ஒரு தனியார் பாலிடெக்னிக்கில் ஹாஸ்டலில் தங்கி படித்து கொண்டு இருந்து வந்திருக்கிறார். அங்கு உள்ள வார்டன்கள் அங்கு உள்ள பெண்களை, ஆண்களை வைத்து தவறான முறைகளில் பணம் சம்பாரித்து வந்து உள்ளனர். இது அந்த பெண்ணுக்கு தெரிந்து இருக்க வேண்டும். இல்லை இந்த பெண்ணை அதற்கு வற்புறுத்தி இருக்க வேண்டும். அதனால் அந்த பெண்ணை கொலை செய்திருக்க வேண்டும்.
இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் அவங்க பாட்டியை பார்த்து விட்டு வந்துள்ளார். அந்த பெண் நல்ல படியாக தான் இருந்துள்ளார். பெண்ணின் நடவடிக்கைளில் ஏதேனும் தவறு இருந்தால் கல்லூரி நிர்வாகத்தினர் பெற்றோரை அழைத்து ஏதாவது எச்சரிக்கை செய்து இருக்க வேண்டும். அதுவும் இல்லை
ஜாதகப்படி பெண்ணின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது தான் கேள்வி ஜாதகக் கட்டத்தில் சனியும், செவ்வாயும், சுட்சமப் பார்வை பெற்றால் அதாவது 4 - ம் பார்வையாக செவ்வாயும், 10 -ம் பார்வையாக சனியும், பார்த்துக் கொண்டால் அகால மரணம், வாகன கண்டம், கொலை செய்யப்படுவது, ஆகியவை நடக்கும்.
8 - ல் உள்ள செவ்வாய், அவர் திசையில் தான் இந்த மரணத்தை நிகழ்த்திதயுள்ளார்.
பெண்ணுரிமைக்குப் போராடும் இயக்கங்கள் நிறைய இருந்தாலும் அவர்களும் கண்டு கொள்ளுவது இல்லை.
இந்த சம்பவம் நடந்து 65 நாட்கள் ஆகிறது. நிர்வாகத்தை அணுகி ஏதேனும் கேட்டால் மிரட்டல் விடுவதும். மௌனம் சாதிப்பது. போஸ்மார்ட்டம் ரிப்போரட்டை தர மறுப்பதும் ஏன் என்று தெரியவில்லை.
ஏழையாக பிறந்தது தான் அந்த பெண் செய்த பாவம். பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு தரமானக் கல்வி நிலையங்களை தேர்ந்து எடுங்கள். பாதுகாப்பான தங்கும் வசதி உள்ளாதா? என்று நன்றாக தெரிந்து கொண்டு சேர்த்து விடுங்கள்.
நண்பர்ளே இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் சேர் செய்து கொள்ளுங்கள்.
இனி யாருக்கும் இந்த அவலம் வேண்டாம்.
அந்த பெண்ணின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வோம்.

ஜோதிடத்தில் புதியதோர் உலகம் :

ஜோதிட கணித முறைகளில் நிறைய கணித ஆய்வுகள் உள்ளது. இதில் இலங்கை கணித முறை ஓன்றை நாம் இப்பொழுது அறிவோம்.
ஜாதக கட்டங்களை லக்னத்தில் இருந்து மண்டலங்களாக பிரித்து கொள்வோம்.
தேவ மண்டலம் 1,4,5,6,7.
நர மண்டலம் 3,8.
அரக்க மண்டலம் 2,9,10,11,12 ஆகியவை
தேவ மண்டலத்தில் உள்ள கிரகங்கள், திசை, புத்தி, அந்தரம், ஆகியவை நன்மையான பலன்களை செய்யும்.
நர மண்டலத்தில் கிரகங்கள் நன்மையும், தீமையும், கலந்து செய்யும்.
அரக்கமண்டலத்தில் உள்ள கிரகங்கள் தீமையான பலன்களை செய்யும்.
இது கோசாரத்திற்கும் பொருந்தும்.
கேரள ஜோதிட முறைப்படி ஒரு ஜாதகத்தில் கிழ்க்கண்ட 16 வகையான தோஷங்கள் உண்டு:









1. தெய்வ கோபம்.
2. தெய்வ சாபம்.
3. குலதெய்வ தோஷம்.
4. சர்ப்ப தோஷம்..
5. பித்ருக்கள் தோஷம்.
6. குரு தோஷம்.
7. வாக்கு தோஷம்.
8. பிராமண தோஷம்.
9. செய்வினை தோஷம்.
10. சத்ரு தோஷம்.
11. விஷ போஷண தோஷம்.
12. இட தோஷம்.
13. திருஷ்டி தோஷம்.
14. பிரேத தோஷம்.
15. மாத்ரு தோஷம்.
16. பெண் குடும்ப தோஷம்.
இத்தனை வகையான தோசங்களை பிரசன்னம் பார்க்கும் நேரத்தை வைத்துதான் கண்டு பிடிக்க முடியும்
அதர்மத்தை அழிக்கபோகும் குருப்பெயர்ச்சி:
     நவக்கிரகங்களில் தேவகுரு, பிரஹஸ்பதி, மன்னவன், பொன்னவன், என வர்ணிக்கப்படும் குரு பகவான் இந்த ஆண்டு 05.07.2015 அன்று நள்ளிரவு கடகராசியிலிருந்து, சிம்மராசிக்கு வருகிறார். நாம் அனைவரும் எந்த ஒரு சுப காரியத்திற்கும், எல்லாவித நன்மைகளுக்கும் எப்போது குருப்பெயர்ச்சி வரும் என்பதை ஆவலுடன் எதிர்பார்ப்போம்.
தெய்வீக அறிவுக்கும், வேதாந்த ஞானத்திற்கும், ஒளி படைத்த மேதைகளையும், தலைவணங்காத, தலைமை பதவியைத் தந்து பெரும் சாதனையை செய்ய வைத்து, மானிடனை, மாணிக்கமாக மாற்றக் கூடிய வல்லமை வாய்ந்தவா். பகலில் பிறந்தவர்களுக்கெல்லாம், தான் அமர்ந்து பார்க்கும் ஸ்தானங்களையெல்லாம் பலமாக்கும் தனித்தன்மை குரு பகவானுக்கு மட்டுமே உண்டு.
ஜாதகத்தில் மற்ற கிரகங்கள் வலுவிழந்து காணப்பட்டாலும், குரு பகவான் ஒருவர் மட்டும் வலிமையடைந்தால் போதும். புகழைத்தேடி போனால், பொருளைத் தானாகவே வந்து கொடுக்கும் வல்லமை குரு பகவானுக்கு மட்டுமே உண்டு.
பொதுவாக ஜாதக கட்டங்களில் குருபகவான் உச்சநிலை, நீச்சநிலை, ஆட்சி நிலையை விட ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம், ஆகிய ராசிகளில் குரு இருந்தால் அந்த ஜாதகருக்கு ஒரு வளமையான வாழ்வைக் கொடுக்கும்.
ஸ்திர ராசிகளில் குரு சஞ்சாரம் செய்யும் போதெல்லாம், பல திருப்பங்களை ஏற்படுத்தும். அதா்மங்களை செய்பவர்களுக்கெல்லாம் தக்க தண்டனையையும் கொடுப்பார்.
பங்கு வர்த்தகம், பொருளாதாரம், விவசாயம், ஆன்மிக பணிகள் வளர்ச்சி பெறும், மற்றும் டீசல், கடல்சார்ந்த தொழில்கள், தங்கம், வெள்ளி, விலை உயர்வு பெறும்.
அரசியலில் பல திருப்பங்கள் ஏற்படும். புது முகங்கள் பிரகாசிப்பார்கள். ஆட்சி பொறுப்பில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படும். இதுவரை மக்களையும், சட்டத்தையும், ஏமாற்றியவர்களுக்கு, தக்க தண்டனையும் கொடுப்பார். நீதிபதிகள், சட்ட நிபுணர்கள், தங்களுடைய கடமைகளை, சரியான முறையில் நிறைவேற்றி, சரியான நேரத்தில், தக்க தண்டனையை கொடுப்பார்கள்.
இதுவரை நல்ல மனிதர்கள் போல் நாடகமாடியவா்களின், வேஷங்கள் களையும், விதிவசத்தால், வனவாசம் சென்றவர்கள் எல்லாம் நல்லவா்களாக வலம் வருவாா்கள்.
சென்ற குருப்பெயர்ச்சியில் பெரிய மாற்றத்தை எதிர்பார்த்த மிதுனம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம், ஆகிய ராசிக்காரர்களுக்கெல்லாம் இப்போது சாதகமான பலனை எதிர்பார்க்கலாம்.
மேஷம், கடகம், துலாம், தனுசு, கும்பம், ஆகிய லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி யோகத்தை செய்யும்.
உங்கள் சுய ஜாதகத்தில் குரு இருக்குமிடத்திலிருந்து அல்லது லக்னத்திலிருந்து 2,5,7,9,11 - ல் வரும்போது பெரிய மாற்றங்களையும், வேலைவாய்ப்பு, உத்தியோகத்தில் முன்னேற்றங்களையும், திருமணம், குழந்தைச் செல்வங்கள் எல்லாம் கொடுப்பார்.
மன்மத வருட குருப்பெயர்ச்சியானது வீடும், நாடும் நன்றாக இருக்க நரசிம்ம அவதாரத்தில் குருபகவான் வலம் வருவார் என்பது உறுதி. இந்த குருப்பெயர்ச்சியில் சிறப்பான முன்னேற்றங்களையடைய ஒரு வியாழக்கிழமையில் திருச்செந்தூர் சென்று கடலில் ஸ்நானம் செய்துவிட்டு முருகப்பெருமானையும், குருபகவானையும், தரிசித்து விட்டு வந்தால் சகல காரியமும் சித்தி பெறும்.
கோவில் யானைகளுக்கு அவரவர் வயதுக்கு தக்கவாறு வாழைப்பழம் வாங்கிக் கொடுத்து யானையிடம் ஆசிர்வாதம் வாங்குவது நன்மை செய்யும். 


எம பயம் நீங்க:

ஒவ்வொரு மாதமும் வரும் மகம் நட்சத்திரம் அன்று எருமை மாடுகளுக்கு உணவு வைப்பது மிகவும் நல்லது.மேலும் அகத்தி கிரையை மகம் நட்சத்திரம் அன்று எமதர்மனின் வாகனமான எருமைக்கு கொடுத்து மூன்றுமுறை சுற்றி வந்து வணங்கினால் மரண பயம் நீங்கும். மோட்ச கதி கிட்டும்.

ஓரு சிகப்பத் துணியில் உங்கள் வயது எண்ணிக்கைக்கு தக்கவாறு மிளகு வைத்து முடிந்து, அதை அகல் விளக்கில் வைத்து நெய் விட்டு சனிக்கிழமை ராகு காலத்தில் அமிர்த கடிகை நேரமான 9:20 - க்கு மேல் 9:30 - க
்குள் காலபைரவருக்கு 19 - வாரம் தீபம் ஏற்றினால் திராத நோயும் விலகும். ஏழரை சனி, அஷ்டமத்துச்சனியின் பாதிப்புகள்
அகலும்.

ஒம் நாமோ நாராயணா!
சிந்தனைத் துளிகள்:
வணங்கத் தக்கவர்கள்..
தாயும், தந்தையும்..
வந்தால் போகாதது..
புகழும், பழியும்..
போனால் வராதது..
மானமும், உயிரும் ..
தானாக வருவது...
இளமை, முதுமை..
நம்முடன் வருவது..
பாவம், புண்ணியம்..
அடக்க முடியாதது..
ஆசை, துக்கம்..
தவிர்க்க முடியாதது..
பசி, தாகம்..
நம்மால் பிரிக்க முடியாதது..
பந்தம், பாசம்..
அழிவைத் தருவது..
பொறாமை, கோபம்..
எல்லோருக்கும் சமமானது..
பிறப்பு, இறப்பு..
கடைத்தேற வழி..
உண்மையும், உழைப்பும்..
ஒருவன் கெடுவது...
பொய்சாட்சி, செய்நன்றி மறப்பது..
வருவதும் போவதும்..
இன்பம், துன்பம்..
மிக மிக நல்ல நாள்...
இன்று...
மிக பெரிய வெகுமதி...
மன்னிப்பு ...
மிகவும் வேண்டாதது...
வெறுப்பு...
மிகப் பெரிய தேவை..
சமயோஜித புத்தி..
மிக கொடிய நோய்..
பேராசை..
மிகவும் சுலபமானது..
குற்றம் காணல்..
கிழ்த்தரமான விஷயம்..
பொறாமை..
நம்பக்கூடாதது..
வதந்தி..
ஆபத்தை விளைவிப்பது..
அதிக பேச்சு..
செய்யக் கூடாதது..
தவறுகள்..
செய்ய வேண்டியது
உதவி..
விலக்க வேண்டியது..
விவாதம்..
உயர்வுக்கு வழி..
உழைப்பு..
நழுவ விடக் கூடாதது..
வாய்ப்பு..
வாழ்க வளமுடன்..

கவனமாக செயல் பட வேண்டிய காலம்:

2.5.2015 முதல் 15.6.2015 வரை சனியும், செவ்வாயும், சம சப்தம பார்வை உள்ளதால்
மின்சாரம், போக்குவரத்துத் துறைகளில், வேலை செய்பவர்கள். வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக செல்ல வேண்டும்.
முருகன் வழிபாடு செய்வது நல்லது.
ஓம் சரவணபவ...
கற்பு நாள் என்றால் என்ன:


நீங்கள் பிறந்த கிழமை அல்லது பிறந்த திதி அல்லது பிறந்த நட்சத்திரம், வரும் நாள் கற்பு நாள் எனப்படும். அந்த நாளில் 

செய்ய கூடியவைகள் :
1. புதிய பூமி வாங்க.
2. புதிய வீடு குடி புகுதல்.
3. விருந்து உண்ணல்.
4. ஆடை ஆபரணம் வாங்குதல்.
5. கல்வி ஞானம் பெற.
6. தோட்டம் அமைத்தல்
போன்றவற்றை செய்தால் மிகவும் நல்லது.

செய்யக்கூடாதவைகள் :
1. எண்ணெய் ஸ்நானம்
2. திருமணம் செய்வது.
3. முடி வெட்டுதல்.
4. நோய்க்கு வைத்தியம்.
5. தூரதேசப் பிரயாணம்.
இவைகளை செய்தால் பாவதோசம் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

உங்கள் வாழ்கை நூறு பக்கம் கொண்ட புத்தகம் போல். அதில் கடைசிப் பக்கம் உங்கள் ஜாதகம். உங்கள் முயற்சி, உங்களுக்கு வெற்றியைத் தரும். புகழைத்தேடி போனால் பொருள் உங்களைத் தானே தேடி வரும்
ஏக ராசி தோஷமா?


   ஒரு குடும்பத்தில் ஒரே நட்சத்திரத்திலோ, ஒரே ராசியிலோ, ஓன்றுக்கு மேற்பட்டவர்கள் இருந்தால் வேத சாஸ்திரங்களில் கெடுதலாக சொல்லப்படவில்லை. அவ்வாறு இருந்தால் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள், குழப்பங்கள் இருந்து கொண்டே இருக்கும். அப்படியிருந்தால் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வெள்ளருக்கு நாரை வாங்கி திரி நூல் அளவுக்கு நறுக்கி, நல்லெண்ணெயில் ஊற வைத்துக் கொள்ளவேண்டும். ராசி என்பது சந்திரனுக்கு உண்டானது. திங்கள்கிழமை சந்திரனுக்கு உண்டானது. உங்கள் வீட்டில் திங்கள்கிழமை தோறும் மாலை 6 மணிக்கு மேல் நிலைவாசல் ஓரத்தில் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி வெள்ளருக்கு திரி இட்டு விளக்கேற்றி வந்தால் ஏக ராசி தோஷமும், ஏக நட்சத்திர தோஷமும் விலகி நிம்மதியான வாழ்வு கிட்டும்.
பரம்பரை நோய்களைத் தீர்க்கும் சிவபெருமான் :



 


     ஜாதக கட்டத்தில் ரோக ஸ்தானம் என சொல்லப்படும் 6 - ம் பாவத்திற்கு, 6 - ம் பாவமாக வரும், 11 - பாவத்தில் அமரும் கிரகங்கள் தம்முடைய 7 - ம் பார்வையாக, 5 - ம் வீடு என்ற புத்திர ஸ்தானத்தைப் பார்க்கும். 11 - ம் பாவத்தில் அமரும் கிரகங்களைப் பொறுத்து அதற்கு உண்டான பரம்பரை நோய்களை உருவாக்கும்.
நம்முடைய வாழ்வில் காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம், வயிற்று வலி, இவற்றை தவிர வேறு எந்த நோயானாலும் நாம் மருத்துவரிடம் செல்லும்போது அவர் நம்மை கேட்பது இதுபோல் உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் இவ்வாறு நோய் தாக்கம் உள்ளதா என கேட்பார்.
பரம்பரை நோய்களான சர்க்கரை வியாதி, ஆஸ்துமா, வெண்குஷ்டம், குஷ்டரோக வியாதிகள், மூளை வளர்ச்சி குன்றி பிறப்பு, உடல் அங்ககீனம், இருதய நோய்கள், ஆகியன பரம்பரை வியாதிகளாகும்.
உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்திலோ, உறவினர்களுக்கோ, இந்த நோய் தாக்கம் இருந்ததால் அது இனிவரும் தலைமுறைக்கு வராமல் காக்கவும், திருச்சி to முசிறி செல்லும் வழியில் குணசீலம் என்ற ஊரில் சிவபெருமான் அருள்பாலிக்கிறார். ஒரு செவ்வாய்கிழமை காலை 9 - மணிக்குள் சென்று அந்த ஊரில் இறங்கியவுடன் காவிரி ஆறு ஓடும். ஆற்றின் கரையில் மூன்று முட்டை, மூன்று வெற்றிலை வாங்கிக் கொள்ளவும். ஆற்றில் இறங்கி வலது கையில் வெற்றிலையை வைத்து அதன்மேல் முட்டையை வைத்து அந்த கையை உயரே தூக்கி சூரியனிடம் காண்பித்துவிட்டு, அந்த வெற்றிலையோடு, மூட்டையை ஆற்றில் விட்டுவிட்டு, அப்படியே மூழ்கிக் குளிக்கவும். அதேபோல் மூன்று முறையும் செய்துவிட்டு, வேறு ஆடைகளை அணிந்து கொண்டு எதிரில்லுள்ள சிவன் கோவிலுக்கு சென்று பெயர், ராசி, நட்சத்திரம், சொல்லி சிவனுக்கு அர்ச்சனை செய்யவும். கோவில் பிரஹாரத்தில் சக்தி வாய்ந்த முருகப்பெருமான் இருப்பார். அவருக்கு மூன்று நெய் தீபம் ஏற்றவும். பின்னர் கோவிலில் அமர்ந்துவிட்டு வந்தால் பரம்பரை நோய்களிடம் இருந்து நம்மையும், நம் பரம்பரையும் காத்துக் கொள்ளலாம்.
சிவ! சிவாய!
அம்மை நோய் வராமல் காப்போம் :

 

இந்த மன்மத வருடம் சித்திரை மாதம் 1 -ம் தேதி முதல் ராஜாவாக சனியும், மந்திரியாக செவ்வாயும் வருவதால் இந்த ஆண்டு நிலநடுக்கம், கட்டிட இடிபாடு, வாகன கண்டங்கள், நெருப்பு இவற்றால் சேதங்கள் இந்த ஆண்டில் அதிமாக நடக்கும்.
இந்த ஆண்டு அம்மை நோயின் தாக்கம் அதிகமாக வரக்கூடிய வாய்ப்பு உண்டு. அம்மை நோய் வந்திருந்தாலும், அல்லது வராமல் இருக்கவும் சமயபுரம் மாரியம்மன்னை வேண்டிக்கொண்டு ஒரு மஞ்சள் துணியில் 27 - வேப்பிலையை பறித்து வைத்து ஒரு காகிதத்தில் மஞ்சள் தூளையும், ம‌ற்றொரு காகிதத்தில் சிறிது குங்குமமும் மடித்து வைத்து மஞ்சள் இம்மூன்றையும் வைத்துக் கட்டி விடவும். அதை கையில் வைத்துக் கொண்டு சமயபுரம் மாரியம்மனை நினைத்துக் கொண்டு எங்கள் குடும்பத்தில் யாருக்கும் அம்மை நோய் வராமலும், வந்தாலும் விரைவில் குணமடைந்து விட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு பூஜை அறையில் வைக்கவும். இவ்வாறு செய்து 30 - நாள் முடிந்தவுடன் ஓடும் தண்ணீரிலோ, அல்லது கோவில் திருக்குளத்தில் அந்த முடிப்பை விட்டு விட்டால் உங்கள் குடும்பத்தில் யாருக்கும் அம்மை வராமலும், வந்தால் உடனே சரியாகவும் சமயபுரத்து அம்மன் நிச்சயமாக துணையிருப்பாள்.
ஓம் சக்தி. மகா சக்தி
நவக்கிரகங்கள் தரும் சுகங்கள் :











1. சூரியன் - உடல் நலத்தை தருபவர்.
2. சந்திரன் - பெருமையையும், புகழையும் தருபவர்.
3. செவ்வாய் - செல்வ வளத்தை தருபவர்.
4. புதன் - நல்ல புத்தியை நிலைக்க செய்பவர்.
5. குரு - நன்மதிப்பை தருபவர்.
6. சுக்கிரன் - நல்ல பேச்சாற்றலை தருபவர்.
7. சனி - எப்போதும் மகிழ்ச்சியைத் தருபவர்.
8. ராகு - உடல் வலிமை, எதிரியை வெல்லும் ஆற்றலை தருபவர்.
9. கேது - சந்ததி பெருகிட அருள்பவர்.
நவகிரஹங்களின் அனுக்கிரகம் பெற சனிக்கிழமை தோறும் கடிகை நேரத்தில், அதாவது காலை 10:20 முதல் 10:30 - க்குள் நவகிரஹ தரிசனம் பார்த்தால், நவகிரஹ தோஷங்கள் விலகிவிடும்.

பிரேத சாபமா?


     









 ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், ராகு, கேது, தோஷங்களை எல்லா ஜோதிடர்களும் எளிமையாக கண்டுபிடித்து விடலாம். ஜாதகத்தில் 9 - ம் பாவத்தில் சனி, ராகு, கேது ஏதேனும் இருந்தால் எல்லா ஜோதிடர்களும் பிதுர் தோஷம் என்று சொல்லுவார்கள். 

   ஒரு ஜாதகர் உங்களிடம் ஜாதகம் பார்க்க வரும்பொழுது அவர்கள் ஜாதகத்தில் 9 - பாவத்தில் சனி, ராகு, கேது இருந்தால் அவர்கள் பார்க்க வந்த நேரத்தை கணக்கில் வைத்துக் கொண்டு, கேரளாவில் பின்பற்றப்படும் பிரசன்ன சாஸ்திரப்படி எந்த லக்னம் உதயமாகிறதோ, அந்த லக்னத்திற்கு 9 - க்குடையவர் 9 - ம் பாவத்திற்கு 6,8,12 - ஆகிய பாவங்களில் மறைந்தாலும், 9 - ம் பாவத்திற்கு சனியும், ராகுவும், 3,7,10 - ம் பார்வைகள் 9 - ம் இடத்திற்கு இருந்தாலும, கேது 4,7,8 - ஆகிய பார்வைகள் 9 - ம் இடத்திற்கு இருந்தாலும் அது பிரேத சாபம் என்று அர்த்தம். ஏழு தலைமுறைகளில் உங்கள் குடும்பத்தில் யாராவது அல்லது தந்தை வழியில் சகோதரர்களோ, சகோதரிகளோ அகால மரணம் எனப்படும், தூக்கிட்டு கொள்வது, விஷம், நெருப்பு, ஆகியவற்றால் மரணத்தை ஏற்படுத்திக் கொள்வது போன்ற ஏதாவது ஒன்று நடந்திருந்தால் பிரேத சாபம் ஏற்படும். இதற்கு ஆண்டு தோறும் திதி, தர்பணம், செய்தாலும் அந்த ஆத்மா சாந்தி அடையாது.
இவ்வாறு உங்கள் வாழ்வில் நிகழ்ந்திருந்தால் நீங்கள் ஒரு அமாவாசை அன்று மதுரை அருகே உள்ள திருமூக்கூர் சக்கரத்தாழ்வார் கோவிலுக்கு சென்று காலை நேரத்தில் துளசி மாலை வாங்கி சக்கரத்தாழ்வார்க்கு சாற்றி கற்பூர ஆரத்தி பார்த்து சன்னதிக்கு நேற்று பின்பக்கம் சென்று பார்த்தால் ஒரு துவாரம் இருக்கும் அதன் வழியாக பார்த்தால் ஸ்ரீ சக்கரம் தெரியும் அதன் நடுவில்லுள்ள யோக நரசிம்மரை தரிசனம் செய்யவும். கோவிலுள்ள எல்லா கடவுள்களையும் தரிசனம் செய்துவிட்டு ஒரு மணி நேரம் கோவிலில் அமர்ந்துவிட்டு வந்தால் பிரேத சாபம் முழுமையாக விலகிவிடும்.
ஜாதகம் பார்க்க விரும்புகிறீர்களா?

ஆயக்கலைகள் 64 - ல் கரையை தொடமுடியாத கலைகள் இரண்டு. 
1. சங்கீதம் 3. சாஸ்திரம்.
1000 பேரை கொன்றவன் அரை வைத்தியன் என்ற பழமொழி நாம் எல்லோரும் அறிந்ததே. இந்த பழமொழியின் உண்மையான அர்த்தம் என்னவென்றால் 1000 வேர்களை வைத்திருப்பவன் அரை வைத்தியன் என்று பொரு‌ள். மாத, வார இதழ்களில் இராசி பலன்களை படித்துவிட்டு எந்த ஒரு ஜோதிடராலும், உங்களது பிரச்சனைக்கு தீர்வு சொல்ல முடியாது. எல்லா ஊரிலும் நல்ல திறமையான ஜோதிடர்கள் சுருதி, யுக்தி அனுபவம் பெற்று , நல்ல குருநாதர் உபதேசம் பெற்ற ஜோதிடர்கள் உள்ளனர்.
போலியான ஜோதிடர்களையும், மந்திரவாதிகளையும் உருவாக்குவது, ஜாதகத்தை சதா காலமும் கையிலே வைத்துக் கொண்டு அலைபவர்கள் தான் காரணம். உதாரணமாக நீங்கள் ஒரு டாக்டரிடம் சென்று அவரை பார்த்து அவரிடம் எனக்கு என்ன செய்கிறது என்று கண்டு பிடியுங்கள் என்றோ, இதுவரை எனக்கு என்னென்ன நோயெல்லாம் வந்தது என்று கண்டுபிடியுங்கள் என்று கேட்கும் பொழுது அவர் ஒரு நல்ல டாக்டராக இருந்தால் உங்களை நல்ல மனநல மருத்துவரை பாருங்கள் என்று தான் சொல்லுவார். அதைப்போலதான் ஜாதகத்தில் கடந்த காலத்தை அறிவதைவிட எதிர்காலம் நன்றாக அமைவதற்கு அந்த ஜோதிடர்கள் சொல்லும் அறிவுரைப்படி செயல்படுங்கள். பொதுவாக 1. சுய நினைவற்றவர்கள், 2. தன்னம்பிக்கை இழந்தவர்கள், 3. வாழ்க்கையை கசப்பாக நினைப்பவர்கள், 4. செவிடர்கள், சொல்வதை புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாதவர்களுக்கும், 5. இறை நம்பிக்கை இல்லாதவர்கள், இவர்களுக்கெல்லாம் ஜோதிடம் பொருந்தாது
செவ்வாய் தோஷமா?


 




         ஜாதக கட்டத்தில் லக்னம், ராசி, சுக்கிரன், இருக்கும் இடத்திலிருந்து 2,4,7,8,12 - ஆகிய இடத்தில் செவ்வாய் இருந்தால் சாஸ்திரத்தில் செவ்வாய் தோஷம் என சொல்லப்பட்டுள்ளது.

இதற்கு நிறைய விதிமுறைகள் உண்டு, விதிவிலக்கும் உண்டு.

1. கடக லக்னம், சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷமில்லை. 
2. மிதுனம், கன்னி, இரண்டாம் வீடாக வந்தால் செவ்வாய் தோஷமில்லை.
3. மேஷம், விருச்சிகத்தில் செவ்வாய் ஆட்சி பெற்றால் தோஷமில்லை.
4. செவ்வாய் உச்சமானாலும், நீச்சமானாலும், தோஷமில்லை.
5. குருவின் வீட்டில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.
6. சிம்மம், கும்பத்தில், செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.
7. செவ்வாயோடு, குரு, சந்திரன், சேர்க்கை பெற்றால் செவ்வாய் தோஷமில்லை.
8. செவ்வாய், புதனோடு சேர்ந்தாலும், புதன் செவ்வாயை பார்த்தாலும் தோஷமில்லை.
9. சூரியனோடு, செவ்வாய் சேர்ந்தாலும், சூரியன் பார்வைப் பட்டாலும் செவ்வாய் தோஷமில்லை.
உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளது என்று ஜோதிடர்கள் உறுதிப்படுத்தினால், ஆறு மாதத்திற்கு ஒருமுறை இரத்த தானம் செய்வது நல்லது
நட்சத்திரத்திரங்கள் தோஷமா?

       12 ராசிகளிலுள்ள 27 நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திரத்திரங்கள் தான் ஜாதகத்தில் ஆண்களுக்கு எந்த நட்சத்திர தோஷமும் கிடையாது. 
அதைப்போல பெண்களின் ஜாதகத்திற்கு ஆயில்யம், விசாகம், கேட்டை, மூலம், ஆகிய நான்கு நட்சத்திரங்களும் தோஷமானவை.
ஆயில்யம் 1 - பாதம் மாமியாருக்கு ஆகாது. 2,3,4 - பாதங்கள் தோஷமில்லை. ஜாதக கட்டத்தில் புதனை, குரு, சுக்கிரன், லக்னாதிபதி, ராசி அதிபதி பார்வையிட்டால் தோஷம் நிவர்த்தியாகிவிடும்.
விசாகம் 4 - ம் பாதம் மட்டும் மைத்துனருக்கு ஆகாது. 1,2,3 - பாதங்கள் தோஷமில்லை. ஜாதக கட்டத்தில் குரு, 1,5,9 உள்ள ல் இருந்தால் தோஷ நிவர்த்தியாகிவிடும்.
கேட்டை 1 - ம் பாதம் மட்டும் மூத்த மைத்துனருக்கு ஆகாது. 2,3,4 -ம் பாதங்கள் தோஷமில்லை. ஜாதக கட்டத்தில் புதன் 1,4,7,10 - ல் இரு‌ந்தாலு‌ம், புதனுக்கு குரு பார்வைப் பட்டாலும் தோஷ நிவர்த்தியாகிவிடும்.
மூலம் 1 - ம் பாதம் மட்டும் மாமியாருக்கு ஆகாது. 2,3,4 - ம் பாதங்கள் தோஷமில்லை. ஞாயிற்றுக்கிழமை பிறந்து இருந்தால் 4 பாதங்களுக்கும் தோஷமுண்டு. ஜாதகக் கட்டத்தில் கேதுவை, குரு பார்த்தாலும், லக்னாதிபதி, ராசி அதிபதி, பார்வை பட்டாலும், நட்சத்திர தோஷம் முழுமையாக நிவர்த்தியாகிவிடும்.
பெண்கள் மூல நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் இளம் வயதிலிருந்தே ஞாயிற்றுக்கிழமை தோறும் ஒரு பிடி புற்று மண்ணை எடுத்து பன்னீரில் கலந்து உடல் முழுவதும் பூசி அரை மணிநேரம் கழித்து குளித்து விட்டால், மூல நட்சத்திர தோஷம் நிவர்த்தியாகிவிடும்

Sunday, 21 June 2015

தலையெழுத்தை மாற்றும் பிரம்மா:

          ஆடுவதும், ஆட்டுவிப்பதும், கூட்டுவதும், கூட்டிக்கழிப்பதும், காட்டுவதும், காட்டி மறைப்பதும், ஈசன் எழுதிய திருவேட்டின் படிதான். அதாவது விதியை யாராலும் மாற்ற முடியாது. பிரம்மா தீர்மானித்த படிதான் எல்லாம் நடக்கும். உங்கள் ஜாதகத்தை எத்தனை ஜோதிடர்களிடம் காண்பித்து பலன் கேட்டாேலும், அவர்கள் சொன்ன பலன் நடக்கவில்லையென்றால் அது ஜோதிடர்களின் தவறில்லை. உங்கள் ஜாதகத்தில் 5-ம் பாவமும், 9-ம் பாவமும், பாவக்கிரகங்களின் சேர்க்கையில இருந்தாலும், பார்வையில் இருந்தாலும், உங்கள் ஜாதகம் வலிமையிழந்துவிடும். உங்கள் ஜாதகம் அப்படி அமைந்திருந்தால் நீங்கள் செய்ய வேண்டிய முதல் பரிகாரம் இதுதான்.
கரூர் மாவட்டம், ஈரோடு செல்லும் வழியில் கொடுமுடி என்ற ஊரில் பிரம்மா, விஷ்ணு, சிவன், கோயில் கொண்டுள்ள மகுடேஸ்வரர் ஆலயம் உள்ளது. ஒரு திங்கள்கிழமை அங்குசென்று முதலில் அங்கு ஓடும் காவிரி ஆற்றின் அருகில் ஆண், பெண் உருவம் பதித்த பொம்மைகள் விற்கும். ஆணாகயிருந்தால் ஆண் பொம்மையும், பெண்ணாக இருந்தால் பெண் பொம்மையும் வாங்கி, நீங்கள் அணிந்திருக்கும் ஆடையில் கட்டி ஆற்றில் இறங்கி மூன்று முறை மூழ்கிவிட்டு அந்த ஆடைகளை அப்படியே ஆற்றில் விட்டு விடவும். 

            பின்னர் வேறு உடைகளை அணிந்து கொண்டு நேராக 2000- ஆண்டு பழமை வாய்ந்த வன்னி மரத்தடியில் பிரம்மா இருப்பார். அங்கு சென்று உங்கள் பெயரை மட்டும் சொல்லி அர்ச்சனை செய்யவும். இராசி, நட்சத்திரம் செல்லக்கூடாது. பின்னர் கோவிலை வலம் வரும்போது சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த பரிகாரம் செய்துவிட்டால் பின்னர் எப்போதும் சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்கக்கூடாது. அர்ச்சனை செய்யலாம், நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம். இவ்வாறு பரிகாரம் செய்தால் முன்னோர்கள் வழியில் ஏழு தலைமுறைக்கு உண்டான சாப தோஷங்கள், பிதுர் சாபங்கள், மாதுர் சாபங்கள், பிரேத சாபங்கள், ஆகியவை நீங்கி வளமான வாழ்க்கை அமையும்.








சிவ! சிவ! 
பிரதோஷத்தின் மகிமைகள்:

       
ஒரு நதியில் நாம் நிற்கும்பொழுது ஒரு கணம் நம்மைத் தொடும் நீர் அடுத்த கணம் அங்கு இருப்பதில்லை. அதைப் போலத்தான் கால வெள்ளத்தில் சுகமும், துக்கமும்.

      குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு, கேது பெயர்ச்சி, ஒவ்வொரு பெயர்ச்சிக்கும் பயப்படத் தேவையில்லை. உங்கள் ஜாதகத்தில் குரு இருக்குமிடத்திலிருந்து 2,5,7,9,11-ல் குரு வந்தாலும், சனி, ராகு, கேது இருக்குமிடத்திலிருந்து 3,6,11 -ல் சனி, ராகு, கேது வந்தாலும் நன்மைதான். மேலும் உங்கள் லக்னத்திற்கும், இராசிக்கு‌ம் இவை பொருந்தும். 
வினைப் பலனைவிட, விதிப்பலன் நன்றாக இருந்தால் எல்லா நேரமும் நல்ல நேரம்தான். அப்படி எல்லா நேரமும் நல்ல நேரமாக அமைய ஏழு கிழமைக்குரிய பிரதோஷம், 12 இராசிகளுக்கு‌ரிய பிரதோஷம், 15 திதிக்குரிய பிரதோஷம், 27 நட்சத்திரத்திற்குரிய பிரதோஷம், ஓராண்டுக்கு பிரதோஷ தரிசனம் செய்தால், 60 ஆண்டுகள் பிரதோஷ தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும். இப்படி பிரதோஷ தரிசனம் செய்வதால் எந்த கிரகப் பெயர்ச்சியும் எந்தவிதமான பாதகத்தையும் செய்யாது. நம்புங்கள் நல்லதே நடக்கும்.
சிவ! சிவ!
உங்கள் வாழ்க்கையில் பில்லி, சூனியம், ஏவல் பாதிப்பா?

இன்றைய மக்களின் மனம் அவரவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், கஷ்டங்களுக்கு யாரேனும் நமக்கு பில்லி, சூனியம், வைத்திருப்பார்களோ என்று தான் முதலில் சந்தேகப்படுகிறது. இந்த சந்தேகங்களுக்கு காரணம் என்னவென்றால் கோச்சாரத்தில் சனிபகவான், உங்கள் ஜனன கால ஜாதகத்தில் லக்னம், இராசியைப் பார்த்தாலும், ஏழரைச் சனி, அஷ்டமத்து சனி, நடந்தாலும் இந்த குழப்பம் வரும். இதற்கு ஒரே தீர்வு விழுப்புரம் அருகிலுள்ள பூவரசங்குப்பத்திலுள்ள நரசிம்மர் கோயில்தான். மாதத்தில் சுவாதி நட்சத்திரம் வரும் நாளில் அந்த கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி, நரசிம்மர் படம் வாங்கி அர்ச்சனை செய்து உங்கள் வீட்டில் அந்த படத்தை வைத்து சனிக்கிழமை தோறும் நெய் தீபம் ஏற்றி, பானகம் நிவேதனம் செய்து வந்தால் பில்லி, ஏவல், சூனிய பாதிப்புகள் நீண்ட நாள் நோய்நொடித் தொல்லைகள், தீராத கடன் பிரச்சனைகள் ஆகிய யாவும் அகலும் என்பது உறுதி.
உங்கள் வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளதா?

உங்கள் இல்லத்தில் எப்பொழுதும் சண்டை, சச்சரவு, பொருளாதார நெருக்கடி, நோய்நொடி தொந்தரவு, இப்படி ஏதாவது ஒரு பாதிப்பு இருந்தால், உங்கள் மனையில் ஏதோ ஒரு வாஸ்து குறைபாடு உள்ளது. அப்படி ஏதேனும் இருந்தால் உங்கள் வீட்டு வாசற்படியிலிருந்து மனையின் இடதுபக்கம் பவழமல்லி செடி ஒன்றை வாங்கி புதன்கிழமை அன்று நடவும்.
நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் வெண்கடுகு 100 கிராம் வாங்கி செவ்வாய்க்கிழமை அன்று மஞ்சள் துணியில் கட்டி நிலைவாசலில் தொங்கவிடவும். செவ்வாய்க்கிழமை தோறும் குங்குலியப் புகைப்போட்டால் எல்லா விதமான வாஸ்து குறைபாடுகளும் நீங்கிவிடும்.